Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

சங்கீதம் 130:1-8

முக்கியக் குறிப்புகள்

  • “ஆழத்திலிருந்து உங்களைக் கூப்பிடுகிறேன்”

    • “நீங்கள் குற்றங்களைக் கவனிக்க ஆரம்பித்தால்” (3)

    • யெகோவா மனதார மன்னிக்கிறார் (4)

    • ‘நான் ஆவலோடு யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன்’ (6)

நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். 130  யெகோவாவே, ஆழத்திலிருந்து* உங்களைக் கூப்பிடுகிறேன்.+   யெகோவாவே, என் குரலைக் கேளுங்கள். உதவிக்காக நான் கெஞ்சுவதை உங்கள் காதுகளால் கவனித்துக் கேளுங்கள்.   “யா”வே,* நீங்கள் குற்றங்களைக் கவனிக்க* ஆரம்பித்தால், யெகோவாவே, யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்?+   நீங்கள் மனதார மன்னிக்கிறீர்கள்.+ அதனால் உங்கள்மேல் பயபக்தி உண்டாகிறது.+   நான் யெகோவாவையே நம்பியிருக்கிறேன், என் ஜீவன் அவரையே நம்பியிருக்கிறது. அவருடைய வார்த்தைக்காக நான் காத்திருக்கிறேன்.   காவல்காரர்கள் விடியலுக்காகக் காத்திருப்பதைவிட, ஆம், காவல்காரர்கள் விடியலுக்காகக் காத்திருப்பதைவிட,+ அதிக ஆவலோடு நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன்.+   இஸ்ரவேல் யெகோவாவுக்காகக் காத்திருக்கட்டும். ஏனென்றால், யெகோவா மாறாத அன்புள்ளவர்.+ விடுவிப்பதற்கான வல்லமை அவரிடம் அளவில்லாமல் இருக்கிறது.   இஸ்ரவேலர்களை அவர்களுடைய எல்லா குற்றங்களிலிருந்தும் அவர் விடுவிப்பார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆழ்ந்த வேதனையில்.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “கணக்கு வைக்க.”