Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

நாகூம் 1:1-15

முக்கியக் குறிப்புகள்

  • யெகோவா தன்னுடைய எதிரிகளைப் பழிதீர்க்கிறார் (1-7)

    • கடவுள் தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் (2)

    • யெகோவா தன்னிடம் அடைக்கலம் தேடி வருகிறவர்களை அக்கறையாகக் கவனித்துக்கொள்கிறார் (7)

  • நினிவே ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் (8-14)

    • அழிவு மறுபடியும் வராது (9)

  • யூதாவுக்கு நல்ல செய்தி அறிவிக்கப்படுகிறது (15)

1  நினிவே நகரத்துக்கு எதிரான தீர்ப்பைப்+ பற்றி எல்கோசைச் சேர்ந்த நாகூம்* பார்த்த தரிசனத்தின் புத்தகம்:   யெகோவா தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் கடவுள்;+ தப்பு செய்கிறவர்களைப் பழிவாங்கும் கடவுள். யெகோவா பழிவாங்குகிறவர், கோபத்தில் கொதித்தெழுகிறவர்.+ யெகோவா தன்னுடைய பகைவர்களைப் பழிதீர்க்கிறவர். எதிரிகள்மேல் கொட்டுவதற்காகக் கோபத்தைச் சேர்த்து வைக்கிறவர்.   யெகோவா சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மகா வல்லமை உள்ளவர்.+ கொடுக்க வேண்டிய தண்டனையைக் கொடுக்கத் தவறாதவர்.+ யெகோவா வரும்போது அழிவு உண்டாக்குகிற சுழல்காற்றும் புயல்காற்றும் வீசும். மேகங்கள் அவருடைய காலடி தூசிபோல் ஆகும்.+   அவர் கடலை அதட்டி,+ அதை வற்றச் செய்கிறார். ஆறுகளையெல்லாம் வறண்டுபோக வைக்கிறார்.+ பாசானும் கர்மேலும் காய்ந்துபோகின்றன.+ லீபனோனின் பூக்கள் வாடிப்போகின்றன.   அவருடைய கோபத்தால் மலைகள் அதிர்கின்றன. குன்றுகள் உருகுகின்றன.+ அவருக்கு முன்னால் பூமி குலுங்கும். அவர் உலகத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் உலுக்குவார்.+   அவருடைய கடும் கோபத்துக்கு முன்னால் யாரால் நிற்க முடியும்?+ அவர் பயங்கர கோபத்தைக் காட்டும்போது யாரால் தாங்க முடியும்?+ அவர் கோபத்தை நெருப்பாகக் கொட்டுவார். அப்போது, பாறைகள் நொறுங்கித் தூள்தூளாகும்.   யெகோவா நல்லவர்.+ இக்கட்டு நாளில் அவர் கோட்டையைப் போல இருக்கிறார்.+ அவரிடம் அடைக்கலம் தேடி வருகிறவர்களை அக்கறையாகக் கவனித்துக்கொள்கிறார்.+   ஆனால், நினிவே நகரத்தைப் பெரிய வெள்ளத்தால் அடியோடு அழித்துவிடுவார். அவருடைய எதிரிகளை இருள் துரத்தும்.   யெகோவாவுக்கு எதிராக நீங்கள் என்ன திட்டம் தீட்டுவீர்கள்? அவர் ஒட்டுமொத்தமாக அழிக்கப்போகிறார். அழிவு* மறுபடியும் வராது.+ 10  பின்னிக் கிடக்கிற முட்புதர்களைப் போல நினிவே ஜனங்கள் இருக்கிறார்கள். போதை ஏறுமளவுக்கு மது* குடித்தவர்களைப் போல இருக்கிறார்கள். ஆனால், வைக்கோலைப் போலப் பொசுங்கிவிடுவார்கள். 11  யெகோவாவுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுகிறவன் உன்னிடமிருந்து வருவான். ஒன்றுக்கும் உதவாத அறிவுரையைத் தருவான். 12  யெகோவா சொல்வது இதுதான்: “அசீரியர்களின்* படையில் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மகா பலசாலிகள். ஆனாலும் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள், ஒழிந்துபோவார்கள்.* யூதாவே, நான் உனக்குக் கஷ்டம் கொடுத்தேன்; இனி அப்படிச் செய்ய மாட்டேன். 13  அசீரியன்* உன் கழுத்தில் வைத்திருக்கும் நுகத்தடியை உடைத்துப்போடுவேன்.+ உன்னைக் கட்டியிருக்கும் கயிறுகளை அறுத்தெறிவேன். 14  அசீரியாவே, யெகோவாவின் தீர்ப்பைக் கேள்: ‘இனி உன் பெயர் நிலைக்காது. உன் கோயில்களில் இருக்கிற செதுக்கப்பட்ட சிலைகளையும் உலோகச் சிலைகளையும் உடைப்பேன். உனக்குக் கல்லறையை வெட்டுவேன், ஏனென்றால் நீ வெறுக்கத்தக்கவன்.’ 15  நல்ல செய்தி சொல்கிறவர் மலைகள்மேல் ஏறி வருகிறார். சமாதானம் கிடைக்கப்போகிறது என்று அறிவிக்கிறார்.+ யூதாவே, பண்டிகைகளைக் கொண்டாடு;+ உன் நேர்த்திக்கடன்களைச் செலுத்து. வீணானவன் இனி உன் வழியில் வர மாட்டான். அவன் அடியோடு அழிக்கப்படுவான்.”

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “ஆறுதல் தருபவர்.”
வே.வா., “இக்கட்டு; வேதனை.”
அதாவது, “கோதுமையிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர்.”
நே.மொ., “அவர்களின்.”
அல்லது, “அதன்பின் அவர் கடந்துபோவார்.”
நே.மொ., “அவன்.”