Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

சங்கீதம் 83:1-18

முக்கியக் குறிப்புகள்

  • எதிரிகள் தாக்க வரும்போது செய்யப்படும் ஜெபம்

    • “கடவுளே, மவுனமாக இருக்காதீர்கள்” (1)

    • எதிரிகள், காற்றில் சுழற்றியடிக்கப்படும் முட்செடிபோல் இருக்கிறார்கள் (13)

    • கடவுளுடைய பெயர் யெகோவா (18)

ஒரு பாடல். ஆசாப்பின்+ சங்கீதம். 83  கடவுளே, மவுனமாக இருக்காதீர்கள்.+ அமைதியாக இருக்காதீர்கள்; தேவனே, சும்மாயிருக்காதீர்கள்.   பாருங்கள்! உங்களுடைய எதிரிகள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.+ உங்களை வெறுக்கிறவர்கள் ஆணவமாக நடக்கிறார்கள்.   உங்களுடைய மக்களுக்கு எதிராக ரகசியமாய்த் திட்டம் தீட்டுகிறார்கள். நீங்கள் பொக்கிஷமாக நினைக்கிற ஜனங்களுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்.   அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “இஸ்ரவேலின் பெயர்கூட யாருடைய ஞாபகத்துக்கும் வராதபடி, அந்தத் தேசத்தை அடியோடு அழிப்போம், வாருங்கள்”+ என்று சொல்கிறார்கள்.   அவர்கள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள். உங்களுக்கு எதிராகக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.*+   ஏதோமியர்களும் இஸ்மவேலர்களும்* மோவாபியர்களும்+ ஆகாரியர்களும்+   கேபாலைச் சேர்ந்தவர்களும் அம்மோனியர்களும்+ அமலேக்கியர்களும் பெலிஸ்தியர்களும்+ தீரு மக்களும்+ கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.   அசீரியர்களும்+ அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள். லோத்துவின் வம்சத்தாருக்கு*+ அவர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். (சேலா)   அதனால், மீதியானியர்களுக்குச் செய்தது போலவும்,+ கீசோன் நீரோடைக்கு* பக்கத்திலே சிசெராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போலவும்+ அவர்களுக்குச் செய்யுங்கள்! 10  அவர்கள் எந்தோரில்+ அழிக்கப்பட்டார்கள். நிலத்துக்கு எருவானார்கள். 11  ஒரேபுக்கும் சேபுக்கும் செய்ததுபோல்+ அவர்களுடைய அதிபதிகளுக்குச் செய்யுங்கள். செபாவுக்கும் சல்முனாவுக்கும் செய்ததுபோல்+ அவர்களுடைய தலைவர்களுக்குச் செய்யுங்கள். 12  ஏனென்றால், “கடவுள் குடிகொண்டிருக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வோம்” என்று அவர்கள் சொன்னார்கள். 13  என் கடவுளே, காற்றில் சுழற்றியடிக்கப்படும் முட்செடி போல அவர்களை ஆக்குங்கள்.+ காற்றில் அடித்துக்கொண்டு போகப்படுகிற பதரைப் போல ஆக்குங்கள். 14  காட்டைக் கொளுத்துகிற தீ போலவும், மலைகளைச் சுட்டெரிக்கிற தீ ஜுவாலை போலவும்,+ 15  அவர்களை உங்களுடைய சூறாவளியால் துரத்திப்பிடியுங்கள்.+ உங்களுடைய புயல்காற்றினால் அவர்களை மிரள வையுங்கள்.+ 16  அவர்களுடைய முகங்களில் அவமானம் படியும்படி செய்யுங்கள். யெகோவாவே, அப்போதுதான் அவர்கள் உங்களுடைய பெயரைத் தேடி வருவார்கள். 17  அவர்கள் என்றென்றும் அவமானப்பட்டு, கதிகலங்கிப்போகட்டும். கேவலப்பட்டு, அழிந்துபோகட்டும். 18  யெகோவா என்ற பெயருள்ள+ நீங்கள் ஒருவர்தான், இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான* கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.”
வே.வா., “ஏதோம் கூடாரத்தாரும் இஸ்மவேல் கூடாரத்தாரும்.”
அதாவது, 6, 7 வசனங்களில் சொல்லப்பட்டுள்ள மோவாபியர்களும் அம்மோனியர்களும்.
வே.வா., “காட்டாற்றுப் பள்ளத்தாக்குக்கு.”
வே.வா., “மிக உயர்ந்த.”