“அவர்களுடைய உயிர்சக்தி போய்விடுகிறது, அவர்கள் மண்ணுக்குத் திரும்புகிறார்கள். அதே நாளில் அவர்களுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன.”

சங்கீதம் 146:4

“உயிரோடு இருக்கிறவர்களுக்குத் தாங்கள் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும் என்பது தெரியும். ஆனால், இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது . . . உன் கைகளால் எதைச் செய்தாலும் அதை முழு பலத்தோடு செய். ஏனென்றால், நீ போய்ச்சேரும் கல்லறையில் வேலை செய்யவோ திட்டம் போடவோ முடியாது; அங்கே அறிவோ ஞானமோ இல்லை.”

பிரசங்கி 9:5, 10

“[இயேசு] இப்படிச் சொல்லிவிட்டு, ‘நம்முடைய நண்பன் லாசரு தூங்குகிறான், அவனை எழுப்புவதற்காக நான் அங்கே போகப்போகிறேன்’ என்று சொன்னார். லாசரு இறந்துவிட்டதைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தார். அவர்களோ, தூங்குவதைப் பற்றி அவர் பேசுவதாக நினைத்துக்கொண்டார்கள். அதனால் இயேசு, ‘லாசரு இறந்துவிட்டான்’ என்று அவர்களிடம் வெளிப்படையாகவே சொன்னார்.”

யோவான் 11:11, 13, 14