ஏசாயா 9:1-21

9  ஆனால், முன்பு செபுலோன் தேசத்துக்கும் நப்தலி தேசத்துக்கும் வந்த கொடிய காலத்தைப் போல அது கொடியதாக இருக்காது. அந்தத் தேசங்கள் அப்போது அற்பமாக நினைக்கப்பட்டன.+ ஆனால் பிற்காலத்தில், கடலை ஒட்டிய யோர்தான் பிரதேசத்திலே மற்ற தேசத்தார் குடியிருக்கிற கலிலேயா மாகாணத்தைக் கடவுள் உயர்த்துவார்.   இருட்டில் நடந்த ஜனங்கள்பெரிய வெளிச்சத்தைப் பார்த்தார்கள். நிழல் படிந்த கும்மிருட்டான தேசத்தில் வாழ்கிறவர்கள்மேல்வெளிச்சம் பிரகாசித்தது.+   அந்த ஜனங்களை நீங்கள் பெருக வைத்தீர்கள்.அவர்களைச் சந்தோஷத்தால் நிரப்பியிருக்கிறீர்கள். அறுவடைக் காலத்தில் சந்தோஷப்படுவதைப் போலவும்,கைப்பற்றிய பொருள்களைப் பங்கிடும்போது சந்தோஷப்படுவதைப் போலவும்,அவர்கள் உங்களுக்குமுன் சந்தோஷத்தில் துள்ளுகிறார்கள்.   ஏனென்றால், மீதியானியர்களின் காலத்தில் செய்தது போல,+அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தடியையும்,அவர்களுடைய தோளைப் புண்ணாக்கிய தடியையும்,அவர்களை வேலை வாங்கியவர்களின் கோலையும் நீங்கள் உடைத்துப் போட்டீர்கள்.   நிலம் அதிரும்படி நடந்து போகிற போர்வீரர்களின் காலணிகளும்,இரத்தத்தில் ஊறிப்போன அவர்களுடைய உடைகளும்நெருப்பில் சுட்டெரிக்கப்படும்.   நமக்காக ஒருவர் பிறந்திருக்கிறார்.+நமக்காக ஒரு மகன் கொடுக்கப்பட்டிருக்கிறார்.ஆட்சி செய்யும் அதிகாரம் அவருடைய தோளின் மேல் இருக்கும்.+ ஞானமுள்ள ஆலோசகர்,+ வல்லமையுள்ள கடவுள்,+ என்றென்றுமுள்ள* தகப்பன், சமாதானத்தின் அதிபதி என்றெல்லாம் அவர் அழைக்கப்படுவார்.   அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும்சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.+அவர் தாவீதின் சிம்மாசனத்தில் உட்காருவார்.+அதுமுதல் என்றென்றும்,நியாயத்தோடும்+ நீதியோடும்+ ஆட்சி செய்து,அதை* உறுதியாக நிலைநாட்டுவார்.+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.   யாக்கோபுக்கு எதிராக யெகோவா ஒரு செய்தி அனுப்பியிருக்கிறார்.அது இஸ்ரவேலுக்கு எதிராக வந்திருக்கிறது.+   ஜனங்கள் எல்லாரும் அதைத் தெரிந்துகொள்வார்கள்.எப்பிராயீம் ஜனங்களும் சமாரியாவின் குடிமக்களும் அதைத் தெரிந்துகொள்வார்கள்.அவர்கள் ஆணவத்தோடும் அகங்காரத்தோடும், 10  “இந்தச் செங்கல் வீடுகள் இடிந்து விழுந்தால் என்ன?செதுக்கப்பட்ட கற்களால் நாங்கள் கட்டுவோம்.+ காட்டத்தி மரங்கள் வெட்டப்பட்டால் என்ன?தேவதாரு மரங்களை நடுவோம்” என்று சொல்கிறார்கள். 11  யெகோவா ரேத்சீனின் எதிரிகளை எப்பிராயீமுக்கு எதிராக வரவழைப்பார்.