ஏசாயா 52:1-15

  • விழித்தெழு, சீயோனே! (1-12)

    • நல்ல செய்தி சொல்பவர்களின் பாதங்கள் அழகாக இருக்கின்றன (7)

    • சீயோனின் காவல்காரர்கள் ஒன்றுசேர்ந்து குரலெழுப்புகிறார்கள் (8)

    • யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கிறவர்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும் (11)

  • யெகோவாவின் ஊழியர் உயர்த்தப்படுவார் (13-15)

    • உருக்குலைக்கப்பட்ட தோற்றம் (14)

52  விழித்தெழு! சீயோனே, விழித்தெழு!+ உன் பலத்தைத் திரட்டு!+ பரிசுத்த நகரமான எருசலேமே, அழகான உடைகளை உடுத்திக்கொள்!+ விருத்தசேதனம் செய்யாதவர்களும் அசுத்தமானவர்களும் இனி உன்னிடம் வர மாட்டார்கள்.+   எருசலேமே, நீ எழுந்து, மண்ணை உதறிவிட்டு, சிம்மாசனத்தில் உட்காரு. சிறைபிடிக்கப்பட்ட சீயோன் மகளே, உன் கழுத்திலுள்ள கயிறுகளைக் கழற்றிவிடு.+   யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நீ விலை இல்லாமல் விற்கப்பட்டாய்,+பணம் இல்லாமல் மீட்டுக்கொள்ளப்படுவாய்.”+   உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: “என் ஜனங்கள் முதலில் எகிப்துக்குப் போய் அங்கே வேறு தேசத்து ஜனங்களைப் போல வாழ்ந்தார்கள்.+அதன் பிறகு, அசீரியா காரணமே இல்லாமல் அவர்களைக் கொடுமைப்படுத்தியது.”   “இப்போது இந்த இடத்தில் நான் என்ன செய்வது?” என்று யெகோவா கேட்கிறார். “என் ஜனங்கள் விலை இல்லாமல் பிடித்துக்கொண்டு போகப்பட்டார்கள். அவர்களை ஆளுகிறவர்கள் வெற்றி கிடைத்த பெருமையில் ஆரவாரம் செய்கிறார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.“நாள் முழுவதும் என் பெயர் அவமதிக்கப்படுகிறது.+   அதனால், என் பெயரை என் ஜனங்கள் தெரிந்துகொள்வார்கள்.+இதையெல்லாம் சொல்லியிருப்பது நான்தான் என்பதை அந்த நாளில் அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். நானேதான் இதையெல்லாம் சொல்லியிருக்கிறேன்!”   நல்ல செய்தி சொல்ல மலைகள்மேல் ஏறி வருகிறவருடைய பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!+“விடிவுகாலம் வரப்போகிறது!சீக்கிரத்தில் சமாதானம்+ கிடைக்கப்போகிறது!கடவுள் மீட்பு தரப்போகிறார்!” என்று அவர் அறிவிக்கிறார்.சீயோனைப் பார்த்து, “உன் கடவுள் ராஜாவாகிவிட்டார்!”+ என்று சொல்கிறார்.   இதோ, உன் காவல்காரர்கள் குரலெழுப்புவதைக் கேள்!அவர்கள் ஒன்றுசேர்ந்து சந்தோஷமாகக் குரலெழுப்புகிறார்கள். சீயோன் ஜனங்களை யெகோவா மறுபடியும் ஒன்றுசேர்ப்பதை அவர்கள் கண்கூடாகப் பார்ப்பார்கள்.   எருசலேமின் இடிபாடுகளே,+ சந்தோஷம் பொங்கப் பாடுங்கள்.யெகோவா அவருடைய ஜனங்களுக்கு ஆறுதல் தந்திருக்கிறார்;+ எருசலேமை விடுவித்திருக்கிறார்.+ 10  யெகோவா எல்லா தேசங்களுக்கும் முன்பாகத் தன்னுடைய பரிசுத்தமான கையின் பலத்தைக் காட்டியிருக்கிறார்.+நம் கடவுள் தரும் மீட்பைப் பூமியெங்கும் இருக்கிறவர்கள் பார்ப்பார்கள்.+ 11  புறப்படுங்கள், புறப்படுங்கள், அங்கிருந்து வெளியே வாருங்கள்;+ அசுத்தமான எதையும் தொடாதீர்கள்!+ யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே,+அங்கிருந்து கிளம்பி வாருங்கள்;+ உங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். 12  நீங்கள் பதற வேண்டாம்.தலைதெறிக்க ஓட வேண்டாம்.ஏனென்றால், இஸ்ரவேலின் கடவுளான யெகோவா உங்களைப் பாதுகாப்பார்.உங்களுக்கு முன்னால் போயும் பாதுகாப்பார்,+ பின்னால் வந்தும் பாதுகாப்பார்.+ 13  என் ஊழியர்+ விவேகமாக* நடந்துகொள்வார். அவர் உயர்த்தப்படுவார்.மிகுந்த மேன்மையும் சிறப்பும் அடைவார்.+ 14  அவருடைய தோற்றம் வேறெந்த மனுஷனுடைய தோற்றத்தையும்விட ரொம்பவே உருக்குலைக்கப்பட்டதையும்,அவருடைய உருவம் வேறெந்த மனிதனுடைய உருவத்தையும்விட ரொம்பவே கோரமாக்கப்பட்டதையும் பார்த்து,பலர் அதிர்ச்சி அடைந்தார்கள். 15  அதுபோல் அவர் பல தேசத்தாரை அதிர்ச்சி அடையச் செய்வார்.+ அவருக்கு முன்னால் ராஜாக்கள் வாயடைத்துப் போவார்கள்.+ஏனென்றால், தங்களுக்குச் சொல்லப்படாத சம்பவங்களைப் பார்ப்பார்கள்.கேள்விப்படாத விஷயங்களைக் கேட்பார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடு.”