Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

நெகேமியா 10:1-39

முக்கியக் குறிப்புகள்

  • திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதாக ஜனங்கள் ஒத்துக்கொள்கிறார்கள் (1-39)

    • “நாங்கள் எங்களுடைய கடவுளுடைய ஆலயத்தை அலட்சியப்படுத்த மாட்டோம்” (39)

10  முத்திரை போட்டு+ அதை உறுதிப்படுத்தியவர்கள் இவர்கள்தான்: அகலியாவின் மகனும் ஆளுநருமான* நெகேமியா,சிதேக்கியா,  செராயா, அசரியா, எரேமியா,  பஸ்கூர், அமரியா, மல்கீயா,  அத்தூஸ், ஷெபனியா, மல்லூக்,  ஆரீம்,+ மெரெமோத், ஒபதியா,  தானியேல்,+ கிநேதோன், பாருக்,  மெசுல்லாம், அபியா, மியாமின்,  மாசியா, பில்காய், செமாயா; இவர்கள் எல்லாரும் குருமார்கள்.  அதை உறுதிப்படுத்திய லேவியர்கள் இவர்கள்தான்: அசனியாவின் மகன் யெசுவா, எனாதாத் வம்சத்தில் வந்த பின்னூய், கத்மியேல்,+ 10  ஷெபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான், 11  மிக்கா, ரேகோப், அஷபியா, 12  சக்கூர், செரெபியா,+ ஷெபனியா, 13  ஒதியா, பானி, பெனினு. 14  அதை உறுதிப்படுத்திய ஜனங்களின் தலைவர்கள் இவர்கள்தான்: பாரோஷ், பாகாத்-மோவாப்,+ ஏலாம், சத்தூ, பானி, 15  புன்னி, அஸ்காத், பெபாய், 16  அதோனியா, பிக்வாய், ஆதின், 17  அதேர், எசேக்கியா, ஆசூர், 18  ஒதியா, ஆசூம், பேசாய், 19  ஆரீப், ஆனதோத், நெபாய், 20  மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர், 21  மெஷெசாபெயேல், சாதோக், யதுவா, 22  பெலத்தியா, ஆனான், ஆனாயா, 23  ஓசெயா, அனனியா, அசூப், 24  அல்லோகேஸ், பில்கா, சோபேக், 25  ரெகூம், அஷபனா, மாசெயா, 26  அகியா, ஆனான், ஆனன், 27  மல்லூக், ஆரீம், பாணா. 28  குருமார்கள், லேவியர்கள், வாயிற்காவலர்கள், பாடகர்கள், ஆலயப் பணியாளர்கள்,* திருச்சட்டத்தைப் பின்பற்றுவதற்காக மற்ற தேசத்தாரைவிட்டு வந்தவர்கள்,+ அவர்களுடைய மனைவிகள், பிள்ளைகள், விவரம் தெரிந்தவர்கள்* ஆகிய எல்லாரும் 29  தங்களுடைய சகோதரர்களோடும் முக்கியப் பிரமுகர்களோடும் சேர்ந்து உறுதிமொழி எடுத்தார்கள். உண்மைக் கடவுளின் ஊழியரான மோசே மூலம் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தையும் எஜமானாகிய யெகோவாவின் கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் விதிமுறைகளையும் கவனமாய்க் கடைப்பிடிப்பதாக வாக்குறுதி கொடுத்து,* 30  “நாங்கள் மற்ற தேசத்தாருக்குப் பெண் கொடுக்கவும் மாட்டோம், அவர்களிடமிருந்து பெண் எடுக்கவும் மாட்டோம்.+ 31  விற்பனை செய்வதற்காக அவர்கள் தங்களுடைய சரக்குகளையும் தானியங்களையும் ஓய்வுநாளிலோ+ வேறெந்தப் பரிசுத்த நாளிலோ+ கொண்டுவந்தால் நாங்கள் அவற்றை வாங்க மாட்டோம். ஏழாம் வருஷத்தில் விவசாயம் செய்ய மாட்டோம்,+ நாங்கள் கொடுத்த கடன்களையெல்லாம் ரத்து செய்துவிடுவோம்.+ 32  நாங்கள் ஒவ்வொருவரும் வருஷா வருஷம் எங்கள் கடவுளின் ஆலயச் சேவைக்காக ஒரு சேக்கலில்* மூன்றிலொரு பாகத்தைக் கொடுப்பதாக உறுதிமொழி தருகிறோம்.+ 33  படையல் ரொட்டிகள்,+ தினமும் செலுத்துகிற* உணவுக் காணிக்கைகள்,+ ஓய்வுநாட்களிலும்+ மாதப் பிறப்புகளிலும்*+ செலுத்த வேண்டிய தகன பலிகள், பண்டிகைக்கால விருந்துகள்,+ பரிசுத்தமான பொருள்கள், இஸ்ரவேலர்களின் பாவப் பரிகார பலிகள்+ ஆகியவற்றுக்காகவும், எங்கள் கடவுளுடைய ஆலயத்தின் மற்ற எல்லா வேலைகளுக்காகவும் அந்தத் தொகையைக் காணிக்கையாகக் கொடுப்போம். 34  திருச்சட்டத்தில் எழுதியிருக்கிறபடியே,+ வருஷா வருஷம் எங்கள் கடவுளாகிய யெகோவாவின் பலிபீடத்தில் எரிப்பதற்கான விறகுகளைக் கொண்டுவருவோம். தந்தைவழிக் குடும்பங்களின் வரிசைப்படியே குருமார்களிலும் லேவியர்களிலும் ஜனங்களிலும் யார்யார் எந்தெந்த காலத்தில் அவற்றைக் கொண்டுவர வேண்டுமென்று குலுக்கல் போட்டு தீர்மானிப்போம். 35  வருஷா வருஷம் எங்களுடைய நிலத்தின் முதல் விளைச்சலையும் எல்லா வகையான மரங்களின் முதல் கனிகளையும் யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவோம்.+ 36  திருச்சட்டத்தில் எழுதியிருக்கிறபடி எங்களுடைய மூத்த மகன்களையும் எங்களுடைய கால்நடைகளின்+ முதல் குட்டிகளையும் கன்றுகளையும் எங்கள் கடவுளுடைய ஆலயத்தில் சேவை செய்கிற குருமார்களிடம் கொண்டுவருவோம்.+ 37  எங்களுடைய முதல் விளைச்சலின் முதல் மாவு,*+ காணிக்கைகள், எல்லா வகையான மரங்களின் பழங்கள்,+ புதிய திராட்சமது, எண்ணெய்+ ஆகியவற்றை எங்கள் கடவுளுடைய ஆலயத்தின் சேமிப்பு* அறைகளுக்கு+ எடுத்து வருவோம். அதுமட்டுமல்லாமல், எங்களுடைய எல்லா வேளாண்மை நகரங்களிலிருந்தும் பத்திலொரு பாகத்தைச் சேகரிக்கிற லேவியர்களுக்காக+ எங்களுடைய நிலத்தின் விளைச்சலிலிருந்து பத்திலொரு பாகத்தைக் கொண்டுவருவோம். 38  லேவியர்கள் பத்திலொரு பாகத்தைச் சேகரிக்கும்போது ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த குருமார்கள் அவர்களோடு இருப்பார்கள். லேவியர்கள் அந்தப் பத்திலொரு பாகத்திலிருந்து பத்திலொரு பாகத்தை எடுத்து கடவுளுடைய ஆலயத்தின்+ சேமிப்பு* அறைகளில் வைப்பார்கள். 39  தானியம், புதிய திராட்சமது, எண்ணெய்+ ஆகிய காணிக்கைகளை+ இஸ்ரவேலர்களும் லேவியர்களும் அங்கு கொண்டுவருவார்கள். அந்த அறைகளில்தான் ஆலயப் பாத்திரங்கள் வைக்கப்படும். சேவை செய்கிற குருமார்களும் வாயிற்காவலர்களும் பாடகர்களும் அங்குதான் தங்குவார்கள். நாங்கள் எங்களுடைய கடவுளுடைய ஆலயத்தை அலட்சியப்படுத்த மாட்டோம்”+ என்று சொன்னார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “திர்ஷாதாவுமான.” திர்ஷாதா என்பது ஒரு மாகாணத்தின் ஆளுநருக்குக் கொடுக்கப்பட்ட பெர்சியப் பட்டப்பெயர்.
வே.வா., “நிதனீமியர்கள்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்கள்; அர்ப்பணிக்கப்பட்டவர்கள்.”
அல்லது, “புரிந்துகொள்ளும் வயதிலுள்ளவர்கள்.”
நே.மொ., “ஒரு உறுதிமொழிக்கும் சாபத்துக்கும் தங்களை உட்படுத்திக்கொண்டு.” அதாவது, “உறுதிமொழியை நிறைவேற்றாவிட்டால் தங்களுக்குச் சாபம் வரட்டும் என்று சொல்லிக்கொண்டு.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “வழக்கமான.”
வே.வா., “முதலாம் பிறையிலும்.”
நே.மொ., “கொரகொரப்பான மாவு.”
வே.வா., “சாப்பாட்டு.”
வே.வா., “சாப்பாட்டு.”