Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

உபாகமம் 10:1-22

முக்கியக் குறிப்புகள்

  • மறுபடியும் இரண்டு கற்பலகைகள் செய்யப்படுகின்றன (1-11)

  • ஜனங்களிடம் யெகோவா கேட்கும் காரியங்கள் (12-22)

    • யெகோவாவுக்குப் பயந்து, அவர்மேல் அன்பு காட்ட வேண்டும் (12)

10  பின்பு, “யெகோவா என்னிடம், ‘முன்பு இருந்ததைப் போலவே வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொண்டு+ மலைமேல் ஏறி வா. நீ ஒரு மரப்பெட்டியையும் செய்துகொள்.  நீ உடைத்துப்போட்ட முதல் கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை இந்தக் கற்பலகைகளில் நான் எழுதுவேன். இவற்றை நீ அந்தப் பெட்டியில் வைக்க வேண்டும்’ என்று சொன்னார்.  அதனால், நான் வேல மரத்தால் ஒரு பெட்டியைச் செய்தேன். முன்பு இருந்ததைப் போலவே வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொண்டு, மலைமேல் ஏறிப் போனேன்.+  முன்பு நீங்கள் ஒன்றுகூடி வந்த நாளிலே,+ மலையில் எரிந்துகொண்டிருந்த நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா சொன்ன அதே வார்த்தைகளை,+ அதாவது முன்பு எழுதிய அதே பத்துக் கட்டளைகளை,+ அந்தக் கற்பலகைகளில் யெகோவா எழுதினார்.+ அதன்பின், அவற்றை என்னிடம் தந்தார்.  பின்பு நான் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து,+ நான் செய்து வைத்திருந்த பெட்டியில் அந்தக் கற்பலகைகளை வைத்தேன். யெகோவா எனக்குக் கட்டளை கொடுத்தபடியே அவை இன்றுவரை அதில் இருக்கின்றன.  பிற்பாடு, இஸ்ரவேலர்கள் பேரோத் பெனெ-யாக்கானிலிருந்து புறப்பட்டு மோசெராவுக்குப் போனார்கள். அங்கே ஆரோன் இறந்துபோனார், அங்குதான் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.+ அவருடைய மகன் எலெயாசார் அவருக்குப் பதிலாகக் குருத்துவச் சேவை செய்யத் தொடங்கினான்.+  அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு குத்கோதாவுக்குப் போனார்கள். பின்பு, குத்கோதாவிலிருந்து யோத்பாத்தாவுக்குப்+ போனார்கள். அது ஆறுகள் பாய்ந்தோடுகிற தேசம்.  அப்போது, யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கவும்,+ யெகோவாவின் சன்னிதியில் அவருக்குச் சேவை செய்யவும், அவருடைய பெயரில் ஆசீர்வாதம் வழங்கவும்+ லேவி கோத்திரத்தாரை யெகோவா தேர்ந்தெடுத்தார்.+ இன்றுவரை அவர்கள் இதையெல்லாம் செய்துவருகிறார்கள்.  அதனால்தான், லேவியர்களுக்கு அவர்களுடைய சகோதரர்களோடு எந்தப் பங்கும் சொத்தும் இல்லை. உங்கள் கடவுளாகிய யெகோவா சொன்னபடி, யெகோவாதான் அவர்களுடைய சொத்து.+ 10  முன்பு போலவே ராத்திரி பகலாக 40 நாட்கள் நான் மலையில் இருந்தேன்.+ அந்தச் சமயத்திலும் யெகோவா என் மன்றாட்டைக் கேட்டார்.+ யெகோவா உங்களை அழிக்காமல் விட்டுவிட்டார். 11  பின்பு யெகோவா என்னிடம், ‘நான் உங்களுடைய முன்னோர்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்தை+ நீங்கள் கைப்பற்றுவதற்காக, இப்போது ஜனங்களைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டுப் போ’ என்றார். 12  இஸ்ரவேலர்களே, உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களிடம் என்ன கேட்கிறார்?+ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து+ அவருடைய வழிகளில் நடக்கவும்,+ அவர்மேல் அன்பு காட்டவும், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் சேவை செய்யவும் வேண்டும் என்றுதானே கேட்கிறார்?+ 13  இன்று நான் சொல்கிற சட்டதிட்டங்களை உங்கள் நன்மைக்காகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றுதானே யெகோவா கேட்கிறார்?+ 14  இதோ! வானமும், ஏன் வானாதி வானமும், பூமியும் அதில் உள்ளவையும் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+ 15  ஆனாலும், உங்களுடைய முன்னோர்களிடம் மட்டும்தான் யெகோவா நெருக்கமாக இருந்து, அன்பு காட்டினார். அவர்களுடைய சந்ததியான உங்களைத்தான் தனக்காகத் தேர்ந்தெடுத்தார்.+ இன்று எத்தனையோ ஜனங்கள் இருந்தாலும் நீங்கள்தான் அவருடைய ஜனம். 16  அதனால், இப்போது உங்களுடைய இதயத்தைச் சுத்தமாக்குங்கள்,+ முரண்டுபிடிப்பதை விட்டுவிடுங்கள்.+ 17  உங்கள் கடவுளாகிய யெகோவாதான் தேவாதி தேவன்,+ எஜமான்களுக்கெல்லாம் எஜமான், வல்லமை படைத்தவர், அதிசயமும் அற்புதமுமானவர், யாருக்கும் பாரபட்சம் காட்டாதவர்,+ லஞ்சம் வாங்காதவர், 18  அப்பா இல்லாத பிள்ளைக்கும்* விதவைக்கும் நியாயம் செய்கிறவர்,+ உங்களோடு வாழ்கிற வேறு தேசத்து ஜனங்களை நேசிக்கிறவர்,+ அவர்களுக்கு உணவும் உடையும் தருகிறவர். 19  நீங்களும் அவர்களை நேசிக்க வேண்டும். ஏனென்றால், நீங்களும்கூட வேறு தேசத்தில், அதாவது எகிப்து தேசத்தில், குடியிருந்தீர்களே.+ 20  உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும், அவருக்கு மட்டும்தான் சேவை செய்ய வேண்டும்,+ அவரையே உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும், அவருடைய பெயரில்தான் சத்தியம் செய்ய வேண்டும். 21  அவரைத்தான் நீங்கள் புகழ வேண்டும்.+ அவர்தான் உங்கள் கடவுள், அவர்தான் உங்கள் கண் முன்னால் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தவர்.+ 22  எகிப்துக்குப் போன உங்கள் முன்னோர்கள் வெறும் 70 பேர்தான்.+ ஆனால், இன்றைக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை வானத்து நட்சத்திரங்கள் போல ஏராளமாகப் பெருக வைத்திருக்கிறார்”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அநாதைக்கும்.”