Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

கேள்வி 1

கடவுள் யார்?

“யெகோவா என்ற பெயருள்ள நீங்கள் ஒருவர்தான், இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்.”

சங்கீதம் 83:18

“யெகோவாதான் கடவுள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்தான் நம்மைப் படைத்தார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள்.”

சங்கீதம் 100:3

“நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர். என்னுடைய மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன். என்னுடைய புகழை எந்தச் சிலைக்கும் கொடுக்க மாட்டேன்.”

ஏசாயா 42:8

“யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.”

ரோமர் 10:13

“உண்மைதான், ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே.”

எபிரெயர் 3:4

“வானத்தை அண்ணாந்து பாருங்கள். அங்கே இருக்கும் நட்சத்திரங்களைப் படைத்தது யார்? அவற்றை ஒவ்வொன்றாக எண்ணி ஒரு படைபோல் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிற கடவுள்தான் அவர். அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார். அவருடைய அபாரமான ஆற்றலினாலும் பிரமிக்க வைக்கிற பலத்தினாலும், அவற்றில் ஒன்றுகூட குறையாமல் இருக்கிறது.”

ஏசாயா 40:26