“உலகை கவனித்தல்” பள்ளிக்கு போகிறது
“உலகை கவனித்தல்” பள்ளிக்கு போகிறது
ஐக்கிய மாகாணங்களில் வாழும் எடெல்மிரா என்ற 15 வயது பெண் பள்ளியில் விழித்தெழு! பத்திரிகையை நன்கு பயன்படுத்தினாள். பிரசுரிப்போருக்கு எழுதிய கடிதத்தில் அவள் இவ்வாறு கூறினாள்:
“ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடப்பு சம்பவங்களைப் பற்றி வகுப்பில் அறிக்கை செய்ய வேண்டிய நியமிப்பு எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் ஏப்ரல் 22, 2000 விழித்தெழு! பத்திரிகையிலுள்ள ‘உலகை கவனித்தல்’ பகுதியில் ‘புகையிலையால் கேன்ஸர்—ஒப்புக்கொள்ளும் கம்பெனி’ என்ற தலைப்பிலிருந்த துணுக்குச் செய்தியை வாசித்து, என்னுடைய அறிக்கையில் அதை பயன்படுத்த தீர்மானித்தேன். நான் ஒரு கட்டுரையை எழுதி, அதை வகுப்பில் வாசித்தேன். ஆசிரியரும் மாணவர்களும் கூர்ந்து கவனித்தார்கள். நான் முடித்தபோது, இந்தத் தகவலை கண்டுபிடிப்பதற்கு எனக்கு நீண்ட காலம் எடுத்ததா என்று என்னுடைய தோழி எல்லார் முன்னிலையிலும் வகுப்பில் கேட்டாள். அந்த விழித்தெழு! பிரதியை அவளிடம் கொடுத்தேன், அவள் அதை ஆர்வத்தோடு வாசிக்க ஆரம்பித்தாள். அவளோடு அடுத்த வகுப்பில் படிக்கும் என் சபையை சேர்ந்த பையன், தான் பார்த்தபோது அவள் இன்னமும் அதை வாசித்துக்கொண்டிருந்ததாக என்னிடம் சொன்னான். இப்பொழுது, விழித்தெழு! மற்றும் அதோடு வெளிவரும் காவற்கோபுரம் பத்திரிகையின் ஒவ்வொரு இதழையும் பெற்றுக்கொள்ள விரும்புவதாக அவள் கூறுகிறாள்.
“இந்த அனுபவம் நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்று சொல்லிக்கொள்வதில் என்னை பெருமிதம் கொள்ளச் செய்தது. யெகோவாவைப் பற்றி பேசுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இது எனக்கு கற்பித்தது.” எடெல்மிரா இவ்வாறு தன்னுடைய கடிதத்தை முடிக்கிறாள்: “இந்தப் பத்திரிகைகளைத் தயாரிக்க நீங்கள் எடுக்கும் கடின முயற்சிக்கு என்னுடைய நன்றி. ‘உலகை கவனித்தல்’ பகுதியை தயவுசெய்து தொடர்ந்து பிரசுரியுங்கள்!”(g01 5/8)