Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

சங்கீதம் 67:1-7

முக்கியக் குறிப்புகள்

  • பூமியெங்கும் உள்ளவர்கள் கடவுளுக்குப் பயப்படுவார்கள்

    • கடவுளுடைய வழியைப் பற்றி எல்லாரும் தெரிந்துகொள்வார்கள் (2)

    • ‘கடவுளே, எல்லா மக்களும் உங்களைப் புகழட்டும்’ (3, 5)

    • “கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார்” (6, 7)

இசைக் குழுவின் தலைவனுக்கு; நரம்பிசைக் கருவிகளோடு பாட வேண்டிய சங்கீதம். ஒரு பாடல். 67  கடவுள் கருணை காட்டி, நம்மை ஆசீர்வதிப்பார். அவர் தன்னுடைய முகத்தை நம்மேல் பிரகாசிக்க வைப்பார்.+ (சேலா)   அப்போது, உங்களுடைய வழியைப் பற்றிப் பூமியிலுள்ள எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.+ நீங்கள் தரும் மீட்பைப் பற்றி எல்லா தேசத்து மக்களும் தெரிந்துகொள்வார்கள்.+   கடவுளே, மக்கள் உங்களைப் புகழட்டும். எல்லா மக்களும் உங்களைப் புகழட்டும்.   தேசங்கள் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்யட்டும்.+ ஏனென்றால், நீங்கள் மக்களுக்கு நியாயமான தீர்ப்பைக் கொடுப்பீர்கள்.+ எல்லா தேசத்து ஜனங்களுக்கும் வழிகாட்டுவீர்கள். (சேலா)   கடவுளே, மக்கள் உங்களைப் புகழட்டும். எல்லா மக்களும் உங்களைப் புகழட்டும்.   பூமி விளைச்சல் தரும்.+ கடவுளாகிய நம் கடவுளே நம்மை ஆசீர்வதிப்பார்.+   கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார். பூமியெங்கும் உள்ளவர்கள் அவருக்குப் பயப்படுவார்கள்.*+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அவருக்கு மதிப்புக் கொடுப்பார்கள்.”