யோவானின் மூன்றாம் கடிதம் 1:1-14

 அன்புள்ள காயுவுக்கு, உன்மேல் உண்மையாகவே பிரியமாயிருக்கும் மூப்பராகிய* நான் எழுதுவது:  அன்புள்ள சகோதரனே, நீ இப்போது வளமாக வாழ்வதுபோல் எல்லா வளமும் பெற்று நலமாக வாழ வேண்டும் என்று ஜெபம் செய்கிறேன்.  நீ சத்தியத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறாய் என்று சகோதரர்கள் வந்து சாட்சி சொன்னபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். நீ தொடர்ந்து சத்தியத்தில் நடப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.+  என் பிள்ளைகள் தொடர்ந்து சத்தியத்தில் நடக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது ஏற்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம்* எனக்கு வேறு எதுவும் இல்லை.+  அன்புள்ள சகோதரனே, சகோதரர்களுக்காக, அதுவும் முன்பின் தெரியாத சகோதரர்களுக்காக, நீ எல்லாவற்றையும் உண்மை மனதோடு செய்கிறாய்.+  உன் அன்பைப் பற்றிச் சபைக்கு முன்பாக அவர்கள் சாட்சி சொன்னார்கள். தயவுசெய்து அவர்களைக் கடவுளுக்குப் பிரியமான விதத்தில் வழியனுப்பி வை.+  ஏனென்றால், கடவுளுடைய பெயருக்காக அவர்கள் புறப்பட்டு வந்திருக்கிறார்கள். உலக மக்களிடமிருந்து எதையும் வாங்கிக்கொள்ளவில்லை.+  அதனால், அப்படிப்பட்டவர்களை வரவேற்று உபசரிக்கும் கடமை நமக்கு இருக்கிறது.+ நாம் அவர்களை உபசரிக்கும்போது, சத்தியத்துக்காக உழைக்கிற சக வேலையாட்களாக இருப்போம்.+  சபைக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். ஆனால், சபையில் முதலிடம் பெறத் துடிக்கிற+ தியோத்திரேப்பு, நாங்கள் சொல்லும் எதையுமே மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதில்லை.+ 10  அதனால், நான் அங்கே வந்தால், அவன் செய்துவருகிற காரியங்களையெல்லாம் சொல்வேன். அவன் எங்களைப் பற்றிப் படுமோசமாகப் பேசிக்கொண்டு திரிகிறான்.+ அது போதாதென்று, அங்கே வருகிற சகோதரர்களை அவன் மரியாதையுடன் வரவேற்கவும் மறுக்கிறான்.+ அப்படி வரவேற்க விரும்புகிறவர்களைத் தடுப்பதற்கும் சபையிலிருந்து நீக்குவதற்கும் பார்க்கிறான். 11  அன்புள்ள சகோதரனே, கெட்டதை அல்ல, நல்லதையே பின்பற்று.+ நல்லதைச் செய்கிறவன் கடவுளின் பக்கம் இருக்கிறான்.+ கெட்டதைச் செய்கிறவனோ கடவுளைப் பார்த்ததில்லை.+ 12  தேமேத்திரியுவைப் பற்றி எல்லா சகோதரர்களும் உயர்வாகப் பேசியிருக்கிறார்கள், சத்தியத்தின்படி அவர் வாழ்கிற விதமும் இது உண்மை என்று நிரூபித்திருக்கிறது; அவரைப் பற்றி எங்களுக்கும் நல்ல அபிப்பிராயம் இருக்கிறது. நாங்கள் சொல்வது உண்மை என்று உனக்கே தெரியும். 13  நான் உனக்கு எழுத வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருந்தாலும், அவற்றை எழுதுகோலினாலும் மையினாலும் எழுத விரும்பவில்லை. 14  சீக்கிரத்தில் உன்னை நேரில் சந்தித்துப் பேச ஆவலாக இருக்கிறேன். உனக்குச் சமாதானம் கிடைக்கட்டும். இங்கே இருக்கிற நண்பர்கள் உனக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள். அங்கே இருக்கிற நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் வாழ்த்துக்களைச் சொல்லவும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “வயதில் பெரியவராகிய.”
அல்லது, “நன்றியுணர்வைவிட அதிகமான நன்றியுணர்வு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா