யாத்திராகமம் 15:1-27

15  அப்போது, மோசேயும் இஸ்ரவேலர்களும் யெகோவாவைப் புகழ்ந்து இப்படிப் பாடினார்கள்:+ “நான் யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன், அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.+ குதிரைகளையும் குதிரை வீரர்களையும் கடலில் சமாதியாக்கினார்.+   அவர் என் மீட்பரானார்;+ ‘யா’வே* என் பலம், என் கோட்டை. அவர்தான் என்னுடைய கடவுள், நான் அவரைப் புகழ்வேன்.+ அவர் என்னுடைய தகப்பனின் கடவுள்,+ நான் அவரைப் போற்றுவேன்.+   யெகோவா ஒரு மாவீரர்!+யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்!+   பார்வோனின் படைகளையும் ரதங்களையும் அவர் கடலில் தள்ளினார்.+அவனுடைய வீராதிவீரர்கள் செங்கடலில் மூழ்கினார்கள்.+   சீறிவந்த தண்ணீர் அவர்களைச் சுருட்டிக்கொண்டு போனது.அவர்கள் கல்லைப் போல அமிழ்ந்துபோனார்கள்.+   யெகோவாவே, உங்களுடைய வலது கை மகா பலம் கொண்டது.+யெகோவாவே, உங்களுடைய வலது கை எதிரியை நொறுக்கிவிடும்.   உங்களை எதிர்க்கிறவர்களை மகா கம்பீரத்தோடு வீழ்த்துவீர்கள்.+உங்களுடைய கோபத் தீயினால் அவர்களை வைக்கோல் போலப் பொசுக்குவீர்கள்.   உங்களுடைய மூச்சுக்காற்றினால் தண்ணீர் குவிந்து நின்றது.மாபெரும் கடல் மதில்போல் உயர்ந்து நின்றது.புரண்டு ஓடிய தண்ணீர் கடலில் உறைந்துபோனது.   ‘அவர்களைத் துரத்திக்கொண்டு போய்ப்பிடிப்பேன்! கைப்பற்றிய பொருள்களை ஆசைதீர பங்குபோடுவேன்! வாளை எடுத்து, அவர்களை வெட்டிச் சாய்ப்பேன்!’+ என்றெல்லாம் எதிரி சொன்னான். 10  நீங்கள் உங்களுடைய மூச்சுக்காற்றை ஊதினீர்கள்.கடல் அவர்களை மூழ்கடித்தது.+அவர்கள் ஆழ்கடலில் ஈயம்போல் மூழ்கிப்போனார்கள். 11  யெகோவாவே, உங்களைப் போல ஒரு கடவுள் உண்டா?+ பரிசுத்தத்தின் சிகரமே,+ யார் உங்களுக்கு ஈடாக முடியும்? நீங்கள் அற்புதங்களைச் செய்கிறவர்.+ பயபக்தியோடு போற்றிப் புகழப்பட வேண்டியவர். 12  நீங்கள் வலது கையை நீட்டினீர்கள், அவர்கள் பூமிக்குள் புதைந்துபோனார்கள்.+ 13  உங்களுடைய ஜனங்களை விடுவித்தீர்கள்.+மாறாத அன்பினால் அவர்களை வழிநடத்தினீர்கள்.உங்கள் பலத்தால் உங்களுடைய பரிசுத்தமான இடத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போவீர்கள். 14  ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு+ நடுங்குவார்கள்.பெலிஸ்திய ஜனங்கள் பீதியடைவார்கள். 15  ஏதோமின் குலத்தலைவர்கள் கதிகலங்குவார்கள்.மோவாபின் கொடுங்கோலர்கள் குலைநடுங்குவார்கள்.+ கானானில் வாழ்கிறவர்கள் கலக்கமடைவார்கள்.+ 16  பயமும் திகிலும் அவர்களைக் கவ்வும்.+ உங்களுடைய கைபலம் அவர்களைக் குத்துக்கல் போல ஆக்கிவிடும்.யெகோவாவே, நீங்கள் உருவாக்கிய உங்கள் ஜனம்+ கடந்துபோகிற வரைக்கும்,+அவர்கள் எல்லாருடைய நிலைமையும் அப்படித்தான் இருக்கும். 17  யெகோவாவே, உங்களுடைய ஜனத்தைக் கூட்டிக்கொண்டு வருவீர்கள்.யெகோவாவே, உங்களுக்குச் சொந்தமான மலையிலே,நீங்கள் தங்குவதற்குத் தயார் செய்த இடத்திலே,உங்கள் கைகளால் உண்டாக்கிய புனித இடத்திலே, அவர்களை நிலைநாட்டுவீர்கள்.