மீகா 7:1-20

7  என் நிலைமை ரொம்பப் பரிதாபமாக இருக்கிறது.கோடைக் காலத்துப் பழங்களின் அறுவடை முடிந்தது.திராட்சை அறுவடையும் முடிந்துவிட்டது.ஆனால், சாப்பிட எனக்கு ஒரு திராட்சைக் கொத்துகூட இல்லை.எனக்குப் பிடித்த ருசியான அத்திப் பழமும் இல்லை.   விசுவாசமாக* நடக்கிறவன் உலகத்தில் இல்லாமல் போய்விட்டான்.நேர்மையானவன் ஒருவன்கூட இல்லை.+ பதுங்கியிருந்து கொலை செய்யத்தான் எல்லாரும் காத்திருக்கிறார்கள்.+ ஒவ்வொருவனும் தன் சகோதரனைப் பிடிப்பதற்கு வலை விரிக்கிறான்.   கெட்ட காரியங்கள் செய்வதில் அவர்கள் கெட்டிக்காரர்கள்.+தலைவர்கள் தாங்கள் நினைத்ததைச் சாதிக்க மற்றவர்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள்.நீதிபதிகள் லஞ்சம் வாங்குகிறார்கள்.+அதிகாரிகள் தங்களுடைய விருப்பங்களைச் சொல்கிறார்கள்.+அவர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள்.   அவர்களில் நல்லவன்கூட முள்ளைப் போல இருக்கிறான்.அவர்களில் மிக நேர்மையானவன்கூட முள்வேலியைவிட மோசமாக இருக்கிறான். உன் காவல்காரர்கள் அறிவிப்பு செய்த தண்டனைத் தீர்ப்பின் நாள் வரும்.+ அப்போது, அவர்கள் கதிகலங்குவார்கள்.+   உன் கூட்டாளிமேல் நம்பிக்கை வைக்காதே.உன்னுடைய நெருங்கிய நண்பனை நம்பாதே.+ உன் மடியில் படுத்திருப்பவளிடம் ஜாக்கிரதையாகப் பேசு.   மகன் அப்பாவை அவமதிக்கிறான்.மகள் அம்மாவை எதிர்க்கிறாள்.+மருமகள் மாமியாரோடு மோதுகிறாள்.+ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருக்கிறார்கள்.+   ஆனால், நான் யெகோவாவுக்காக எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன்.+ என்னை மீட்கும் கடவுளுக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்.+ என் கடவுள் என் வேண்டுதலைக் கேட்பார்.+   என்னை எதிர்ப்பவளே! என் நிலையைப் பார்த்து சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்.நான் இருட்டில் இருந்தாலும் யெகோவா எனக்கு வெளிச்சமாக இருப்பார்.   நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்.+அவர் எனக்காக வழக்காடி நியாயம் வழங்குவார்.அதுவரை அவருடைய கோபத்தைத் தாங்கிக்கொள்வேன். அவர் என்னை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார்.நான் அவருடைய நீதியைப் பார்ப்பேன். 10  என்னை எதிர்ப்பவளும் அதைப் பார்ப்பாள்.“உன் கடவுளான யெகோவா எங்கே?”+ என்று அவள் கேட்டாளே, இப்போது வெட்கத்தில் தலைகுனிவாள். அவளுக்கு வரும் கதியை நான் பார்ப்பேன். தெருவில் உள்ள சேற்றைப் போல அவள் மிதிக்கப்படுவாள். 11  உன்னுடைய கற்சுவர்களைக் கட்டும் நாள் வரும்.அந்த நாளில் உன் எல்லை விரிவாக்கப்படும்.* 12  அந்த நாளில் அவர்கள் உங்களிடம் வருவார்கள்.அசீரியாவிலிருந்தும் எகிப்தின் நகரங்களிலிருந்தும் வருவார்கள்.எகிப்திலிருந்து யூப்ரடிஸ்* ஆறு வரைக்கும் வருவார்கள்.ஒரு கடலிலிருந்து இன்னொரு கடலுக்கும் ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கும் வருவார்கள்.+ 13  தேசத்தின் குடிமக்கள் குற்றங்கள் செய்தார்கள்.அதனால் தேசம் பாழாகும். 14  உங்கள் மந்தையாகிய ஜனங்களை உங்களுடைய கோலால் மேயுங்கள், அவர்கள் உங்களுடைய சொத்து.+அவர்கள் தன்னந்தனியாகக் காட்டில் குடியிருந்தார்கள், பழமரத் தோப்பின் நடுவில் வாழ்ந்தார்கள். பூர்வ காலங்களைப் போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேயட்டும்.+ 15  “அவர்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது நான் அதிசயங்களைச் செய்தேன்.அதுபோலவே இப்போதும் செய்து காட்டுவேன்.+ 16  பலம்படைத்த தேசத்தார்கூட அதைப் பார்த்துக் கூனிக்குறுகுவார்கள்.+ தங்கள் கையால் வாயை மூடிக்கொள்வார்கள்.அவர்களுடைய காதுகள் செவிடாகும். 17  பாம்பைப் போல அவர்கள் மண்ணை நக்குவார்கள்.+ஊரும் பிராணிகளைப் போல மிரண்டுபோய் மறைவிடங்களிலிருந்து வெளியே வருவார்கள். கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நடுங்கியபடி நிற்பார்கள்.அவரைப் பார்த்துப் பயப்படுவார்கள்.”+ 18  உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை.உங்களுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களின்+ குற்றத்தையும் பாவத்தையும் நீங்கள் மன்னிக்கிறீர்கள்.+ நீங்கள் என்றென்றைக்கும் கோபமாக இருக்க மாட்டீர்கள்.ஏனென்றால், மாறாத அன்பு காட்டுவதில் பிரியப்படுகிறீர்கள்.+ 19  அவர் மறுபடியும் நமக்கு இரக்கம் காட்டுவார்;+ நம் அக்கிரமங்களை ஒழித்துக்கட்டுவார். நம்முடைய எல்லா பாவங்களையும் ஆழ்கடலுக்குள் போட்டுவிடுவார்.+ 20  யாக்கோபுக்கு அவர் உண்மையாக இருப்பார்.ஆபிரகாமுக்கு மாறாத அன்பு காட்டுவார்.நம் முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “பற்றுமாறாமல்.”
அல்லது, “அந்த நாளில் கட்டளை தொலைதூரத்தில் இருக்கும்.”
அதாவது, “ஐப்பிராத்து.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா