Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

மத்தேயு 1:1-25

முக்கியக் குறிப்புகள்

  • இயேசுவின் வம்சாவளி (1-17)

  • இயேசுவின் பிறப்பு (18-25)

1  ஆபிரகாமின் மகனாகிய+ தாவீதின் மகன்+ இயேசு கிறிஸ்துவின்* சரித்திரத்தை* பற்றிய புத்தகம்:   ஆபிரகாமின் மகன் ஈசாக்கு;+ஈசாக்கின் மகன் யாக்கோபு;+யாக்கோபின் மகன்கள் யூதாவும்,+ யூதாவின் சகோதரர்களும்;   யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த மகன்கள் பாரேஸ், சேராகு;+பாரேசின் மகன் எஸ்ரோன்;+எஸ்ரோனின் மகன் ராம்;+   ராமின் மகன் அம்மினதாப்;அம்மினதாபின் மகன் நகசோன்;+நகசோனின் மகன் சல்மோன்;   சல்மோனுக்கும் ராகாபுக்கும்+ பிறந்த மகன் போவாஸ்;போவாசுக்கும் ரூத்துக்கும்+ பிறந்த மகன் ஓபேத்;ஓபேத்தின் மகன் ஈசாய்;+   ஈசாயின் மகன் ராஜாவாகிய தாவீது;+ தாவீதுக்கும் உரியாவின் மனைவிக்கும் பிறந்த மகன் சாலொமோன்;+   சாலொமோனின் மகன் ரெகொபெயாம்;+ரெகொபெயாமின் மகன் அபியா;அபியாவின் மகன் ஆசா;+   ஆசாவின் மகன் யோசபாத்;+யோசபாத்தின் மகன் யோராம்;+யோராமின் மகன் உசியா;   உசியாவின் மகன் யோதாம்;+யோதாமின் மகன் ஆகாஸ்;+ஆகாசின் மகன் எசேக்கியா;+ 10  எசேக்கியாவின் மகன் மனாசே;+மனாசேயின் மகன் ஆமோன்;+ஆமோனின் மகன் யோசியா;+ 11  யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன காலத்தில்,+ யோசியாவுக்குப்+ பிறந்த மகன்கள் எகொனியாவும்,+ எகொனியாவின் சகோதரர்களும்; 12  பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன பின்பு, எகொனியாவுக்குப் பிறந்த மகன் சலாத்தியேல்;சலாத்தியேலின் மகன் செருபாபேல்;+ 13  செருபாபேலின் மகன் அபியூத்;அபியூத்தின் மகன் எலியாக்கீம்;எலியாக்கீமின் மகன் ஆசோர்; 14  ஆசோரின் மகன் சாதோக்;சாதோக்கின் மகன் ஆகீம்;ஆகீமின் மகன் எலியூத்; 15  எலியூத்தின் மகன் எலெயாசார்;எலெயாசாரின் மகன் மாத்தான்;மாத்தானின் மகன் யாக்கோபு; 16  யாக்கோபின் மகன் யோசேப்பு; இந்த யோசேப்புதான் மரியாளின் கணவர்; இந்த மரியாளுக்குத்தான் இயேசு பிறந்தார்.+ இவர் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார்.+ 17  இப்படி, ஆபிரகாம்முதல் தாவீதுவரை 14 தலைமுறைகள்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதர்கள்வரை 14 தலைமுறைகள்; பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதர்கள்முதல் கிறிஸ்துவரை 14 தலைமுறைகள். 18  இயேசு கிறிஸ்து பிறந்த விவரம் இதுதான்: அவருடைய அம்மா மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள்; அவர்களுக்குக் கல்யாணம் ஆவதற்கு முன்பே, கடவுளுடைய சக்தியின் மூலம் மரியாள் கர்ப்பமானாள்.+ 19  ஆனால், அவளுடைய கணவரான யோசேப்பு நீதிமானாக இருந்ததால், எல்லார் முன்னாலும் அவளை அவமானப்படுத்த விரும்பவில்லை; அதனால், அவளை ரகசியமாக விவாகரத்து* செய்ய நினைத்தார்.+ 20  இந்த விஷயங்களைப் பற்றி யோசித்த பின்பு அவர் தூங்கிவிட்டார்; அப்போது யெகோவாவின்* தூதர் அவருடைய கனவில் வந்து, “யோசேப்பே, தாவீதின் மகனே, உன் மனைவி மரியாளை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வர பயப்படாதே; கடவுளுடைய சக்தியின் மூலம்தான் அவள் கர்ப்பமாகியிருக்கிறாள்.+ 21  அவளுக்கு ஒரு மகன் பிறப்பார்; அவருக்கு இயேசு* என்று நீ பெயர் வைக்க வேண்டும்;+ ஏனென்றால், அவர் தன்னுடைய மக்களைப் பாவத்திலிருந்து மீட்பார்”+ என்று சொன்னார். 22  யெகோவா* தன்னுடைய தீர்க்கதரிசியின் மூலம் சொன்னது நிறைவேற வேண்டும் என்பதற்காகவே இதெல்லாம் நடந்தது. 23  “இதோ! ஒரு கன்னிப்பெண் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவனுக்கு இம்மானுவேல் என்று பெயர் வைப்பார்கள்”+ என்று அவர் சொல்லியிருந்தார். இம்மானுவேல் என்றால், “கடவுள் நம்மோடு இருக்கிறார்”+ என்று அர்த்தம். 24  யோசேப்பு தூங்கியெழுந்த பின்பு, யெகோவாவின்* தூதர் சொன்னபடி தன்னுடைய மனைவியை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். 25  ஆனால், அவளுக்கு ஒரு மகன் பிறக்கும்வரை+ அவளோடு அவர் உறவுகொள்ளவில்லை; அந்த மகனுக்கு இயேசு என்று பெயர் வைத்தார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மேசியாவின்; அபிஷேகம் செய்யப்பட்டவரின்.”
வே.வா., “வம்சாவளியை.”
யூதர்களின் சம்பிரதாயப்படி, திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதை முறிப்பதற்கு விவாகரத்து செய்ய வேண்டியிருந்தது.
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயரான யெகோவா 237 தடவை வருகிறது. அதில் இந்த வசனத்தில்தான் முதல் தடவை வருகிறது. இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
எபிரெயுவில், யெஷுவா அல்லது யோசுவா; இதன் அர்த்தம், “யெகோவாவே மீட்பு.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.