கேள்வி 2
கடவுளைப் பற்றி எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
“இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டே இரு. அதில் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் கவனமாய்க் கடைப்பிடிப்பதற்காக ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் அதை வாசி. அப்போதுதான் வாழ்க்கையில் உனக்கு வெற்றி கிடைக்கும், நீ ஞானமாகவும் நடப்பாய்.”
“எஸ்றாவும் லேவியர்களும் உண்மைக் கடவுளுடைய திருச்சட்ட புத்தகத்திலிருந்து சத்தமாக வாசித்து, அதைத் தெளிவாக விளக்கி, அதன் அர்த்தத்தை ஜனங்களின் மனதில் பதிய வைத்தார்கள். வாசிக்கப்பட்ட விஷயங்களை எல்லாரும் புரிந்துகொள்வதற்கு உதவி செய்தார்கள்.”
‘பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமல் இருக்கிறவன் சந்தோஷமானவன். . . . அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான். அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான். . . . அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.’
“பிலிப்பு அந்த ரதத்தோடு சேர்ந்து ஓடியபோது, ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை அந்த அதிகாரி சத்தமாக வாசித்துக்கொண்டிருப்பதைக் கேட்டார்; அப்போது அவரிடம், ‘நீங்கள் வாசிப்பது உங்களுக்குப் புரிகிறதா?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘ஒருவர் கற்றுக்கொடுக்காவிட்டால் எனக்கு எப்படிப் புரியும்?’ என்று சொன்னார்.”
“பார்க்க முடியாத அவருடைய குணங்களை, அதாவது நித்திய வல்லமை, கடவுள்தன்மை ஆகியவற்றை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அதனால், அவர்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது.”
“இவற்றைப் பற்றியே ஆழமாக யோசித்துக்கொண்டிரு; இவற்றிலேயே மூழ்கியிரு; அப்போதுதான் உன்னுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெளிவாகத் தெரியவரும்.”
‘அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்; சபைக் கூட்டங்களுக்கு வராமல் இருந்துவிடக் கூடாது.’
“உங்களில் ஒருவனுக்கு ஞானம் குறைவாக இருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; அப்படிக் கேட்கிறவர்களை அவர் திட்ட மாட்டார். எல்லாருக்கும் தாராளமாகக் கொடுக்கிற கடவுள் அவனுக்கும் கொடுப்பார்.”