கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் உள்ள விஷயங்களை இந்தப் பகுதியில் படிப்போம். ஒரு சின்ன ஊரில் வாழ்ந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் இயேசு பிறந்தார். அவருடைய அப்பா மர வேலை செய்தார். அவரோடு சேர்ந்து இயேசு வேலை செய்தார். இயேசுதான் மனிதர்களைக் காப்பாற்றப் போகிறவர். பரலோக அரசாங்கத்தின் ராஜாவாக இயேசுவை யெகோவா தேர்ந்தெடுத்திருந்தார். இயேசுமேல் யெகோவாவுக்கு ரொம்ப அன்பும் அக்கறையும் இருந்தது. அதனால், கடவுள்பக்தியுள்ள ஒரு குடும்பத்தில், அன்பான சூழலில் அவர் வளரும்படி பார்த்துக்கொண்டார் என்பதை உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள். ஏரோது இயேசுவைக் கொன்றுவிடாதபடி யெகோவா எப்படிக் காப்பாற்றினார் என்பதையும், யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதையும் சொல்லுங்கள். இயேசுவுக்கு வழியைத் தயார்படுத்த யோவானை யெகோவா  தேர்ந்தெடுத்ததைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். யெகோவாவின் ஞானமான ஆலோசனைகள் தனக்குப் பிடிக்கும் என்பதை இயேசு சின்ன வயதிலிருந்தே எப்படிக் காட்டினார் என்று எடுத்துச் சொல்லுங்கள்.