Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

சங்கீதம் 19:1-14

முக்கியக் குறிப்புகள்

  • கடவுளுடைய படைப்பும் சட்டமும் சாட்சி சொல்கின்றன

    • “வானம் கடவுளுடைய மகிமையைச் சொல்கிறது” (1)

    • கடவுளுடைய குறையற்ற சட்டம் தெம்பூட்டுகிறது (7)

    • ‘நான் தெரியாமல் செய்த தவறுகள்’ (12)

இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம். 19  வானம் கடவுளுடைய மகிமையைச் சொல்கிறது.+ ஆகாயம்* அவருடைய கைவண்ணத்தை அறிவிக்கிறது.+   ஒவ்வொரு பகலிலும் அவை வார்த்தைகளைப் பொழிகின்றன. ஒவ்வொரு இரவிலும் அறிவை வெளிப்படுத்துகின்றன.   அவற்றுக்குப் பேச்சும் இல்லை, வார்த்தைகளும் இல்லை. அவற்றின் குரல் கேட்கப்படுவதும் இல்லை.   ஆனாலும், அவற்றின் சத்தம்* பூமியெங்கும் எட்டுகிறது. அவற்றின் செய்தி பூமியின் எல்லைகள்வரை போய்ச் சேருகிறது.+ சூரியனுக்காக வானத்தில் ஒரு கூடாரத்தைக் கடவுள் போட்டிருக்கிறார்.   மணவறையிலிருந்து வருகிற மணமகனைப் போல அது பிரகாசத்தோடு வருகிறது. ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிற வீரனைப் போல அது தன் பாதையில் சந்தோஷமாக ஓடுகிறது.   வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அதன் மறுமுனைவரை சுற்றியோடுகிறது.+ அதன் வெப்பத்திலிருந்து எதுவும் தப்பிக்க முடியாது.   யெகோவாவின் சட்டம் குறையே இல்லாதது,+ அது தெம்பூட்டுகிறது.+ யெகோவாவின் நினைப்பூட்டுதல் நம்பகமானது,+ அது பேதையை* ஞானியாக்குகிறது.+   யெகோவாவின் ஆணைகள் நீதியானவை, அவை இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன.+ யெகோவாவின் கட்டளைகள் தூய்மையானவை, அவை கண்களைப் பிரகாசிக்க வைக்கின்றன.+   யெகோவாவைப் பற்றிய பயம்+ தூய்மையானது, அது என்றென்றும் நிலைத்திருக்கிறது. யெகோவாவின் நீதித்தீர்ப்புகள் உண்மையானவை, முழுக்க முழுக்க நீதியானவை.+ 10  அவை தங்கத்தைவிடவும், குவிந்துகிடக்கிற சொக்கத்தங்கத்தைவிடவும்* விரும்பத்தக்கவை.+ அவை தேனைவிடவும்,+ தேன்கூட்டிலிருந்து சொட்டுகிற தேனைவிடவும் தித்திப்பானவை. 11  அவை உங்களுடைய ஊழியனை எச்சரிக்கின்றன.+ அவற்றின்படி நடக்கும்போது மிகுந்த பலன் கிடைக்கிறது.+ 12  தன் தவறுகளை உணர்ந்துகொள்கிறவன் யார்?+ நான் தெரியாமல் செய்த தவறுகளை மன்னித்துவிடுங்கள். 13  அகங்காரமான* செயல்களைச் செய்துவிடாதபடி என்னைத் தடுத்து நிறுத்துங்கள்.+ அவை என்னை அடக்கி ஆளாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.+ அப்போதுதான் நான் குற்றமற்றவனாக இருப்பேன்.+ பயங்கரமான பாவங்களை* செய்யாமல் இருப்பேன். 14  யெகோவாவே, என் கற்பாறையே,+ என்னை விடுவிக்கிறவரே,+ என் வாயிலிருந்து வருகிற வார்த்தைகளும் இதயத்தில் நான் தியானிக்கிற விஷயங்களும் உங்களுக்குப் பிரியமாக இருக்கட்டும்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆகாயவிரிவு.”
அல்லது, “அளவு நூல்.”
வே.வா., “அனுபவம் இல்லாதவனை.”
வே.வா., “புடமிடப்பட்ட தங்கத்தைவிடவும்.”
இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
வே.வா., “நிறைய குற்றங்களை.”