Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

நீதிமொழிகள் 13:1-25

முக்கியக் குறிப்புகள்

  • ஆலோசனை கேட்கிறவர்கள் ஞானமுள்ளவர்கள் (10)

  • எதிர்பார்ப்பு தாமதமானால் நெஞ்சம் நொந்துபோகும் (12)

  • உண்மையுள்ள தூதுவனின் செய்தியால் நன்மைகள் (17)

  • ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான் (20)

  • கண்டித்துத் திருத்துவது அன்பின் அடையாளம் (24)

13  ஞானமுள்ள மகன் தன்னுடைய அப்பாவின் புத்திமதியை ஏற்றுக்கொள்கிறான்.+ஆனால், கேலி செய்கிறவன் எச்சரிப்பை* காதில் வாங்குவது இல்லை.+   நல்ல வார்த்தைகளைப் பேசுகிறவன் நல்ல பலனை அனுபவிப்பான்.+ஆனால், துரோகியின் மனம் வன்முறையில் இறங்கவே ஆசைப்படும்.   தன் வாய்க்குக் காவல் போடுகிறவன் தன் உயிரைப் பாதுகாக்கிறான்.+ஆனால், தன் வாய்க்குக் காவல் போடாதவன் நாசமாவான்.+   சோம்பேறிக்கு நிறைய ஆசைகள் இருந்தாலும், ஆசைப்பட்ட எதுவும் அவனுக்குக் கிடைப்பதில்லை.+ஆனால், கடினமாக உழைப்பவனுக்கு எல்லாமே கிடைக்கும்.*+   நீதிமான் பொய்களை வெறுக்கிறான்.+ஆனால், பொல்லாதவனின் செயல்கள் அவமானத்தையும் தலைகுனிவையும் கொண்டுவருகின்றன.   நேர்மையாக நடக்கிறவனை நீதி பாதுகாக்கிறது.+ஆனால், பாவியை அக்கிரமம் அழித்துவிடுகிறது.   ஒன்றுமே இல்லாவிட்டாலும் பணக்காரன்போல் காட்டிக்கொள்கிறவன் உண்டு.+ஏராளமாக இருந்தாலும் ஏழைபோல் காட்டிக்கொள்கிறவனும் உண்டு.   பணக்காரன் பணம் கொடுத்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்கிறான்.+ஆனால், ஏழைக்கு மிரட்டல்கூட வருவதில்லை.+   நீதிமானின் விளக்கு பிரகாசமாக ஒளிவீசும்.+ஆனால், பொல்லாதவனின் விளக்கு அணைக்கப்படும்.+ 10  அகங்காரமாக* நடப்பது சண்டையில்தான் கொண்டுபோய் விடும்.+ஆனால், ஆலோசனை கேட்கிறவர்களிடம்* ஞானம் இருக்கும்.+ 11  திடீர்ப் பணக்காரனின் சொத்துகள் கரைந்துபோகும்.+ஆனால், சிறுகச் சிறுகச் சேர்க்கிறவனின் சொத்துகள் பெருகும். 12  எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்குத் தாமதமானால் நெஞ்சம் நொந்துபோகும்.+ஆனால், ஆசை நிறைவேறும்போது அது வாழ்வளிக்கும் மரம்போல் இருக்கும்.+ 13  அறிவுரையை அலட்சியம் செய்கிறவன் அதன் விளைவுகளை அனுபவிப்பான்.+ஆனால், கட்டளையை மதித்து நடக்கிறவன் பலன் பெறுவான்.+ 14  ஞானமுள்ளவனின் போதனை* வாழ்வளிக்கும் ஊற்றுபோல் இருக்கிறது.+மரணத்தின் கண்ணிகளிலிருந்து அது ஒருவனைக் காப்பாற்றுகிறது. 15  மிகுந்த விவேகத்தோடு நடந்துகொண்டால் மற்றவர்களின் பிரியத்தைச் சம்பாதிக்கலாம்.ஆனால், துரோகிகளின் பாதை கரடுமுரடாக இருக்கிறது. 16  சாமர்த்தியசாலி அறிவோடு நடந்துகொள்கிறான்.+ஆனால், முட்டாள் தன் முட்டாள்தனத்தைக் காட்டிவிடுகிறான்.+ 17  பொல்லாத தூதுவன் பிரச்சினைகளைக் கொண்டுவருகிறான்.+ஆனால், உண்மையுள்ள தூதுவன் நன்மைகளைக் கொண்டுவருகிறான்.+ 18  புத்திமதியை ஒதுக்கித்தள்ளுகிறவனுக்கு வறுமையும் அவமானமும்தான் மிஞ்சும்.ஆனால், கண்டிப்பை ஏற்றுக்கொள்கிறவனுக்கு மதிப்புக் கிடைக்கும்.+ 19  ஆசை நிறைவேறுவது இதயத்துக்கு இனிதாக இருக்கிறது.+ஆனால், தவறான பாதையைவிட்டு விலகுவது முட்டாளுக்கு வெறுப்பாக இருக்கிறது.+ 20  ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான்.+ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்.+ 21  பாவிகளைத் துன்பம் துரத்திக்கொண்டே இருக்கும்.+ஆனால், நீதிமான்களுக்குக் கிடைக்கும் பலன் வளமான வாழ்வு.+ 22  நல்லவன் தன் பேரப்பிள்ளைகளுக்குச் சொத்துகளை விட்டுச்செல்கிறான்.ஆனால், பாவியின் சொத்துகள் நீதிமானுக்காகச் சேர்த்து வைக்கப்படும்.+ 23  ஏழையின் வயல் நன்றாக விளையும்.ஆனால், அநியாயத்தின் காரணமாக அது* வாரிக்கொண்டு போகப்படலாம். 24  பிரம்பைக் கையில் எடுக்காதவன்* தன் மகனை வெறுக்கிறான்.+ஆனால், மகனை நேசிக்கிறவன் அவனை அக்கறையோடு* கண்டித்துத் திருத்துகிறான்.+ 25  நீதிமான் வயிறார சாப்பிடுகிறான்.+ஆனால், பொல்லாதவனின் வயிறு காய்ந்து கிடக்கிறது.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “தான் கண்டிக்கப்படுவதை.”
நே.மொ., “உழைப்பவன் புஷ்டியாவான்.”
இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
வே.வா., “ஒன்றுகூடி ஆலோசனை செய்கிறவர்களிடம்.”
வே.வா., “சட்டம்.”
வே.வா., “அவன்.”
வே.வா., “கண்டித்துத் திருத்தாதவன்; தண்டிக்காதவன்.”
அல்லது, “உடனடியாக.”