*+ 18  யெகோவா என்றென்றும் ராஜாவாக இருப்பார்.+ 19  பார்வோனின் குதிரைகள் அவனுடைய ரதங்களோடும் வீரர்களோடும் கடலின் நடுவில் பாய்ந்தன.+திரண்டுநின்ற தண்ணீரை யெகோவா அவர்கள்மேல் புரண்டுவர வைத்தார்.+ஆனால், இஸ்ரவேலர்களைக் கடலின் நடுவில் காய்ந்த தரையில் நடக்க வைத்தார்.”+ 20  ஆரோனின் சகோதரியும் தீர்க்கதரிசனம் சொல்கிறவளுமான மிரியாம் கஞ்சிராவைக் கையில் எடுத்துக்கொண்டாள். மற்ற எல்லா பெண்களும்கூட கஞ்சிராவை எடுத்துக்கொண்டு அவளுக்குப் பின்னால் போய் நடனம் ஆடினார்கள். 21  ஆண்கள் பாடப் பாட மிரியாமும், “யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள், அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.+ குதிரைகளையும் வீரர்களையும் கடலில் சமாதியாக்கினார்”+ என்று பதில்பாட்டுப் பாடினாள். 22  பிற்பாடு, மோசே இஸ்ரவேலர்களை செங்கடலிலிருந்து ஷூர் வனாந்தரத்துக்குக் கூட்டிக்கொண்டு போனார். அவர்கள் மூன்று நாட்கள் அந்த வனாந்தரத்தில் நடந்துபோனார்கள். ஆனால், அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. 23  பின்பு, மாரா* என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்கள்.+ அங்கிருந்த தண்ணீர் கசப்பாக இருந்ததால், அவர்களால் அதைக் குடிக்க முடியவில்லை. அதனால்தான், அவர் அந்த இடத்துக்கு மாரா என்று பெயர் வைத்தார். 24  இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கு விரோதமாக முணுமுணுத்து,+ “நாங்கள் எதைத்தான் குடிப்பது?” என்றார்கள். 25  மோசே யெகோவாவிடம் கெஞ்சினார்.+ யெகோவா அவருக்கு ஒரு சின்ன மரத்தைக் காட்டினார். மோசே அதைத் தூக்கித் தண்ணீருக்குள் போட்டவுடன், அந்தத் தண்ணீர் தித்திப்பானது. அங்குதான் கடவுள் ஜனங்களைச் சோதித்துப் பார்த்தார்.+ அங்கு நடந்த சம்பவங்கள் அவர்களுக்கு ஒரு பாடமாக இருந்தன, அவர்களுடைய வாழ்க்கைக்கு ஒரு சட்டம் போலவும் இருந்தன.* 26  கடவுள் அவர்களிடம், “யெகோவாவாகிய நான் சொல்லும் வார்த்தையை நீங்கள் கவனமாகக் கேட்டு, எனக்குப் பிரியமானதைச் செய்து, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிமுறைகள் எல்லாவற்றையும் பின்பற்றினால்,+ எகிப்தியர்கள்மேல் கொண்டுவந்த எந்தக் கொள்ளைநோயையும் நான் உங்கள்மேல் கொண்டுவர மாட்டேன்.+ யெகோவாவாகிய நான் உங்களைக் குணப்படுத்துகிறேன்”+ என்று சொன்னார். 27  அதன்பின், அவர்கள் ஏலிமுக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கே 12 நீரூற்றுகளும் 70 பேரீச்ச மரங்களும் இருந்தன. அந்த நீரூற்றுகளுக்குப் பக்கத்தில் அவர்கள் முகாம்போட்டார்கள்.

அடிக்குறிப்புகள்

“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
நே.மொ., “நட்டு வைப்பீர்கள்.”
அர்த்தம், “கசப்பு.”
நே.மொ., “அங்குதான் கடவுள் அவர்களுக்கு ஒரு விதிமுறையையும் சட்டப்பூர்வ முன்னோடியையும் வகுத்துக் கொடுத்தார்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா