Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

மத்தேயு 8:1-34

முக்கியக் குறிப்புகள்

  • தொழுநோயாளி குணமாக்கப்படுகிறான் (1-4)

  • படை அதிகாரியின் விசுவாசம் (5-13)

  • கப்பர்நகூமில் நிறைய பேரை இயேசு குணமாக்குகிறார் (14-17)

  • இயேசுவைப் பின்பற்றுவது எப்படி (18-22)

  • புயல்காற்றை இயேசு அடக்குகிறார் (23-27)

  • இயேசு பன்றிகளுக்குள் பேய்களை அனுப்புகிறார் (28-34)

8  மலையிலிருந்து அவர் கீழே இறங்கி வந்ததும், மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் பின்னால் போனார்கள்.  அப்போது, தொழுநோயாளி ஒருவன் வந்து அவர் முன்னால் மண்டிபோட்டு,* “ஐயா, உங்களுக்கு விருப்பம் இருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்”+ என்று சொன்னான்.  அப்போது, அவர் தன்னுடைய கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு”+ என்று சொன்னார். உடனே தொழுநோய் நீங்கி அவன் சுத்தமானான்.+  பின்பு இயேசு, “இதைப் பற்றி யாரிடமும் சொல்லாதே;+ ஆனால் குருமாரிடம் போய் உன்னைக் காட்டி,+ மோசே கட்டளையிட்ட காணிக்கையைக் கொடு;+ நீ குணமானதற்கு அத்தாட்சியாக அது அவர்களுக்கு இருக்கும்” என்று சொன்னார்.  அவர் கப்பர்நகூமுக்குள் போனபோது, படை அதிகாரி ஒருவர் அவரிடம் வந்து,  “ஐயா, என் வேலைக்காரன் பக்கவாதத்தால் ரொம்ப அவதிப்படுகிறான், வீட்டில் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்” என்று சொல்லிக் கெஞ்சினார்.+  அப்போது இயேசு, “நான் அங்கே வரும்போது அவனைக் குணப்படுத்துகிறேன்” என்று சொன்னார்.  அதற்கு அந்தப் படை அதிகாரி, “ஐயா, நீங்கள் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை; அதனால், நீங்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள், என் வேலைக்காரன் குணமாகிவிடுவான்.  நான் அதிகாரம் உள்ளவர்களின் கீழ் வேலை செய்தாலும், என் அதிகாரத்துக்குக் கீழும் படைவீரர்கள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் ஒருவனிடம் ‘போ!’ என்றால் போகிறான், இன்னொருவனிடம் ‘வா!’ என்றால் வருகிறான்; என் அடிமையிடம் ‘இதைச் செய்!’ என்றால் செய்கிறான்” என்றார். 10  அதைக் கேட்டு இயேசு ஆச்சரியப்பட்டு, தன் பின்னால் வந்தவர்களிடம், “உண்மையிலேயே உங்களுக்குச் சொல்கிறேன், இஸ்ரவேலர்களில் ஒருவரிடம்கூட இப்பேர்ப்பட்ட விசுவாசத்தை நான் பார்த்ததில்லை.+ 11  நான் உங்களுக்குச் சொல்கிறேன், கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் நிறைய பேர் வந்து, பரலோக அரசாங்கத்தில் ஆபிரகாமுடனும் ஈசாக்குடனும் யாக்கோபுடனும் விருந்து சாப்பிட உட்காருவார்கள்.+ 12  பரலோக அரசாங்கத்தின் பிள்ளைகளோ வெளியே இருட்டில் தள்ளப்படுவார்கள். அங்கே அவர்கள் அழுது அங்கலாய்ப்பார்கள்”*+ என்று சொன்னார். 13  பின்பு, இயேசு அந்தப் படை அதிகாரியிடம், “நீ போகலாம். உன் விசுவாசத்தின்படியே நடக்கட்டும்”+ என்று சொன்னார். அந்த நொடியே அவருடைய வேலைக்காரன் குணமானான்.+ 14  பேதுருவின் வீட்டுக்கு இயேசு வந்தபோது, பேதுருவின் மாமியார்+ காய்ச்சலில் படுத்திருந்ததைப் பார்த்தார்.+ 15  அவர் அவளுடைய கையைத் தொட்டவுடன்+ காய்ச்சல் போய்விட்டது, அவள் எழுந்து அவருக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். 16  சாயங்கால நேரமானபோது, பேய் பிடித்த நிறைய பேரை மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்; அவர் ஒரு வார்த்தை சொன்னதும், அந்தப் பேய்கள்* அவர்களைவிட்டு ஓடிவிட்டன; எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார். 17  “அவர் நம்முடைய வியாதிகளைத் தாங்கிக்கொண்டு, நம் நோய்களைச் சுமந்தார்”+ என்று ஏசாயா தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது. 