வெளிப்படுத்துதல் 20:1-15

20  பின்பு, ஒரு தேவதூதர் அதலபாதாளத்தின் சாவியையும்+ மிகப் பெரிய சங்கிலியையும் தன்னுடைய கையில் பிடித்துக்கொண்டு பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்.  அவர் பழைய பாம்பாகிய+ ராட்சதப் பாம்பை,+ அதாவது பிசாசாகிய+ சாத்தானை,+ பிடித்து 1,000 வருஷங்களுக்குக் கட்டிப்போட்டார்.  அந்த 1,000 வருஷங்கள் முடியும்வரை தேசங்களை அவன் ஏமாற்றாதபடி அவனை அதலபாதாளத்துக்குள்+ தள்ளியடைத்து, அதற்கு முத்திரை போட்டார். இதற்குப் பின்பு, அவன் கொஞ்சக் காலத்துக்கு விடுதலை செய்யப்பட வேண்டும்.+  பின்பு, சிம்மாசனங்களைப் பார்த்தேன். அதன்மேல் உட்கார்ந்திருந்தவர்களுக்கு நியாயந்தீர்க்கிற அதிகாரம் கொடுக்கப்பட்டது. இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுத்ததற்காகவும், கடவுளைப் பற்றிப் பேசியதற்காகவும் கொல்லப்பட்டவர்களை* பார்த்தேன். அவர்கள் மூர்க்க மிருகத்தையோ அதன் உருவத்தையோ வணங்காதவர்கள், தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதன் அடையாளக் குறியைப் பெறாதவர்கள்.+ அவர்கள் உயிரோடு எழுந்து கிறிஸ்துவுடன் 1,000 வருஷங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்தார்கள்.+  (மரணமடைந்த மற்றவர்கள்+ அந்த 1,000 வருஷங்கள் முடியும்வரை உயிரோடு எழுந்திருக்கவில்லை.) இதுதான் முதலாம் உயிர்த்தெழுதல்.+  முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெறுகிற எல்லாரும் சந்தோஷமானவர்கள்,+ பரிசுத்தமானவர்கள்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்துக்கு+ அதிகாரம் இல்லை;+ இவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் சேவை செய்கிற குருமார்களாக இருந்து,+ அவரோடு 1,000 வருஷங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.+  அந்த 1,000 வருஷங்கள் முடிந்த உடனேயே சாத்தான் தன்னுடைய சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவான்.  பூமியின் நான்கு திசைகளிலும் இருக்கிற தேசங்களாகிய கோகையும் மாகோகையும் ஏமாற்றுவதற்காகவும், அவர்களைப் போருக்குக் கூட்டிச்சேர்ப்பதற்காகவும் புறப்பட்டுப் போவான். அவர்கள் கடற்கரை மணலைப் போல் எண்ண முடியாத அளவுக்கு இருப்பார்கள்.  அவர்கள் பூமி முழுவதும் போய், பரிசுத்தவான்களுடைய முகாமையும் பிரியமான நகரத்தையும் வளைத்துக்கொள்வார்கள். ஆனால், பரலோகத்திலிருந்து நெருப்பு வந்து அவர்களைச் சுட்டெரித்துவிடும்.+ 10  அதோடு, அவர்களை ஏமாற்றிக்கொண்டிருந்த பிசாசு, நெருப்பும் கந்தகமும் எரிகிற ஏரியில் தள்ளப்படுவான். அங்கேதான் மூர்க்க மிருகமும்+ போலித் தீர்க்கதரிசியும் தள்ளப்பட்டிருந்தார்கள்.+ அவர்கள் இரவும் பகலும் என்றென்றுமாகச் சித்திரவதை செய்யப்படுவார்கள்.* 11  பின்பு, பெரிய வெள்ளைச் சிம்மாசனத்தையும் அதில் உட்கார்ந்திருக்கிறவரையும் பார்த்தேன்.+ அவருக்கு முன்னால் பூமியும் வானமும் மறைந்துபோயின,+ இடம் தெரியாமல் காணாமல்போயின. 12  இறந்துபோன பெரியவர்களும் சிறியவர்களும் சிம்மாசனத்துக்கு முன்னால் நிற்பதைப் பார்த்தேன். அப்போது சுருள்கள் திறக்கப்பட்டன. வாழ்வின் சுருள்+ என்ற வேறொரு சுருளும் திறக்கப்பட்டது. அந்தச் சுருள்களில் எழுதப்பட்டிருக்கிறபடியே, இறந்தவர்கள் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு பெற்றார்கள்.+ 13  கடல் தன்னிடம் இருக்கிற இறந்தவர்களை ஒப்படைத்தது; அதேபோல், மரணமும் கல்லறையும்* தங்களிடம் இருக்கிற இறந்தவர்களை ஒப்படைத்தன. ஒவ்வொருவரும் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு பெற்றார்கள்.+ 14  மரணமும் கல்லறையும்* நெருப்பு ஏரியில் தள்ளப்பட்டன.+ இந்த நெருப்பு ஏரி+ இரண்டாம் மரணத்தைக்+ குறிக்கிறது. 15  வாழ்வின் புத்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள்+ எல்லாரும் நெருப்பு ஏரியில் தள்ளப்பட்டார்கள்.+

அடிக்குறிப்புகள்

நே,மொ., “கோடாலியால் கொல்லப்பட்டவர்களை.”
வே.வா., “அடைக்கப்பட்டிருப்பார்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா