Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

ஏசாயா 24:1-23

முக்கியக் குறிப்புகள்

  • யெகோவா தேசத்தை வெறுமையாக்குவார் (1-23)

    • யெகோவா சீயோனில் ராஜாவாக இருக்கிறார் (23)

24  யெகோவா தேசத்தை* பாழாக்கி வெறுமையாக்குவார்.+ அதை அழிப்பார்;+ அதன் ஜனங்களைச் சிதறிப்போக வைப்பார்.+   அப்போது, ஜனத்துக்கும் குருவுக்கும் வேலைக்காரனுக்கும் எஜமானுக்கும்வேலைக்காரிக்கும் எஜமானிக்கும்வாங்குகிறவனுக்கும் விற்கிறவனுக்கும்கடன் கொடுக்கிறவனுக்கும் கடன் வாங்குகிறவனுக்கும்வட்டி வாங்குகிறவனுக்கும் வட்டி கொடுக்கிறவனுக்கும்ஒரே கதிதான் ஏற்படும்.+   முழு தேசமும் வெறுமையாக்கப்படும்.தேசம் முழுவதும் சூறையாடப்படும்.+யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்.   தேசம் அழுது புலம்புகிறது;*+ அது நாசமாகிறது. விளைநிலம் வறண்டு வீணாய்ப் போகிறது. உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் தளர்ந்துபோகிறார்கள்.   தேசத்தை அதன் ஜனங்கள் அசுத்தமாக்கிவிட்டார்கள்.+சட்டதிட்டங்களை மீறிவிட்டார்கள்.+விதிமுறைகளை மாற்றிவிட்டார்கள்.+நிரந்தர* ஒப்பந்தத்தை முறித்துவிட்டார்கள்.+   அதனால் தேசம் சாபத்துக்குள்ளாகி, நாசமாகிறது.+அதன் ஜனங்கள் குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுகிறார்கள். மக்கள்தொகை குறைந்துவிட்டது.ஒருசில ஆண்களே மிஞ்சியிருக்கிறார்கள்.+   புதிய திராட்சமது அழுது புலம்புகிறது;* திராட்சைக் கொடி பட்டுப்போகிறது.+சந்தோஷமாக இருந்தவர்கள் வேதனையில் பெருமூச்சு விடுகிறார்கள்.+   கஞ்சிராவின் சந்தோஷ ஒலி ஓய்ந்துவிட்டது.குடித்துக் கும்மாளம் போடுகிறவர்களின் கூச்சல் நின்றுவிட்டது.யாழின் மகிழ்ச்சி ஒலி அடங்கிவிட்டது.+   அவர்கள் திராட்சமது குடிக்கிறார்கள்; ஆனால், பாடல் சத்தம் கேட்பதில்லை.மது அவர்களுக்குக் கசக்கிறது. 10  கைவிடப்பட்ட ஊர் நாசமாகிவிட்டது.+யாரும் நுழையாதபடி எல்லா வீடுகளும் பூட்டப்பட்டிருக்கின்றன. 11  அவர்கள் திராட்சமதுவுக்காகத் தெருக்களில் கூப்பாடு போடுகிறார்கள். தேசத்தில் சந்தோஷத்தையே பார்க்க முடிவதில்லை.அது சோகத்தில் மூழ்கிவிட்டது.+ 12  நகரம் இடிந்து கிடக்கிறது.அதன் நுழைவாசல் இடிபாடுகளாகக் கிடக்கிறது.+ 13  ஒலிவ மரத்தின் பழங்களை உதிர்த்தபின் சில பழங்கள் மீந்திருப்பது போலவும், திராட்சை அறுவடைக்குப் பின் சில பழங்கள் விடப்பட்டிருப்பதைப் போலவும்,மற்ற தேசத்தாரின் நடுவே என் ஜனங்கள் சிலர் மீதியாக இருப்பார்கள்.+ 14  அவர்கள் தங்களுடைய குரலை உயர்த்திசந்தோஷமாக ஆரவாரம் செய்வார்கள். மேற்கிலிருந்து* யெகோவாவின் மேன்மையைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள்.+ 15  கிழக்குப் பிரதேசத்தில்* யெகோவாவை மகிமைப்படுத்துவார்கள்.+தீவுகளில் அவர்கள் இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துவார்கள்.+ 16  பூமியின் எல்லா பக்கங்களிலிருந்தும், “நீதியுள்ள கடவுளுக்குப் புகழ்* சேரட்டும்” என்ற துதிப்பாடலை நாம் கேட்கிறோம்.+ ஆனால் நான், “நொந்துபோகிறேன், ரொம்பவே நொந்துபோகிறேன். என் கதி அவ்வளவுதான். துரோகிகள் துரோகம் செய்துவிட்டார்கள்.துரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள்”+ என்று சொல்கிறேன். 17  தேசத்தின் குடிமக்களே, உங்களுக்குத் திகிலும், படுகுழியும், கண்ணியும் காத்திருக்கின்றன.+ 18  திகில் சத்தத்தைக் கேட்டு பயந்து ஓடுகிறவர்கள் படுகுழியில் விழுவார்கள்.படுகுழியிலிருந்து வெளியே வருகிறவர்கள் கண்ணியில் சிக்குவார்கள்.+ ஏனென்றால், வானத்தின் அணை திறக்கப்படும்.தேசத்தின் அஸ்திவாரம் ஆட்டம்காணும். 19  தேசத்தின் நிலம் பிளக்கிறது.தேசம் குலுங்குகிறது.அது பயங்கரமாய் அதிருகிறது.+ 20  அது குடிகாரனைப் போல் தள்ளாடுகிறது.காற்றில் குடிசை அசைவதுபோல் இங்கும் அங்குமாக அசைகிறது. அதன் அக்கிரமம் சுமைபோல் அதை அழுத்துகிறது.+அது வீழ்ச்சியடையும், இனி எழும்பவே எழும்பாது. 21  அந்த நாளில், பரலோகத்தில் இருக்கும் படைமேலும் பூமியிலுள்ள ராஜாக்கள்மேலும்யெகோவா தன்னுடைய கவனத்தைத் திருப்புவார். 22  சிறையில் கைதிகள் கூட்டிச் சேர்க்கப்படுவதுபோல்அவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்.இருட்டான சிறைக்குள் அடைக்கப்படுவார்கள்.பல நாட்களுக்குப் பிறகு அவர்கள்மேல் கவனம் செலுத்தப்படும். 23  பரலோகப் படைகளின் யெகோவா சீயோன் மலையிலும்+ எருசலேமிலும் ராஜாவாகிவிட்டார்.+அவருடைய ஜனங்களின் பெரியோர்கள்* முன்னிலையில் அவர் மகிமையோடு ஆட்சி செய்வார்.+அந்த மகிமைக்கு முன்னால் முழு நிலவுகூட இருட்டாகத் தெரியும்.பிரகாசமான சூரியன்கூட மங்கலாகத் தெரியும்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “பூமியை.”
அல்லது, “வறண்டுபோகிறது.”
வே.வா., “பூர்வகால.”
அல்லது, “வற்றிப்போகிறது.”
வே.வா., “கடலிலிருந்து.”
வே.வா., “ஒளியின் பிரதேசத்தில்.”
வே.வா., “மகிமை.”
வே.வா., “மூப்பர்கள்.”