ஏசாயா 31:1-9

31  குதிரைகளையும், ஏராளமான போர் ரதங்களையும்,பலமுள்ள போர்க்குதிரைகளையும்* நம்பி,+எகிப்திடம் உதவி கேட்டுப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு!+அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளிடம் உதவி கேட்பதில்லை. யெகோவாவைத் தேடுவதில்லை.   அவர்களைவிட அவர் ஞானமுள்ளவர்.அவர் அழிவைக் கொண்டுவருவார். சொன்ன சொல்லை மாற்ற மாட்டார்.தப்பு செய்கிறவர்களையும் அவர்களுக்கு உதவுகிறவர்களையும் தண்டிப்பார்.+   எகிப்தியர்கள் கடவுள் கிடையாது, அவர்கள் சாதாரண மனிதர்கள்தான்.அவர்களுடைய குதிரைகளுக்கு எந்த விசேஷ சக்தியும் கிடையாது,+ அவை சாதாரண மிருகங்கள்தான். யெகோவா அவருடைய கையை ஓங்கும்போதுஉதவி செய்கிறவர்கள் வீழ்ச்சி அடைவார்கள்,உதவி பெறுகிறவர்களும் வீழ்ச்சி அடைவார்கள்.அவர்கள் எல்லாரும் ஒரே சமயத்தில் அழிந்துபோவார்கள்.   யெகோவா என்னிடம், “பலமான இளம் சிங்கம் இரையைப் பிடிக்கும்போது,அதைத் துரத்த மேய்ப்பர்கள் கூட்டமாக வந்தாலும்,அவர்களுடைய சத்தத்துக்கு அது பயப்படாது.அவர்கள் போடும் கூச்சலைக் கேட்டு நடுங்காது; அவர்களைப் பார்த்து கர்ஜிக்கும்.அதேபோல் பரலோகப் படைகளின் யெகோவா, சீயோன் மலைக்காகவும் அதன் குன்றுக்காகவும்பரலோகத்திலிருந்து இறங்கி வந்து போர் செய்வார்.   குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காகப் பறந்து வரும் பறவையைப் போல், எருசலேமைக் காப்பாற்றுவதற்காக பரலோகப் படைகளின் யெகோவா வருவார்.+ அவளை விடுவித்துக் காப்பாற்றுவார், அழிந்துபோகாதபடி பாதுகாப்பார்” என்று சொன்னார்.  “கொஞ்சமும் அடங்காமல் என் பேச்சை மீறி நடந்த இஸ்ரவேல் ஜனங்களே, என்னிடம் திரும்பி வாருங்கள்.+  அந்த நாளில், நீங்கள் செய்த பாவத்தை உணர்வீர்கள்; வெள்ளியிலும் தங்கத்திலும் நீங்கள் உருவாக்கிய ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை வீசி எறிவீர்கள்.   அசீரியர்கள் வாளால் வீழ்த்தப்படுவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளால் அல்ல.அவர்கள் வாளுக்குப் பலியாவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளுக்கு அல்ல.+ அவர்கள் வாளைக் கண்டு பயந்து ஓடுவார்கள்.வாலிபர்கள் கொத்தடிமைகள்போல் ஆவார்கள்.   அவர்கள் எதை மலைபோல் நம்பியிருந்தார்களோ அது ஆடிப்போகும்; இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகும்.கொடிக் கம்பத்தைப் பார்த்து அவர்களுடைய அதிபதிகள் நடுங்கிப்போவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.அவருடைய வெளிச்சம்* சீயோனிலும், அவருடைய சூளை எருசலேமிலும் இருக்கிறது.

அடிக்குறிப்புகள்

வே.வா., “குதிரை வீரர்களையும்.”
வே.வா., “நெருப்பு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா