Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்

தம்மிடம் நெருங்கி வரும்படி கடவுள் உங்களை அழைக்கிறார். இந்தப் புத்தகம் அதை எப்படிச் செய்யலாம் என்பதை பைபிளிலிருந்து விளக்கிக்காட்டும்.

முகவுரை

யெகோவா தேவனிடம் அதிகமதிகமாக நெருங்கிச் செல்லவும் ஒருபோதும் முறியாத பிணைப்பை அவருடன் ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும்.

அதிகாரம் 1

‘இதோ! இவரே நம் கடவுள்’

கடவுளுடைய பெயர் ஏற்கெனவே தெரிந்திருந்தும் மோசே ஏன் அவருடைய பெயரைக் கேட்டார்?

அதிகாரம் 2

உண்மையிலேயே ‘கடவுளிடம் நெருங்கி வர’ முடியுமா?

யெகோவா தேவன், வானத்தையும் பூமியையும் படைத்தவர், நமக்கு ஓர் அழைப்பையும் வாக்குறுதியையும் கொடுக்கிறார்.

அதிகாரம் 3

“யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்”

பைபிள் ஏன் அழகோடு பரிசுத்தத்தை இணைத்துப் பேசுகிறது?

அதிகாரம் 4

“யெகோவா . . . மிகுந்த வல்லமையுள்ளவர்”

கடவுளுடைய வல்லமையைப் பார்த்து நாம் பயப்பட வேண்டுமா? பயப்பட வேண்டாம், பயப்பட வேண்டும் என்பதே இதற்கான பதில்.

அதிகாரம் 5

படைக்கும் வல்லமை—‘வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர்’

மிகப் பெரிய சூரியன்முதல் சின்னஞ்சிறிய தேன்சிட்டுவரை, கடவுளுடைய படைப்புகள் அனைத்தும் அவரைப் பற்றிய முக்கியமான விஷயங்களை நமக்கு சொல்லித்தர முடியும்.

அதிகாரம் 6

அழிக்கும் வல்லமை—‘யெகோவா யுத்தத்தில் வல்லவர்’

‘சமாதானத்தின் தேவனால்’ எப்படி தெய்வீக போரை நடத்த முடியும்?

அதிகாரம் 7

காக்கும் வல்லமை,—‘தேவன் நமக்கு அடைக்கலம்’

கடவுள் நம்மை இரண்டு விதங்களில் பாதுகாக்கிறார். அதில் ஒன்று, ரொம்பவே முக்கியமானது.

அதிகாரம் 8

புதுப்பிக்கும் வல்லமை—யெகோவா ‘சகலத்தையும் புதிதாக்குகிறார்’

உண்மை வழிப்பாட்டை யெகோவா ஏற்கெனவே புதுப்பித்திருக்கிறார். எதிர்காலத்தில் எதைப் புதுப்பிப்பார்?

அதிகாரம் 9

‘தெய்வ வல்லமையான கிறிஸ்து’

இயேசுவின் அற்புதங்களும் போதனைகளும் யெகோவாவைப் பற்றி என்ன கற்பிக்கின்றன?

அதிகாரம் 10

வல்லமையை பயன்படுத்துவதில் ‘தேவனைப் பின்பற்றுங்கள்’

நீங்கள் நினைத்ததைவிட உங்களுக்கு அதிக சக்தி இருக்கலாம். அதை எப்படி சரியான விதத்தில் பயன்படுத்துவது?

அதிகாரம் 11

“அவர் வழிகளெல்லாம் நீதி”

கடவுளுடைய நீதி எப்படி அவரிடம் நம்மை ஈர்க்கும் குணமாக இருக்கிறது?

அதிகாரம் 12

“தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா?”

யெகோவா அநீதியை வெறுக்கிறார் என்றால், உலகத்தில் ஏன் இவ்வளவு அநீதி இருக்கிறது?

அதிகாரம் 13

“யெகோவாவின் சட்டம் பரிபூரணமானது”

சட்ட அமைப்பு எப்படி அன்பை முன்னேற்றுவிக்க முடியும்?

அதிகாரம் 14

‘அநேகருக்கான மீட்கும்பொருளை’ யெகோவா அளித்தார்

ஒரு எளிய ஆனால் முக்கியமான போதனை நீங்கள் கடவுளிடம் நெருங்கிப் வருவதற்கு உதவும்.

அதிகாரம் 15

இயேசு ‘பூமியில் நீதியை நிலைநாட்டுகிறார்’

பைபிள் காலங்களில் இயேசு எப்படி நீதியை வெளிக்காட்டியிருக்கிறார்? அதை இப்போது எப்படிச் செய்கிறார்? எதிர்காலத்தில் எப்படி நீதியை நிறைவேற்றுவார்?

அதிகாரம் 16

கடவுளோடு நடக்கையில் ‘நீதியை கடைப்பிடியுங்கள்’

“நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” என்று இயேசு ஏன் எச்சரித்தார்?

அதிகாரம் 17

‘ஆ! தேவனுடைய ஞானத்தின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!’

தம்முடைய அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் பகுத்துணர்வையும்விட யெகோவாவின் ஞானம் ஏன் மேன்மையானது?

அதிகாரம் 18

‘தேவ வசனத்தில்’ ஞானம்

கடவுளே பைபிளை எழுதுவதற்குப் பதிலாகவும் தேவதூதர்களைப் பயன்படுத்தி எழுதுவதற்குப் பதிலாகவும் ஏன் மனிதர்களைப் பயன்படுத்தினார்?

அதிகாரம் 19

‘பரிசுத்த இரகசியத்தில் தேவ ஞானம்’

முன்பு மறைத்துவைக்கப்பட்ட என்ன பரிசுத்த இரகசியம் இப்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது?

அதிகாரம் 20

“இருதயத்தில் ஞானமுள்ளவர்”—ஆனாலும் மனத்தாழ்மையுள்ளவர்

சர்வலோகப் பேரரசராகிய யெகோவா எப்படித் தாழ்மையாக இருக்க முடியும்?

அதிகாரம் 21

‘கடவுளிடமிருந்து வரும் ஞானத்தை’ இயேசு வெளிக்காட்டுகிறார்

இயேசுவை கைது செய்து வரும்படி அனுப்பப்பட்ட சேவகர்கள் வெறுங்கையோடு திரும்பி போவதற்கு, அவருடைய போதனைகள் எப்படி உதவின?

அதிகாரம் 22

‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ வாழ்க்கையில் வெளிக்காட்டுகிறீர்களா?

தெய்வீக ஞானத்தை வளர்த்துக்கொள்ள பைபிள் நான்கு வழிகளில் உங்களுக்கு உதவுகிறது

அதிகாரம் 23

‘அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தினார்’

‘கடவுள் அன்பாகவே இருக்கிறார்’ என்பதன் அர்த்தம் என்ன?

அதிகாரம் 24

‘தேவனுடைய அன்பைவிட்டு நம்மை எதுவும் பிரிக்க முடியாது’

நீங்கள் லாயக்கற்றவர்கள் அல்லது கடவுளுடைய அன்பைப் பெற தகுதியற்றவர்கள் என்ற எண்ணத்தை அகற்றுங்கள்.

அதிகாரம் 25

‘நமது தேவனுடைய உருக்கமான இரக்கம்’

தாய் தன் குழந்தையிடம் காட்டும் உணர்வுகளைப் போல எப்படி கடவுளுடைய உணர்வுகளும் இருக்கின்றன?

அதிகாரம் 26

‘மன்னிக்க தயாராயிருக்கிற’ கடவுள்

கடவுள் எல்லாவற்றையும் ஞாபகத்தில் வைக்கிறார் என்றால் நம்முடைய பாவங்களை எப்படி மன்னித்து மறப்பார்?

அதிகாரம் 27

‘அவரது நற்குணம் எவ்வளவு மகத்தானது!’

கடவுளுடைய நற்குணம் என்றால் என்ன?

அதிகாரம் 28

“நீர் ஒருவரே உண்மைப் பற்றுறுதிமிக்கவர்”

கடவுளுடைய உண்மைத்தன்மையைவிட உண்மைப் பற்றுறுதி ஏன் உயர்ந்தது?

அதிகாரம் 29

‘கிறிஸ்துவின் அன்பை அறிந்துகொள்ளுதல்’

இயேசுவுடைய அன்பின் மூன்று அம்சங்கள் யெகோவாவின் அன்பை அப்படியே பிரதிபலிக்கின்றன.

அதிகாரம் 30

‘தொடர்ந்து அன்பிலே நடவுங்கள்’

அன்பை வெளிக்காட்டும் 14 வழிகளைப் பற்றி ஒன்று கொரிந்தியர் புத்தகம் சொல்கிறது.

அதிகாரம் 31

“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவரும் உங்களிடம் நெருங்கி வருவார்”

என்ன மிக முக்கியமான கேள்வியை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்? அதற்கு எப்படிப் பதிலளிப்பீர்கள்?