நெருங்கிய நண்பரா இருக்கிறவங்க அடிக்கடி பேசிப்பாங்க. போன் பண்ணுவாங்க; மெசேஜ் அனுப்புவாங்க; லெட்டராவது போடுவாங்க. அதே மாதிரி, கடவுளோட நண்பரா இருக்கனும்னா அவர்கிட்ட அடிக்கடி பேசனும். ஆனா, கடவுள்கிட்ட எப்படி பேச முடியும்?

ஜெபம் செஞ்சா நாம கடவுள்கிட்ட பேச முடியும். அவர்கிட்ட பேசும்போது பயபக்தியோடு பேசனும். ஏன்னா, அவர் ஒன்னும் சாதாரண மனுஷன் இல்ல, எல்லாத்தையும் படைச்சவர். கடவுள் நம்ம ஜெபத்த கேட்கனும்னா நாம 3 விஷயம் செய்யனும்.

(1) “உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்கு தெரியப்படுத்துங்கள்”னு பைபிள் சொல்லுது. (பிலிப்பியர் 4:6) அப்படினா, நாம யெகோவாகிட்டதான் ஜெபம் செய்யனும். இயேசுகிட்டயோ புனிதர்கிட்டயோ சிலைகிட்டயோ ஜெபம் செய்யக் கூடாது. (யாத்திராகமம் 20:4, 5) (2) “என் பெயரில் தகப்பனிடம் எதைக் கேட்டாலும் அதை அவர் உங்களுக்குத் தருவார்”னு இயேசு சொன்னார். (யோவான் 15:16) அதனால, நாம இயேசுவோட பெயர்ல யெகோவாகிட்ட ஜெபம் செய்யனும். * (அடிக்குறிப்பை பாருங்க.) (3) “கடவுளுடைய சித்தத்திற்கு [அதாவது, விருப்பத்திற்கு] இசைவாக நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்”னு பைபிள் சொல்லுது. (1 யோவான் 5:14) அப்படினா, கடவுளுக்கு பிடிக்காத எதையும் ஜெபத்தில கேட்கக் கூடாது. * (அடிக்குறிப்பை பாருங்க.)

நெருங்கிய நண்பர்கள் அடிக்கடி பேசிப்பாங்க

ரெண்டு பேரும் மனசுவிட்டு பேசுனாதான் நெருங்கிய நண்பர்களா இருக்க முடியும். அதனால, நாம மட்டும் கடவுள்கிட்ட பேசினா போதாது; கடவுள் பேசுறதையும் நாம கேட்கனும். கடவுள் எப்படி நம்மகிட்ட பேசுவார்?

பைபிள படிச்சா யெகோவா நம்மகிட்ட பேசுறத கேட்க முடியும். (2 தீமோத்தேயு 3:16, 17) எப்படி? உங்க நண்பர் எழுதின கடிதத்த படிக்கும்போது, அவரே உங்ககிட்ட நேர்ல பேசுற மாதிரி இருக்கும். அதேபோல, பைபிள் என்ற கடிதம் மூலமா யெகோவா நம்மகிட்ட பேசுறார். இதை பத்தி ஜீனா இப்படி சொல்றாங்க: “கடவுள்கிட்ட நண்பரா ஆகனும்னா பைபிள நல்லா படிக்கனும். தினமும் பைபிள் படிக்கிறதுனால கடவுள என்னோட நண்பரா பார்க்க முடியிது.” நீங்க தினமும் பைபிள் படிக்கிறீங்களா? அது மூலமா யெகோவா பேசுறத கேட்கிறீங்களா? அப்படி செஞ்சா நீங்க கடவுளோட நண்பரா ஆகலாம்! (w14-E 12/01)

^ பாரா. 5 இயேசுவோட பெயர்ல ஜெபம் பண்றதுனா, நம்ம ஜெபத்த இயேசு கேட்டுட்டு, அதை அவர் யெகோவாகிட்ட சொல்றார்னு அர்த்தம் இல்ல. ‘இயேசு எனக்காக உயிரை கொடுத்திருக்கிறார், அதனாலதான் என்னால யெகோவாகிட்ட பேச முடியிது’னு நாம ஏத்துக்கிறோம்னு அர்த்தம். இயேசுவோட பெயர்ல ஜெபம் செய்யும்போது நாம அவரோட சீடர் என்பதையும் ஏத்துக்கிறோம்.

^ பாரா. 5 ஜெபம் செய்றத பத்தி தெரிஞ்சிக்க பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில 17-வது பாடத்த பாருங்க. இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம்.