Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

எசேக்கியேல் 2:1-10

முக்கியக் குறிப்புகள்

  • எசேக்கியேல் தீர்க்கதரிசியாக அனுப்பப்படுகிறார் (1-10)

    • “அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி” (5)

    • புலம்பல் பாடல்கள் எழுதப்பட்ட ஒரு சுருள் காட்டப்படுகிறது (9, 10)

2  அவர் என்னிடம், “மனிதகுமாரனே,* எழுந்து நில். நான் உன்னிடம் பேச வேண்டும்”+ என்று சொன்னார்.  அப்போது அவருடைய சக்தி எனக்குள் வந்து என்னை எழுந்து நிற்க வைத்தது.+ அவர் பேசுவதை நான் கேட்டேன்.  அவர் என்னிடம், “மனிதகுமாரனே, நான் உன்னை இஸ்ரவேல் ஜனங்களிடம் அனுப்புகிறேன்.+ எனக்கு அடங்காத ஜனங்களிடம்+ உன்னை அனுப்புகிறேன். அவர்களும் அவர்களுடைய முன்னோர்களும் இன்றுவரை எனக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறார்கள்.+  கொஞ்சம்கூட அடங்காத, முரட்டுப் பிடிவாதமுள்ள ஜனங்களிடம்+ நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா இதைச் சொல்கிறார்’ என்று சொல்.  அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, அவர்கள் நடுவே ஒரு தீர்க்கதரிசி இருந்தார் என்று நிச்சயம் தெரிந்துகொள்வார்கள்.+ அவர்கள் அடங்காத ஜனங்கள்.+  மனிதகுமாரனே, நீ அவர்களைப் பார்த்து நடுங்காதே.+ அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பயப்படாதே. நீ முட்களுக்கும் தேள்களுக்கும் நடுவில் வாழ்ந்தாலும்*+ அவர்களுடைய மிரட்டலுக்குப் பயப்படாதே.+ அவர்களுடைய முகத்தைப் பார்த்துத் திகிலடையாதே.+ அவர்கள் அடங்காத ஜனங்கள்.  அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ நீ என்னுடைய செய்தியை அவர்களிடம் சொல்ல வேண்டும். அவர்கள் அடங்காத ஜனங்கள்.+  மனிதகுமாரனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். எனக்கு அடங்காத இந்த ஜனங்களைப் போல நீயும் அடங்காமல் போய்விடாதே. இப்போது உன் வாயைத் திறந்து, நான் கொடுப்பதைச் சாப்பிடு”+ என்று சொன்னார்.  அப்போது, ஒரு கை என் முன்னால்+ ஒரு சுருளை+ நீட்டியது. அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. 10  அவர் என் முன்னால் அதை விரித்தபோது, அதன் உள்ளேயும் வெளியேயும்+ புலம்பல் பாடல்களும்,* துக்கமும் வேதனையுமான செய்திகளும் எழுதப்பட்டிருந்ததைப்+ பார்த்தேன்.

அடிக்குறிப்புகள்

இந்த வார்த்தை எசேக்கியேல் புத்தகத்தில் 93 தடவை வருகிறது.
அல்லது, “ஜனங்கள் முரட்டுப் பிடிவாதம் பிடித்தாலும் உன்னை முள்போல் குத்தினாலும்.”
வே.வா., “ஒப்பாரிகளும்.”