புலம்பல் 5:1-22

5  யெகோவாவே, எங்களுக்கு வந்த கதியை நினைத்துப் பாருங்கள். எங்களுக்கு வந்த அவமானத்தைக் கொஞ்சம் பாருங்கள்.+   எங்களுடைய சொத்து அன்னியர்களின் கைக்குப் போய்விட்டது. எங்களுடைய வீடுகளை வேறு தேசத்து ஜனங்கள் எடுத்துக்கொண்டார்கள்.+   நாங்கள் அப்பா இல்லாத பிள்ளைகளைப் போல ஆகிவிட்டோம்; எங்களுடைய அம்மா விதவைபோல் ஆகிவிட்டாள்.+   குடிக்கிற தண்ணீரைக்கூட விலை கொடுத்துதான் வாங்குகிறோம்;+ காசு கொடுத்தால்தான் விறகு கிடைக்கிறது.   எங்களைத் துரத்துகிறவர்கள் எங்கள் பக்கத்தில் வந்துவிட்டார்கள்; எப்போது வேண்டுமானாலும் எங்கள் கழுத்தைப் பிடித்துவிடுவார்கள்.எங்களுக்கு ஓய்வே இல்லை, நாங்கள் களைத்துப்போய்விட்டோம்.+   எகிப்திடமும்+ அசீரியாவிடமும்+ உணவுக்காகக் கையேந்தி நிற்கிறோம்.   எங்களுடைய முன்னோர்கள் இப்போது உயிரோடு இல்லாவிட்டாலும் அவர்கள் செய்த பாவத்துக்காக நாங்கள் கஷ்டப்படுகிறோம்.   இப்போது எங்களுடைய வேலைக்காரர்கள் எங்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுடைய கையிலிருந்து எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லை.   வனாந்தரத்தில் ஆட்கள் வாள்களோடு நிற்பதால் உயிரையே பணயம் வைத்துதான் உணவைப் பெறுகிறோம்.+ 10  பசிக்கொடுமையால் எங்கள் உடம்பெல்லாம் அடுப்புபோல் சுடுகிறது.+ 11  சீயோனில் இருக்கிற கல்யாணமான பெண்களையும் யூதாவின் நகரங்களில் இருக்கிற கல்யாணமாகாத பெண்களையும் அவர்கள் கெடுத்துவிட்டார்கள்.+ 12  அதிகாரிகளுடைய கையைக் கட்டி அவர்களைத் தொங்கவிட்டார்கள்;+ பெரியோர்களை* மரியாதை இல்லாமல் நடத்தினார்கள்.+ 13  வாலிபர்கள் மாவு அரைக்கும் கல்லை* தூக்கிக்கொண்டு போகிறார்கள்; சிறுவர்கள் விறகுக் கட்டுகளைச் சுமக்க முடியாமல் தடுமாறி விழுகிறார்கள். 14  நகரவாசலில் பெரியோர்கள் யாரும் இல்லை.+ வாலிபர்கள் இசைக் கருவிகளை வாசிப்பது இல்லை.+ 15  எங்கள் உள்ளத்திலிருந்த சந்தோஷமெல்லாம் போய்விட்டது. ஆடிப்பாடிக்கொண்டிருந்த நாங்கள் இப்போது அழுது புலம்புகிறோம்.+ 16  எங்கள் தலையிலுள்ள கிரீடம் கீழே விழுந்துவிட்டது. எங்கள் கதி அவ்வளவுதான்! நாங்கள் பாவம் செய்துவிட்டோம். 17  அதை நினைக்கும்போது நெஞ்சு வலிக்கிறது.+கண்கள் இருண்டுபோகின்றன.+ 18  சீயோன் மலை பாழாய்க் கிடக்கிறதே!+ அங்கே குள்ளநரிகள் சுற்றித் திரிகின்றனவே! 19  யெகோவாவே, நீங்கள் என்றென்றும் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள். உங்கள் சிம்மாசனம் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்.+ 20  நீங்கள் ஏன் எங்களை இவ்வளவு காலமாகக் கைவிட்டீர்கள்? எங்களை அடியோடு மறந்துவிடுவீர்களா?+ 21  யெகோவாவே, மறுபடியும் எங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் உங்களிடமே திரும்பி வந்துவிடுகிறோம்.+ பழையபடி எங்களை நன்றாக வாழ வையுங்கள்.+ 22  இப்போது எங்களை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளிவிட்டீர்களே! எங்கள்மேல் இன்னமும் பயங்கர கோபத்தோடு இருக்கிறீர்களே!+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்களை.”
வே.வா., “திரிகைக் கல்லை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா