1 நாளாகமம் 9:1-44

9  இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் தங்களுடைய வம்சத்தின்படி பதிவு செய்யப்பட்டார்கள். அவர்களுடைய பெயர்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. யூதா மக்கள் கடவுளுக்கு உண்மையாக இல்லாததால்தான் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.+  இஸ்ரவேல் மக்கள் சிலரும் குருமார்களும் லேவியர்களும் ஆலயப் பணியாளர்களும்தான்*+ முதன்முதலில் தங்களுடைய சொந்த தேசத்துக்குத் திரும்பிவந்தார்கள்.  யூதா,+ பென்யமீன்,+ எப்பிராயீம், மனாசே ஆகியோரின் வம்சத்தைச் சேர்ந்த சிலர் எருசலேமில் குடியேறினார்கள். அவர்களைப் பற்றிய விவரம்:  யூதாவின் மகனான பாரேசின்+ வம்சத்தில் வந்த ஊத்தாய்; இந்த ஊத்தாய் அம்மியூத்தின் மகன், அம்மியூத் உம்ரியின் மகன், உம்ரி இம்ரியின் மகன், இம்ரி பானியின் மகன்.  சேலாவின் வம்சத்தில் வந்த அசாயாவும் அவருடைய மகன்களும்; அசாயா மூத்த மகனாக இருந்தார்.  சேராகுவின்+ வம்சத்தில் வந்தவர்களில் யெகுவேல், அவர்களுடைய சகோதரர்கள் 690 பேர்.  பென்யமீன் வம்சத்தைச் சேர்ந்த சல்லு என்பவர் மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் ஒதாவியாவின் மகன், ஒதாவியா அசெனூவாவின் மகன்.  இப்னெயா என்பவர் எரோகாமின் மகன். ஏலா என்பவர் உசீயின் மகன், உசீ மிக்கிரியின் மகன். மெசுல்லாம் என்பவர் செப்பத்தியாவின் மகன், செப்பத்தியா ரெகுவேலின் மகன், ரெகுவேல் இப்னியாவின் மகன்.  வம்சாவளிப் பட்டியலின்படி இவர்களுடைய சகோதரர்கள் மொத்தம் 956 பேர். இவர்கள் எல்லாரும் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின் தலைவர்கள். 10  குருமார்கள்: யெதாயா, யோயாரீப், யாகீன்,+ 11  அசரியா; இந்த அசரியா இல்க்கியாவின் மகன், இல்க்கியா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் சாதோக்கின் மகன், சாதோக் மெராயோத்தின் மகன், மெராயோத் அகிதூப்பின் மகன், இந்த அகிதூப் உண்மைக் கடவுளுடைய ஆலய அதிகாரிகளில் ஒருவர். 12  அதாயா என்பவர் எரோகாமின் மகன், எரோகாம் பஸ்கூரின் மகன், பஸ்கூர் மல்கீயாவின் மகன். மாசாய் என்பவர் ஆதியேலின் மகன், ஆதியேல் யாசெராவின் மகன், யாசெரா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் மெசில்லேமித்தின் மகன், மெசில்லேமித் இம்மேரின் மகன். 13  அதோடு, இந்தக் குருமார்களுடைய சகோதரர்களும் வந்தார்கள்; இவர்கள் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின் தலைவர்களாக இருந்தார்கள்; இந்த 1,760 பேரும் உண்மைக் கடவுளுடைய ஆலயத்தில் வேலை செய்தார்கள். இவர்கள் பலசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தார்கள். 14  லேவியர்கள்: மெராரி வம்சத்தைச் சேர்ந்த செமாயா+ என்பவர் அசூப்பின் மகன், அசூப் அசரீக்காமின் மகன், அசரீக்காம் அஷபியாவின் மகன். 15  பக்பக்கார், ஏரேஷ், காலால், மத்தனியா என்பவர் மிக்காவின் மகன், மிக்கா சிக்ரியின் மகன், சிக்ரி ஆசாப்பின் மகன். 16  ஒபதியா என்பவர் செமாயாவின் மகன், செமாயா காலாலின் மகன், காலால் எதித்தூனின் மகன். பெரகியா என்பவர் ஆசாவின் மகன், ஆசா எல்க்கானாவின் மகன்; இவர் நெத்தோபாத்தியர்களின் கிராமங்களில் தங்கியிருந்தார்.+ 17  வாயிற்காவலர்கள்:+ சல்லூம், அக்கூப், தல்மோன், அகீமான். இவர்களுடைய சகோதரரான சல்லூம் இவர்களுக்குத் தலைவராக இருந்தார்; 18  அந்தச் சமயம்வரை கிழக்கே அரண்மனை வாசலில்+ காவல்காத்து வந்தார். லேவியர்கள் குடியிருந்த பகுதிகளின் வாயிற்காவலர்கள் இவர்களே. 19  கோராகுவின் கொள்ளுப்பேரனும் எபியாசாப்பின் பேரனும் கோரேயின் மகனுமாகிய சல்லூமும் அவருடைய தந்தைவழியில் வந்த சகோதரர்களாகிய கோராகியர்களும் காவல்காக்கும் வேலைகளை மேற்பார்வை செய்துவந்தார்கள், அதோடு, வழிபாட்டுக் கூடாரத்தையும் காவல்காத்து வந்தார்கள்; யெகோவாவுடைய கூடாரத்தின் வாசலில் காவல்காக்கும் வேலையை அவர்களுடைய முன்னோர்கள் மேற்பார்வை செய்துவந்தார்கள். 20  முற்காலத்தில் எலெயாசாரின்+ மகன் பினெகாஸ்+ அவர்களுக்குத் தலைவராக இருந்தார். யெகோவா அவருக்குத் துணையாக இருந்தார். 21  மெசெலேமியாவின் மகன் சகரியா+ சந்திப்புக் கூடாரத்தின் வாயிற்காவலராக இருந்தார். 22  வழிபாட்டுக் கூடாரத்தின் வாயிற்காவலர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மொத்தம் 212 பேர். வம்சாவளிப் பட்டியலில் குறிப்பிட்டபடி, இவர்கள் தங்களுடைய பகுதிகளில் குடியிருந்தார்கள்.+ இவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்ததால், தாவீதும் இறைவாக்கு சொல்பவரான+ சாமுவேலும் இவர்களை இந்த வேலையில் நியமித்திருந்தார்கள். 23  இவர்களும் இவர்களுடைய மகன்களும் யெகோவாவுடைய வீட்டின், அதாவது கூடாரத்தின், வாசலைக் காவல்காக்கும் வேலையை மேற்பார்வை செய்துவந்தார்கள்.+ 24  கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு பக்கமும் வாயிற்காவலர்கள் நின்றார்கள்.+ 25  இவர்களுடைய சகோதரர்கள் தங்களுடைய குடியிருப்புகளிலிருந்து அவ்வப்போது அங்கே வந்து ஏழு நாட்கள் இவர்களுடன் வேலை செய்தார்கள். 26  நம்பிக்கைக்குரிய நான்கு பேர் தலைமை வாயிற்காவலர்களாக இருந்தார்கள். உண்மைக் கடவுளின் வீட்டிலுள்ள சாப்பாட்டு அறைகளையும் பொக்கிஷ அறைகளையும் காவல்காக்கும் பொறுப்பு இந்த லேவியர்களுக்கு இருந்தது.+ 27  ராத்திரி முழுக்க உண்மைக் கடவுளின் வீட்டைச் சுற்றிலும் நின்று அவர்கள் காவல் காப்பார்கள்; ஏனென்றால், காவல்காக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருந்தது, சாவியும் அவர்களிடம்தான் இருந்தது. அதனால், தினமும் காலையில் கதவுகளைத் திறந்துவிடுவார்கள். 28  இவர்களில் சிலர் பரிசுத்த பாத்திரங்களுக்குப் பொறுப்பாளிகளாக இருந்தார்கள்.+ அந்தப் பாத்திரங்களை உள்ளே வைக்கும்போதும் வெளியே எடுக்கும்போதும் எண்ணினார்கள். 29  அந்தப் பாத்திரங்களுக்கும் மற்ற எல்லா பரிசுத்த பாத்திரங்களுக்கும்+ நைசான மாவுக்கும்+ திராட்சமதுவுக்கும்+ எண்ணெய்க்கும்+ சாம்பிராணிக்கும்+ பரிமளத் தைலத்துக்கும்+ சிலர் பொறுப்பாளிகளாக நியமிக்கப்பட்டார்கள். 30  குருமார்களின் மகன்களில் சிலர் பரிமளத் தைலத்தைக் கலந்து வாசனைத் தைலத்தைத் தயாரித்தார்கள். 31  கோராகியரான சல்லூமின் மூத்த மகனும் லேவியருமான மத்தித்தியா நம்பிக்கைக்குரியவராக இருந்ததால் ரொட்டி சுடும் வேலையை மேற்பார்வை செய்துவந்தார்.+ 32  ஒவ்வொரு ஓய்வுநாளிலும் படையல் ரொட்டிகளைத்+ தயாராக வைக்கிற பொறுப்பு+ அவர்களுடைய சகோதரர்களான கோகாத்தியர்கள் சிலருக்கு இருந்தது. 33  இவர்களில் சிலர் பாடகர்களாகவும், தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின் தலைவர்களாகவும் இருந்தார்கள்; இவர்கள் ஆலய அறைகளில்* இருந்தார்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை இரவும் பகலும் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. அதனால், மற்ற வேலைகள் இவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. 34  வம்சாவளிப் பட்டியலின்படி இவர்கள் லேவியர்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின் தலைவர்களாக இருந்தார்கள், இந்தத் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தார்கள். 35  கிபியோனின் தகப்பனான எயியேல் கிபியோனில்+ குடியிருந்தார். அவருடைய மனைவி பெயர் மாக்காள். 36  அவருடைய மூத்த மகன் அப்தோன்; மற்ற மகன்கள்: சூர், கீஸ், பாகால், நேர், நாதாப், 37  கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத். 38  மிக்லோத்தின் மகன் சீமியாம். இவர்கள் எல்லாரும் எருசலேமில் தங்களுடைய சகோதரர்களுக்குப் பக்கத்தில், மற்ற சகோதரர்களுடன் குடியிருந்தார்கள். 39  நேரின்+ மகன் கீஸ்; கீசின் மகன் சவுல்;+ சவுலின் மகன்கள்: யோனத்தான்,+ மல்கிசூவா,+ அபினதாப்,+ எஸ்பால். 40  யோனத்தானின் மகன் மெரிபால்.+ மெரிபாலின் மகன் மீகா.+ 41  மீகாவின் மகன்கள்: பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ். 42  ஆகாசின் மகன் யாராக்; யாராக்கின் மகன்கள்: அலெமேத், அஸ்மாவேத், சிம்ரி. சிம்ரியின் மகன் மோசா. 43  மோசாவின் மகன் பினியா; பினியாவின் மகன் ரெபாயா, ரெபாயாவின் மகன் எலியாசா, எலியாசாவின் மகன் ஆத்சேல். 44  ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்களுடைய பெயர்கள்: அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான். இவர்கள் ஆத்சேலின் மகன்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நிதனீமியர்களும்தான்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்களும்தான்.”
வே.வா., “சாப்பாட்டு அறைகளில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா