Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

1 யோவான் 3:1-24

முக்கியக் குறிப்புகள்

  • நாம் கடவுளின் பிள்ளைகள் (1-3)

  • கடவுளின் பிள்ளைகளும் பிசாசின் பிள்ளைகளும் (4-12)

    • பிசாசின் செயல்களை இயேசு ஒழிப்பார் (8)

  • ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள் (13-18)

  • கடவுள் நம் இதயத்தைவிட உயர்ந்தவர் (19-24)

3  நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம் என்றால், பரலோகத் தகப்பன் எந்தளவுக்கு நம்மேல் அன்பு காட்டியிருக்கிறார் என்று பாருங்கள்!+ நாம் அவருடைய பிள்ளைகளாகவே இருக்கிறோம்.+ இந்த உலகம் அவரைப் பற்றித் தெரியாமல் இருப்பதால்தான்+ நம்மைப் பற்றியும் தெரியாமல் இருக்கிறது.+  அன்புக் கண்மணிகளே, நாம் இப்போது கடவுளுடைய பிள்ளைகளாக இருக்கிறோம்.+ ஆனால், இனி நாம் எந்த விதத்தில் இருப்போம் என்பது இன்னும் நமக்கு வெளிப்படுத்தப்படவில்லை.+ இருந்தாலும், அவர் வெளிப்படும்போது நாம் அவரைப் போலவே இருப்போம் என்பது நமக்குத் தெரியும். ஏனென்றால், அவர் எந்த விதத்தில் இருக்கிறாரோ அந்த விதத்திலேயே அவரைப் பார்ப்போம்.  இந்த நம்பிக்கையோடு இருக்கிற ஒவ்வொருவனும், அவர் சுத்தமாக இருப்பதைப் போலவே தன்னையும் சுத்தமாக்கிக்கொள்கிறான்.+  பாவம் செய்துகொண்டே இருக்கிற ஒவ்வொருவனும் சட்டத்தை மீறி நடக்கிறான். சட்டத்தை மீறுவதுதான் பாவம்.  நம்முடைய பாவங்களைப் போக்குவதற்காகக் கிறிஸ்து வந்தார்+ என்றும் உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவமே இல்லை.  அவரோடு ஒன்றுபட்டிருக்கிற யாரும் பாவம் செய்துகொண்டே இருப்பதில்லை;+ பாவம் செய்துகொண்டே இருக்கிற யாரும் அவரைப் பார்த்ததும் இல்லை, அவரைப் பற்றித் தெரிந்துகொண்டதும் இல்லை.  சின்னப் பிள்ளைகளே, நீங்கள் யாரிடமும் ஏமாந்துவிடாதீர்கள். நீதியான செயல்களைச் செய்துகொண்டே இருக்கிறவன், அவர் நீதியுள்ளவராக இருப்பதைப் போலவே தானும் நீதியுள்ளவனாக இருக்கிறான்.  பாவம் செய்துகொண்டே இருக்கிறவன் பிசாசின் பக்கம் இருக்கிறான்; ஏனென்றால், பிசாசு ஆரம்பத்திலிருந்தே பாவம் செய்துவந்திருக்கிறான்.+ பிசாசின் செயல்களை ஒழிப்பதற்காகத்தான் கடவுளுடைய மகன் வந்தார்.+  கடவுளுடைய பிள்ளையாக இருக்கிற யாரும் பாவம் செய்துகொண்டே இருப்பதில்லை.+ ஏனென்றால், கடவுளுடைய சக்தி* அப்படிப்பட்டவனில் நிலைத்திருக்கிறது; அவன் கடவுளுடைய பிள்ளையாக+ இருப்பதால் அவனால் பாவம் செய்துகொண்டே இருக்க முடியாது. 10  நீதியான செயல்களைச் செய்துகொண்டே இருக்காத யாரும் கடவுளின் பக்கம் இல்லை. அதேபோல், தன் சகோதரன்மேல் அன்பு காட்டாத யாரும் கடவுளின் பக்கம் இல்லை.+ கடவுளுடைய பிள்ளைகள் யார் என்றும், பிசாசின் பிள்ளைகள் யார் என்றும் இந்த உண்மையிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். 