Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

எசேக்கியேல் 25:1-17

முக்கியக் குறிப்புகள்

  • அம்மோனியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-7)

  • மோவாபியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (8-11)

  • ஏதோமியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (12-14)

  • பெலிஸ்தியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (15-17)

25  யெகோவா மறுபடியும் என்னிடம்,  “மனிதகுமாரனே, அம்மோனியர்களுக்கு+ நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்.+  அவர்களைப் பற்றி இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “என்னுடைய ஆலயம் தீட்டுப்படுத்தப்பட்ட சமயத்திலும், இஸ்ரவேல் தேசம் பாழாகிப்போன சமயத்திலும், யூதா ஜனங்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போன சமயத்திலும் நீங்கள் ஏளனம் செய்தீர்கள்.  அதனால், உங்களைக் கிழக்கத்திய ஜனங்களின் கையில் கொடுக்கப்போகிறேன். அவர்கள் உங்களுக்கு நடுவே தங்களுடைய முகாம்களையும் கூடாரங்களையும் போடுவார்கள். உங்களுடைய தேசத்தின் விளைச்சலைச் சாப்பிட்டு, உங்களுடைய மந்தையின் பாலைக் குடிப்பார்கள்.  நான் ரப்பாவை+ ஒட்டகங்கள் மேய்கிற நிலமாகவும், அம்மோனியர்களின் தேசத்தை மந்தைகள் படுத்துக்கொள்கிற இடமாகவும் மாற்றுவேன். அப்போது, நான் யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்”’” என்றார்.  “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் தேசத்தின் கதியைப் பார்த்து நீங்கள் கைகொட்டிச் சிரித்தீர்கள்,+ சந்தோஷத்தில் குதித்தீர்கள், கேலியும் கிண்டலும் செய்தீர்கள்.+  அதனால் நான் உங்களைத் தண்டித்து, சூறையாடப்பட்ட பொருள்களைப் போல மற்ற தேசங்களின் கையில் கொடுப்பேன். ஜனங்களின் மத்தியிலும் தேசங்களின் நடுவிலும் இல்லாதபடி உங்களை அழிப்பேன்.+ உங்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவேன். அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்.’  உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘“யூதா ஜனங்கள் மற்ற எல்லா ஜனங்களையும் போலத்தான் இருக்கிறார்கள்” என்று மோவாபும்+ சேயீரும்+ சொல்கின்றன.  அதனால், மோவாபின் எல்லைகளில் இருக்கிற நகரங்களை எதிரிகள் தாக்கும்படி செய்வேன். தேசத்துக்கு அழகு சேர்க்கும் பெத்-யெசிமோத்தையும், பாகால்-மெயோனையும், கீரியாத்தாயீமையும்கூட+ அவர்கள் தாக்கும்படி செய்வேன். 10  அம்மோனியர்களைப் பற்றிய நினைவையே அழிப்பதற்காக+ அவர்களை எப்படிக் கிழக்கத்திய ஜனங்களின் கையில் கொடுத்தேனோ+ அப்படியே மோவாபியர்களையும் கொடுத்துவிடுவேன். 11  மோவாபை நான் தண்டிப்பேன்.+ அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.’ 12  உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘ஏதோம் மிகப் பெரிய குற்றம் செய்திருக்கிறது. அது யூதா ஜனங்களைப் பழிவாங்கியிருக்கிறது.+ 13  அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் ஏதோமைத் தண்டித்து, மனுஷர்களோ மிருகங்களோ இல்லாதபடி அதை வெறிச்சோடிப்போக வைப்பேன்.+ தேமானிலிருந்து தேதான்வரை இருக்கிற எல்லாரும் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+ 14  ‘என்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களின் கையால் நான் ஏதோமைப் பழிவாங்குவேன்.+ அவர்கள் மூலமாக என்னுடைய கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் காட்டுவேன். ஏதோம் ஜனங்களை நான் பழிதீர்ப்பேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”’ 15  உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘தீராத பகையினால் பெலிஸ்தியர்கள் என்னுடைய ஜனங்களைப் பழிவாங்கவும் அழிக்கவும் சதி செய்தார்கள்.+ 16  அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் பெலிஸ்தியர்களைத் தண்டிப்பேன்.+ கிரேத்தியர்களை அழிப்பேன்.+ கடலோரத்தில் மீதியாக இருக்கிறவர்களை ஒழித்துக்கட்டுவேன்.+ 17  அவர்களைக் கடும் கோபத்தோடு தண்டித்து, பயங்கரமாகப் பழிவாங்குவேன். அவர்களை நான் பழிதீர்க்கும்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.”’”

அடிக்குறிப்புகள்