Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

யோபு 19:1-29

முக்கியக் குறிப்புகள்

  • யோபுவின் பதில் (1-29)

    • “நண்பர்கள்” கண்டித்துப் பேசுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் (1-6)

    • தான் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகச் சொல்கிறார் (13-19)

    • “என்னை மீட்கிறவர் உயிரோடு இருக்கிறார்” (25)

19  அதற்கு யோபு,   “இன்னும் எவ்வளவு நேரம்தான் என் உயிரை வாங்குவீர்கள்?+ பேசிப் பேசியே என்னைக் கொல்கிறீர்களே.+   ஒரு தடவைக்குப் பத்துத் தடவை என்னைக் கேவலமாகப் பேசிவிட்டீர்கள். கொஞ்சம்கூட ஈவிரக்கமில்லாமல் நடந்துகொள்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?+   அப்படியே நான் தப்பு செய்திருந்தாலும் என்ன? அந்தப் பழியை நான்தானே சுமக்கப்போகிறேன்?   என்னைவிட நீங்கள்தான் ரொம்ப யோக்கியம் என்று நினைக்கிறீர்கள். ‘நீ செய்த தப்புக்குத்தான் நன்றாக அனுபவிக்கிறாய்’ என்று சொல்கிறீர்கள்.   ஆனால் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்; கடவுள்தான் எனக்கு மோசம் செய்துவிட்டார். என்னை வலை விரித்துப் பிடித்துவிட்டார்.   ‘கொடுமை தாங்க முடியவில்லையே!’ என்று கதறுகிறேன், ஆனால் பதிலே இல்லை.+ உதவிக்காகக் கதறுகிறேன், ஆனால் நியாயம் கிடைத்த பாடில்லை.+   நான் தாண்டிப்போக முடியாதபடி அவர் என் வழியைக் கற்சுவரால் அடைத்துவிட்டார். என் பாதைகளையெல்லாம் இருட்டாக்கிவிட்டார்.+   என் கௌரவத்தைப் பறித்துவிட்டார். என் தலையிலுள்ள கிரீடத்தை எடுத்துவிட்டார். 10  நான் செத்தால் போதும் என்று எல்லா பக்கத்திலிருந்தும் தாக்குகிறார். என் நம்பிக்கையை வேரோடு பிடுங்குகிறார். 11  கோபத்தில் என்னைப் பொசுக்குகிறார். எதிரிபோல் என்னைப் பார்க்கிறார்.+ 12  அவருடைய படைகள் திரண்டு வந்து என்னை வளைத்துக்கொள்கின்றன. என் கூடாரத்தைச் சுற்றி முகாம்போடுகின்றன. 13  என் அண்ணன் தம்பிகளையே என்னிடம் அண்ட விடாமல் செய்துவிட்டார். பழக்கமானவர்கள் என் பக்கத்தில்கூட வருவதில்லை.+ 14  ஒட்டி உறவாடியவர்கள்* ஒதுங்கிவிட்டார்கள். எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள்கூட என்னைச் சுத்தமாக மறந்துவிட்டார்கள்.+ 15  என் வீட்டு விருந்தாளிகளும்+ வேலைக்காரிகளும் என்னை வெளியாளாக நினைக்கிறார்கள். யாரோ எவரோ என்பதுபோல் பார்க்கிறார்கள். 16  வேலைக்காரனை நான் கூப்பிட்டாலும், அவன் கண்டுகொள்வதே இல்லை. உதவிக்காக அவனிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டியிருக்கிறது. 17  என்னுடைய மூச்சுக்காற்று பட்டால்கூட என் மனைவி ஒதுங்கிப் போகிறாள்.+ என் அண்ணன் தம்பிகளே என்னை அருவருக்கிறார்கள். 18  சின்னப் பிள்ளைகளுக்குக்கூட என்னைப் பார்த்தால் கேவலமாக இருக்கிறது. நான் எழுந்து நின்றால் கிண்டலாகச் சிரிக்கிறார்கள். 19  உயிர் நண்பர்கள் என்னை உதறிவிட்டார்கள்.+ பாசத்துக்குரியவர்கள் என்னைப் பகைக்கிறார்கள்.+ 20  நான் எலும்பும் தோலுமாக ஆகிவிட்டேன்.+ கிட்டத்தட்ட செத்துப் பிழைத்திருக்கிறேன்.* 21  நண்பர்களே, இரக்கம் காட்டுங்கள்! தயவுசெய்து எனக்கு இரக்கம் காட்டுங்கள்! கடவுளுடைய கை என்னைத் தாக்கிவிட்டது.+ 22  அவரைப் போல் நீங்களும் ஏன் என்னைப் பாடாய்ப் படுத்துகிறீர்கள்?+ ஏன் விடாமல் தாக்கிக்கொண்டே இருக்கிறீர்கள்?+ 23  என் வார்த்தைகள் எழுதி வைக்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அதெல்லாம் ஒரு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டால் சந்தோஷப்படுவேனே! 24  என்றென்றும் அழியாதபடி அவை பாறையில் செதுக்கப்படக் கூடாதா? இரும்பு எழுத்தாணியாலும் ஈயத்தாலும் பொறிக்கப்படக் கூடாதா? 25  என்னை விடுவிக்கிறவர்+ உயிரோடு இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அவர் பிற்பாடு வருவார், பூமிமேல்* எழுந்து நிற்பார். 26  என் தோல் சிதைந்துபோன பிறகு, உயிர் இருக்கும்போதே நான் கடவுளைப் பார்ப்பேன். 27  நானே அவரைப் பார்ப்பேன். வேறொருவரின் கண்கள் அல்ல, என் கண்களே அவரைப் பார்க்கும்.+ ஆனாலும், இப்போது என் மனம் துடியாய்த் துடிக்கிறது. 28  ‘நாங்கள் எப்போது உன்னைப் பாடாய்ப் படுத்தினோம்?’+ என்று கேட்கிறீர்கள். பிரச்சினைக்குக் காரணமே நான்தான் என்பதுபோல் பேசுகிறீர்களே. 29  நீங்கள் வாளுக்குப் பயப்படுங்கள்.+ தப்பு செய்கிறவர்களை அது தண்டிக்கும். நீதிபதி ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்!”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “என் உறவினர்கள்.”
நே.மொ., “என் பற்களின் மேலுள்ள தோல்தான் தப்பியிருக்கிறது.”
நே.மொ., “மண்மேல்.”