11  நாம் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்து நீங்கள் கேட்ட செய்தி.+ 12  பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன;+ ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன.+ 13  சகோதரர்களே, இந்த உலகம் உங்களை வெறுப்பதைப் பார்த்து ஆச்சரியப்படாதீர்கள்.+ 14  சகோதரர்கள்மேல் நாம் அன்பு காட்டுவதால்,+ இறந்தவர்களைப் போல் இருந்த நாம் இப்போது உயிர் வாழ்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.+ அன்பு காட்டாதவன் இறந்தவனைப் போல் இருக்கிறான்.+ 15  தன் சகோதரனை வெறுக்கிற ஒவ்வொருவனும் கொலைகாரன்தான்.+ கொலைகாரன் எவனுக்கும் முடிவில்லாத வாழ்வு இல்லை+ என்பது உங்களுக்குத் தெரியும். 16  அவர் நமக்காகத் தன்னுடைய உயிரைக் கொடுத்ததால் அன்பு என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொண்டோம்;+ நாமும் நம் சகோதரர்களுக்காக நம்முடைய உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.+ 17  ஆனால், இந்த உலகத்தில் பொருள் வசதிகள் உள்ளவன் தன்னுடைய சகோதரன் வறுமையில் வாடுவதைப் பார்த்தும், அவன்மேல் கரிசனை காட்ட மறுத்தால் கடவுள்மேல் அவனுக்கு அன்பு இருக்கிறதென்று எப்படிச் சொல்ல முடியும்?+ 18  சின்னப் பிள்ளைகளே, உங்களுடைய சொல்லில் மட்டுமல்ல,+ செயலிலும் அன்பு காட்ட வேண்டும்,+ அதை உண்மை மனதோடு காட்ட வேண்டும்.+ 19  இதன் மூலம்தான், நாம் சத்தியத்தின் பக்கம் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்வோம். 20  எந்தக் காரணத்துக்காவது நம்முடைய இதயம் நம்மைக் கண்டனம் செய்யும்போது, கடவுள் நம்மைக் கண்டனம் செய்வதில்லை என்று நம் இதயத்துக்கு உறுதி அளித்துக்கொள்ளலாம்.* ஏனென்றால், கடவுள் நம் இதயத்தைவிட உயர்ந்தவராக இருக்கிறார், எல்லாவற்றையும் தெரிந்தவராகவும் இருக்கிறார்.+ 21  அன்புக் கண்மணிகளே, நம்முடைய இதயம் நம்மைக் கண்டனம் செய்யவில்லை என்றால், கடவுளிடம் நாம் தயக்கமில்லாமல் பேச முடியும்.+ 22  அதோடு, நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குத் தருவார்.+ ஏனென்றால், நாம் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்குப் பிரியமான காரியங்களைச் செய்துவருகிறோம். 23  உண்மையில் இதுதான் அவருடைய கட்டளை: அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் நாம் விசுவாசம் வைத்து,+ அவர் நமக்குக் கட்டளை கொடுத்தபடியே ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும்.+ 24  அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் அவரோடு ஒன்றுபட்டிருக்கிறான். அப்படிப்பட்டவனோடு அவரும் ஒன்றுபட்டிருக்கிறார்.+ அவர் நம்மோடு ஒன்றுபட்டிருக்கிறார்+ என்பதை அவர் நமக்குத் தந்த சக்தியால் தெரிந்துகொள்கிறோம்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “கடவுளுடைய விதை.” அதாவது, கனி தரக்கூடிய விதை.
வே.வா., “இதயத்தை நம்ப வைக்கலாம்.”