“வேகமாக ஓடுகிறவர்கள் எல்லா சமயத்திலும் முதலில் வருவதில்லை, பலசாலிகள் எல்லா சமயத்திலும் போரில் ஜெயிப்பதில்லை, ஞானமுள்ளவர்களிடம் எல்லா சமயத்திலும் உணவு இருப்பதில்லை, புத்திசாலிகளிடம் எல்லா சமயத்திலும் சொத்து குவிந்திருப்பதில்லை, அறிவாளிகளுக்கு எல்லா சமயத்திலும் வெற்றி கிடைப்பதில்லை. ஏனென்றால், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கின்றன.”

பிரசங்கி 9:11

“ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.”

ரோமர் 5:12

“பிசாசின் செயல்களை ஒழிப்பதற்காகத்தான் கடவுளுடைய மகன் வந்தார்.”

1 யோவான் 3:8

“இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.”

1 யோவான் 5:19