18  மக்கள் கூட்டம் தன்னைச் சூழ்ந்துகொண்டதை இயேசு பார்த்தபோது, படகை அக்கரைக்கு+ ஓட்டச்சொல்லி சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்தார். 19  அப்போது, வேத அறிஞன் ஒருவன் அவரிடம் வந்து, “போதகரே, நீங்கள் எங்கே போனாலும் நான் உங்கள் பின்னால் வருவேன்”+ என்று சொன்னான். 20  அதற்கு இயேசு அவனிடம், “குள்ளநரிகளுக்குக் குழிகளும் பறவைகளுக்குக் கூடுகளும் இருக்கின்றன, ஆனால் மனிதகுமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை”+ என்று சொன்னார். 21  பின்பு மற்றொரு சீஷன் அவரிடம், “எஜமானே, முதலில் நான் போய் என்னுடைய அப்பாவை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன், எனக்கு அனுமதி கொடுங்கள்”+ என்று கேட்டான். 22  அதற்கு இயேசு அவனிடம், “இறந்தவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யட்டும்; நீ என்னைத் தொடர்ந்து பின்பற்றி வா”+ என்று சொன்னார். 23  பின்பு, அவர் ஒரு படகில் ஏறியபோது சீஷர்களும் அவரோடு ஏறினார்கள்.+ 24  அப்போது, கடலில் பயங்கர புயல்காற்று வீசியது; பெரிய அலைகள் அடித்ததால் படகு தண்ணீரால் நிரம்ப ஆரம்பித்தது; அவரோ தூங்கிக்கொண்டிருந்தார்.+ 25  சீஷர்கள் வந்து அவரை எழுப்பி, “எஜமானே, காப்பாற்றுங்கள், நாம் சாகப்போகிறோம்!” என்று சொன்னார்கள். 26  ஆனால் அவர், “விசுவாசத்தில் குறைவுபடுகிறவர்களே, ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்?”+ என்று கேட்டார். பின்பு எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார்; அப்போது, மிகுந்த அமைதி உண்டானது.+ 27  அவர்கள் பிரமித்துப்போய், “இவர் உண்மையில் யார்? காற்றும் கடலும்கூட இவருக்கு அடங்கிவிடுகின்றனவே!” என்று சொன்னார்கள். 28  அக்கரையில் இருக்கிற கதரேனர்* பகுதிக்கு அவர் வந்தபோது, பேய் பிடித்த இரண்டு பேர் கல்லறைகளின் நடுவிலிருந்து அவருக்கு எதிரே வந்தார்கள்;+ அவர்கள் பயங்கர வெறித்தனமாக நடந்துகொண்டதால், அந்த வழியில் போவதற்கு யாருக்குமே தைரியம் வரவில்லை. 29  அவர்கள் இரண்டு பேரும் அவரைப் பார்த்து, “கடவுளுடைய மகனே, உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?+ நேரம் வருவதற்கு முன்பே எங்களைப் பாடுபடுத்த வந்துவிட்டீர்களா?”+ என்று கத்தினார்கள். 30  அங்கிருந்து வெகு தூரத்தில் ஏராளமான பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.+ 31  அதனால் அந்தப் பேய்கள் அவரிடம், “நீங்கள் எங்களை விரட்ட நினைத்தால், அந்தப் பன்றிகளுக்குள் எங்களை அனுப்பிவிடுங்கள்”+ என்று கெஞ்ச ஆரம்பித்தன. 32  அப்போது அவர், “போங்கள்!” என்று சொன்னார். உடனே அவை வெளியேறி அந்தப் பன்றிகளுக்குள் புகுந்துகொண்டன; அப்போது, அந்தப் பன்றிகளெல்லாம் ஓட்டமாக ஓடி செங்குத்தான பாறையிலிருந்து கடலுக்குள் குதித்துச் செத்துப்போயின. 33  பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆட்கள் நகரத்துக்குள் ஓடிப்போய், பேய் பிடித்த ஆட்களைப் பற்றியும் நடந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் சொன்னார்கள். 34  அப்போது, நகரத்திலிருந்த எல்லாரும் இயேசுவைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்; அவரைச் சந்தித்ததும், தங்கள் பகுதியைவிட்டுப் போகச்சொல்லி அவரிடம் கெஞ்சிக் கேட்டார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “தலைவணங்கி.”
நே.மொ., “பற்களை நறநறவென்று கடிப்பார்கள்.” இது கோபத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்தும் செயல்.
அதாவது, “கெட்ட தேவதூதர்கள்.”
மாற் 5:1-லும் லூ 8:26-லும் “கெரசேனர்.”