அவனைத் தீர்த்துக்கட்ட அவர்களைத் தூண்டிவிடுவார். 12  கிழக்கிலிருந்து சீரியாவையும் மேற்கிலிருந்து பெலிஸ்தியர்களையும் வரச் செய்வார்.+இஸ்ரவேலர்களை அவர்கள் ஒழித்துக்கட்டுவார்கள்.+ அவர்களுடைய பாவங்களினால் அவருடைய கோபம் தணியாமல் இருக்கிறது.அவருடைய கை ஓங்கியபடியே இருக்கிறது.+ 13  ஏனென்றால், பரலோகப் படைகளின் யெகோவாவை ஜனங்கள் தேடவில்லை.அவர்களைத் தண்டிக்கிறவரிடம் மனம் திருந்தி வரவில்லை.+ 14  அதனால், யெகோவா இஸ்ரவேலின் தலையையும் வாலையும்,துளிரையும் நாணலையும்* ஒரே நாளில் அழித்துவிடுவார்.+ 15  பெரியவரும் பெருமதிப்பு பெற்றவரும்தான் தலை.பொய்யாகப் போதிக்கிற தீர்க்கதரிசிதான் வால்.+ 16  அவர்கள் ஜனங்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.மக்களும் குழப்பத்தில் தவிக்கிறார்கள். 17  தேசத்திலுள்ள வாலிபர்களைப் பார்த்து யெகோவா சந்தோஷப்பட மாட்டார்.அப்பா இல்லாத பிள்ளைகளிடமும்* விதவைகளிடமும் இரக்கம் காட்ட மாட்டார்.ஏனென்றால், அவர்கள் எல்லாருமே கடவுளைவிட்டு விலகியவர்கள்,* அக்கிரமக்காரர்கள்.+அவர்கள் ஒவ்வொருவருமே புத்தியில்லாமல் பேசுகிறார்கள். அவர்களுடைய பாவங்களினால் அவருடைய கோபம் தணியாமல் இருக்கிறது.அவருடைய கை ஓங்கியபடியே இருக்கிறது.+ 18  அவர்கள் செய்கிற அக்கிரமங்கள் தீ போலப் பரவுகிறது.அந்தத் தீ முதலில் முட்புதர்களையும் களைகளையும் கொளுத்தும். பின்பு, காட்டின் அடர்ந்த பகுதிகளைக் கொளுத்தும்.எல்லாமே புகைக்காடாகும். 19  பரலோகப் படைகளின் யெகோவாவுடைய கோபத் தீயினால்தேசம் கொளுத்தப்படும்.ஜனங்கள் நெருப்புக்குப் பலியாவார்கள். ஒருவன் தன்னுடைய சொந்த சகோதரனுக்குக்கூட இரக்கம் காட்ட மாட்டான். 20  ஒருவன் வலது பக்கத்தில் இருப்பதை அறுத்து சாப்பிடுவான்.ஆனாலும் பசியாக இருப்பான்.ஒருவன் இடது பக்கத்தில் இருப்பதைச் சாப்பிடுவான்.ஆனாலும் திருப்தியடைய மாட்டான். ஒவ்வொருவனும் தன்னுடைய கையிலுள்ள சதையையே வெட்டிச் சாப்பிடுவான். 21  மனாசே எப்பிராயீமைத் தாக்குவான்,எப்பிராயீம் மனாசேயைத் தாக்குவான். ஆனால், இரண்டு பேரும் ஒன்றுசேர்ந்து யூதாவைத் தாக்குவார்கள்.+ அவர்களுடைய பாவங்களினால் அவருடைய கோபம் தணியாமல் இருக்கிறது.அவருடைய கை ஓங்கியபடியே இருக்கிறது.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “நித்திய.”
அதாவது, “ஆட்சியை.”
அல்லது, “குருத்தோலையையும் கோரைப்புல்லையும்.”
வே.வா., “அநாதைகளிடமும்.”
வே.வா., “விசுவாசதுரோகிகள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா