கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
மற்றவர்கள் உங்களைப் புகழும்போது மனத்தாழ்மையாக இருங்கள்
சிலசமயங்களில் மற்றவர்கள் நம்மை புகழலாம் அல்லது பாராட்டலாம். சரியான காரணத்துக்காக மற்றவர்கள் நம்மை உண்மையாகப் பாராட்டும்போது நமக்கு உற்சாகம் கிடைக்கும். (நீதி 15:23; 31:10, 28) ஆனால், பாராட்டுகள் வரும்போது தலைக்கனம் அடையாமலும், மற்றவர்களைவிட நம்மை உயர்ந்தவர்களாக கருதாமலும் இருக்க ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும்.
இயேசுவைப் போல உண்மையாக இருங்கள்—புகழப்படும்போது என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
எந்தெந்த விஷயங்களுக்காக மற்றவர்கள் நம்மை புகழலாம்?
-
சகோதரர் ரிச்சர்டை மற்ற சகோதரர்கள் எப்படிப் பாராட்டினார்கள்?
-
அவர்களுடைய பாராட்டு எப்படி அளவுக்கு மீறி போனது?
-
ரிச்சர்ட் மனத்தாழ்மையாகப் பதில் சொன்னதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?