Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

1 தீமோத்தேயு 4:1-16

முக்கியக் குறிப்புகள்

  • பேய்களின் போதனைகளுக்கு எதிராக எச்சரிக்கை (1-5)

  • இயேசுவின் சிறந்த ஊழியனாக இருப்பது எப்படி (6-10)

    • உடற்பயிற்சியும் கடவுள்பக்தியும் (8)

  • உன் போதனையின் மீது கவனம் செலுத்து (11-16)

4  ஆனாலும், கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கிற செய்தியின்படி, நிச்சயமாகவே பிற்காலத்தில் சிலர் பேய்களிடமிருந்து வருகிற வஞ்சனையான செய்திகளுக்கும்+ போதனைகளுக்கும் கவனம் செலுத்தி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்;  மரத்துப்போன* மனசாட்சியுள்ள பொய்யர்களுடைய வெளிவேஷத்தை நம்பியும் விலகிப்போவார்கள்.+  திருமணம் செய்யக் கூடாதென்றும்,+ சில உணவுகளுக்கு விலகியிருக்க வேண்டுமென்றும்+ அந்தப் பொய்யர்கள் சொல்வார்கள். ஆனால், விசுவாசமுள்ளவர்களும் சத்தியத்தைத் திருத்தமாகத் தெரிந்தவர்களும் நன்றி சொல்லிச் சாப்பிடுவதற்காகத்தான்+ கடவுள் அந்த உணவுகளைப் படைத்திருக்கிறார்.+  கடவுளுடைய ஒவ்வொரு படைப்பும் நல்லதுதான்;+ நன்றி சொல்லி ஏற்றுக்கொண்டால் எதையும் ஒதுக்க வேண்டியதில்லை.+  ஏனென்றால், அது கடவுளுடைய வார்த்தையின் மூலமாகவும் ஜெபத்தின் மூலமாகவும் புனிதமாக்கப்படுகிறது.  சகோதரர்களுக்கு நீ இந்த அறிவுரையைக் கொடுத்தால் கிறிஸ்து இயேசுவின் சிறந்த ஊழியனாக இருப்பாய்; விசுவாசத்துக்குரிய வார்த்தைகளாலும், நீ நெருக்கமாகப் பின்பற்றி வந்திருக்கிற சிறந்த போதனைகளாலும் ஊட்டம் பெற்றவனாக இருப்பாய்.+  கடவுளை அவமதிக்கிற கட்டுக்கதைகளை, அதாவது கிழவிகள் சொல்வது போன்ற கட்டுக்கதைகளை, ஒதுக்கித்தள்ளு.+ அதற்குப் பதிலாக, கடவுள்பக்தி காட்டுவதைக் குறிக்கோளாக வைத்து உனக்கு நீயே பயிற்சி கொடுத்துக்கொள்.  உடற்பயிற்சி ஓரளவுக்கு நன்மை தரும்; ஆனால், கடவுள்பக்தி எல்லா விதத்திலும் நன்மை தரும். ஏனென்றால், இந்தக் காலத்திலும் இனிவரும் காலத்திலும் வாழ்வு பெறுவோம் என்ற வாக்குறுதியை அது தருகிறது.+  இந்த விஷயம் நம்பகமானது, முழுமையாக ஏற்றுக்கொள்வதற்குத் தகுதியானது. 10  அதனால்தான், கடினமாகவும் தீவிரமாகவும் உழைத்து வருகிறோம்.+ ஏனென்றால், எல்லா விதமான ஆட்களுக்கும்+ மீட்பராயிருக்கிற, முக்கியமாக விசுவாசமுள்ள ஆட்களுக்கு மீட்பராயிருக்கிற, உயிருள்ள கடவுள்மேல்+ நம்பிக்கை வைத்திருக்கிறோம். 11  இவை எல்லாவற்றையும் நீ அவர்களுக்குக் கட்டளையிட்டுக்கொண்டும் கற்றுக்கொடுத்துக்கொண்டும் இரு. 12  நீ இளைஞனாக இருப்பதால் யாரும் உன்னை அற்பமாக நினைக்காதபடி பார்த்துக்கொள். பேச்சிலும், நடத்தையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், ஒழுக்கத்திலும் உண்மையுள்ளவர்களுக்கு நீ முன்மாதிரியாக இரு. 13  நான் வரும்வரை, சபையார் முன்னால் வாசிப்பதிலும்,+ அவர்களுக்கு அறிவுரை சொல்வதிலும்,* கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபட்டுக்கொண்டிரு. 14  உன்னைப் பற்றிச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்துக்கு ஏற்ப, மூப்பர் குழுவினர் உன்மேல் கைகளை வைத்தபோது+ கடவுள் உனக்குக் கொடுத்த வரத்தை அலட்சியம் செய்யாதே. 15  இவற்றைப் பற்றியே ஆழமாக யோசித்துக்கொண்டிரு;* இவற்றிலேயே மூழ்கியிரு; அப்போதுதான் உன்னுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெளிவாகத் தெரியவரும். 16  உன் மீதும் உன் போதனையின் மீதும் எப்போதும் கவனம் செலுத்து.+ இவற்றிலேயே நிலைத்திரு; இப்படிச் செய்யும்போது நீயும் மீட்புப் பெறுவாய், நீ சொல்வதைக் கேட்கிறவர்களும் மீட்புப் பெறுவார்கள்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “காய்ச்சிய கம்பியால் தழும்புண்டான.”
வே.வா., “அவர்களை உற்சாகப்படுத்துவதிலும்.”
வே.வா., “தியானித்துக்கொண்டிரு.”