Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

மீகா 3:1-12

முக்கியக் குறிப்புகள்

  • தலைவர்களும் தீர்க்கதரிசிகளும் கண்டிக்கப்படுகிறார்கள் (1-12)

    • யெகோவாவின் சக்தியால் மீகா பலம் பெறுகிறார் (8)

    • குருமார்கள் பணத்துக்காகப் போதிக்கிறார்கள் (11)

    • எருசலேம் மண்மேடாகும் (12)

3  பின்பு நான், “யாக்கோபின் தலைவர்களே, தயவுசெய்து கேளுங்கள், இஸ்ரவேலின் அதிகாரிகளே, கவனியுங்கள்.+ உங்களுக்கு நீதிநியாயம் தெரிய வேண்டாமா?   நீங்கள் நல்லதை வெறுக்கிறீர்கள்,+ கெட்டதை விரும்புகிறீர்கள்.+ என் ஜனங்களுடைய தோலை உரிக்கிறீர்கள், அவர்களுடைய எலும்புகளிலிருந்து சதையைப் பிய்த்தெடுக்கிறீர்கள்.+   பிய்த்தெடுத்த சதையைச் சாப்பிடவும் செய்கிறீர்கள்.+ என் ஜனங்களின் தோலைக் கிழித்தெடுக்கிறீர்கள். அவர்களுடைய எலும்புகளை உடைத்து நொறுக்குகிறீர்கள்.+ பானையில் வேகிற இறைச்சித் துண்டுகளைப் போல் ஆக்குகிறீர்கள்.   அந்த நாளில், நீங்கள் உதவிக்காக யெகோவாவைக் கூப்பிடுவீர்கள். ஆனால், அவர் பதில் சொல்ல மாட்டார். உங்களிடமிருந்து தன்னுடைய முகத்தை மறைத்துக்கொள்வார்.+ ஏனென்றால், நீங்கள் அக்கிரமம் செய்கிறீர்கள்.+   தீர்க்கதரிசிகள் யெகோவாவின் ஜனங்களைக் கெட்ட வழிக்குக் கொண்டுபோகிறார்கள்.+ யாராவது சாப்பாடு கொடுக்கும்போது,*+ ‘நன்றாக இருப்பீர்கள்!’ என்று வாழ்த்துகிறார்கள்.+ ஆனால் யாராவது சாப்பாடு கொடுக்காதபோது, ‘நாசமாய்ப் போவீர்கள்!’ என்று சபிக்கிறார்கள்.   அவர்களிடம் கடவுள், ‘உங்களுக்கு இரவு நேரம் வரும்,+ நீங்கள் எந்தத் தரிசனமும் பார்க்க மாட்டீர்கள்.+ கும்மிருட்டில்தான் கிடப்பீர்கள், குறிசொல்ல மாட்டீர்கள். தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையில் சூரியன் மறைந்துவிடும். பகல் இரவாகிவிடும்.+   தரிசனம் பார்க்கிறவர்கள் அவமானம் அடைவார்கள்.+ குறிசொல்கிறவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். கடவுளிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காததால் அவர்கள் எல்லாரும் அவமானத்தில் தங்கள் வாயை* மூடிக்கொள்வார்கள்’ என்று சொல்கிறார்” என்றேன்.   யாக்கோபுக்கு அவன் குற்றத்தையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் புரியவைக்க, யெகோவாவின் சக்தி என்னைப் பலத்தினாலும்* நீதியினாலும் தைரியத்தினாலும் நிரப்பியிருக்கிறது.   யாக்கோபின் வம்சத் தலைவர்களே, தயவுசெய்து கேளுங்கள். இஸ்ரவேலின் அதிகாரிகளே, கவனியுங்கள்.+ நீங்கள் நீதிநியாயத்தை வெறுக்கிறீர்கள், நேரானதைக் கோணலாக்குகிறீர்கள்.+ 10  சீயோனை இரத்தத்தாலும், எருசலேமை அக்கிரமத்தாலும் நிரப்புகிறீர்கள்.+ 11  எருசலேமின் தலைவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு சொல்கிறார்கள்.+ அவளுடைய குருமார்கள் பணத்துக்காகப் போதிக்கிறார்கள்.+ அவளுடைய தீர்க்கதரிசிகள் காசுக்காக* குறிசொல்கிறார்கள்.+ ஆனாலும், யெகோவாமேல் நம்பிக்கை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார்கள். “யெகோவா எங்களோடு இருக்கிறார்,+ எங்களுக்கு எந்த ஆபத்தும் வராது”+ என்று சொல்லிக்கொள்கிறார்கள். 12  அதனால், வயலைப் போல சீயோன் உழப்படும். எருசலேம் மண்மேடாகும்.+ ஆலயம் இருக்கிற மலை அடர்ந்த காடாகும்.+ உங்களால்தான் இந்த நிலைமை வரும்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “தங்கள் பற்களால் கடிக்கும்போது.”
நே.மொ., “மீசையை.”
வே.வா., “வல்லமையினாலும்.”
வே.வா., “வெள்ளிக்காக.”