சங்கீதம் 48:1-14
பாடல். கோராகுவின் மகன்களுடைய+ சங்கீதம்.
48 நம் கடவுளுடைய நகரத்திலும் பரிசுத்த மலையிலும்யெகோவா மகத்தானவராக இருக்கிறார், எல்லா புகழையும் பெறத் தகுதியானவராக இருக்கிறார்.
2 வடகோடியில் சீயோன் மலை அழகாக உயர்ந்து நிற்கிறது.அது உலகத்துக்கே சந்தோஷம் தருகிறது.+அதுதான் மகா ராஜாவின் நகரம்.+
3 அதன் கோட்டைகளில்கடவுள் தன்னையே பாதுகாப்பான* அடைக்கலமாகக் காட்டியிருக்கிறார்.+
4 ராஜாக்கள் ஒன்றுகூடி வந்தார்கள்.எல்லாரும் அணிவகுத்து வந்தார்கள்.
5 ஆனால், நகரத்தைப் பார்த்ததும் அதிர்ந்துபோனார்கள்.
பயத்தில் தலைதெறிக்க ஓடினார்கள்.
6 அங்கே குலைநடுங்கிப் போனார்கள்.பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப் போல வேதனைப்பட்டார்கள்.
7 நீங்கள் கிழக்குக் காற்றை அனுப்பி தர்ஷீசின் கப்பல்களை உடைத்துப்போடுகிறீர்கள்.
8 நாங்கள் காதால் கேட்டதை இப்போது கண்ணால் பார்த்துவிட்டோம்.பரலோகப் படைகளின் யெகோவாவுடைய நகரத்திலே,
எங்கள் கடவுளின் நகரத்திலே அதைப் பார்த்துவிட்டோம்.
கடவுள் அந்த நகரத்தை என்றென்றும் உறுதியாக நிலைநிறுத்துவார்.+ (சேலா)
9 கடவுளே, நாங்கள் உங்களுடைய ஆலயத்திலேஉங்களுடைய மாறாத அன்பைப் பற்றி யோசித்துப் பார்க்கிறோம்.+
10 கடவுளே, உங்களுடைய பெயரைப் போலவேஉங்களுடைய புகழும் பூமியெங்கும் எட்டுகிறது.+
உங்களுடைய வலது கை நீதியால் நிறைந்திருக்கிறது.+
11 உங்களுடைய நீதித்தீர்ப்புகளால் சீயோன் மலை+ சந்தோஷப்படட்டும்,யூதாவின் ஊர்கள்* பூரித்துப்போகட்டும்.+
12 சீயோனைச் சுற்றி நடந்து வாருங்கள்.அதன் கோட்டைகளை+ எண்ணுங்கள்.
13 அதன் அரண்களைக் கவனித்துப் பாருங்கள்.+
அதன் பலமான கோட்டைகளை ஆராய்ந்து பாருங்கள்.அப்போதுதான், வருங்காலத் தலைமுறைகளுக்கு அதைப் பற்றிச் சொல்ல முடியும்.
14 இந்தக் கடவுள்தான் என்றென்றும் நம் கடவுள்.+
எல்லா காலத்துக்கும்* அவரே நம்மை வழிநடத்துவார்.+