எபிரெய வேதாகமம் (“பழைய ஏற்பாடு”)

ஐந்தாகமம் (5 புத்தகங்கள்):

ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்

படைப்புமுதல் பூர்வ கால இஸ்ரவேல் தேசம் உருவானதுவரை

சரித்திரப் புத்தகங்கள் (12 புத்தகங்கள்):

யோசுவா, நியாயாதிபதிகள், ரூத்

வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் இஸ்ரவேலர்கள் நுழைந்ததைப் பற்றியும், அதற்குப்பின் நடந்த சம்பவங்களைப் பற்றியும்

1, 2 சாமுவேல்; 1, 2 ராஜாக்கள்; 1, 2 நாளாகமம்

எருசலேமின் அழிவுவரை இஸ்ரவேல் தேசத்தின் சரித்திரம்

எஸ்றா, நெகேமியா, எஸ்தர்

பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப்போன யூதர்கள் திரும்பி வந்தபின் நடந்த சம்பவங்கள்

கவிதைநடை புத்தகங்கள் (5 புத்தகங்கள்):

யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு

பொன்மொழிகளும் பாடல்களும் அடங்கிய தொகுப்பு

தீர்க்கதரிசனப் புத்தகங்கள் (17 புத்தகங்கள்):

ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல், தானியேல், ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா

கடவுளுடைய மக்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்

 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் (“புதிய ஏற்பாடு”)

நான்கு சுவிசேஷங்கள் (4 புத்தகங்கள்):

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்

இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்

அப்போஸ்தலரின் செயல்கள் (1 புத்தகம்):

கிறிஸ்தவ சபையின் ஆரம்பம், மிஷனரி பயணங்கள்

கடிதங்கள் (21 புத்தகங்கள்):

ரோமர், 1, 2 கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், 1, 2 தெசலோனிக்கேயர்

கிறிஸ்தவ சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள்

1, 2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன்

கிறிஸ்தவர்கள் சிலருக்குத் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்ட கடிதங்கள்

எபிரெயர், யாக்கோபு, 1, 2 பேதுரு 1, 2, 3 யோவான், யூதா

கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் எழுதப்பட்ட கடிதங்கள்

வெளிப்படுத்துதல் (1 புத்தகம்):

எதிர்காலத்தில் நடக்கப்போவதைப் பற்றி அப்போஸ்தலன் யோவானுக்குக் காட்டப்பட்ட தரிசனங்கள்