நீதிமொழிகள் 10:1-32

10  சாலொமோனின் நீதிமொழிகள்.+ ஞானமுள்ள மகன் தன் அப்பாவைச் சந்தோஷப்படுத்துகிறான்.+ஆனால், புத்தியில்லாத மகன் தன் அம்மாவை வேதனைப்படுத்துகிறான்.   அநியாயமாகச் சேர்க்கிற சொத்துகளால் எந்தப் பிரயோஜனமும் கிடைக்காது.ஆனால், நீதியான செயல்கள்தான் மரணத்திலிருந்து காப்பாற்றும்.+   யெகோவா நீதிமானைப் பசியில் வாட விடமாட்டார்.+ஆனால், பொல்லாதவனுக்கு அவன் ஆசைப்படுவதைத் தர மாட்டார்.   சோம்பலான கைகள் வறுமையை வர வைக்கும்.+ஆனால், கடினமாக உழைக்கும் கைகள் செல்வத்தைக் கொண்டுவரும்.+   விவேகத்தோடு நடக்கிற மகன் கோடைக் காலத்தில் அறுவடை செய்கிறான்.ஆனால், வெட்கக்கேடாக நடக்கிற மகன் அறுவடைக் காலத்தில் நன்றாகத் தூங்குகிறான்.+   நீதிமானின் தலைமேல் ஆசீர்வாதங்கள் பொழிகின்றன.+ஆனால், பொல்லாதவனின் வாய் அவனுடைய வன்முறையான எண்ணங்களை மூடிமறைக்கிறது.   நீதிமானைப் பற்றிய நினைவுகள்* ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.+ஆனால், பொல்லாதவனின் பெயர் கெட்டுப்போகும்.+   இதயத்தில் ஞானம் உள்ளவன் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வான்.+ஆனால், முட்டாள்தனமாகப் பேசுகிறவன் மிதிபடுவான்.+   உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடப்பான்.+ஆனால், குறுக்கு வழியில் போகிறவன் மாட்டிக்கொள்வான்.+ 10  கள்ளத்தனமாகக் கண் ஜாடை காட்டுகிறவன் மனவேதனையை உண்டாக்குகிறான்.+முட்டாள்தனமாகப் பேசுகிறவன் மிதிபடுவான்.+ 11  நீதிமானின் வாய் வாழ்வளிக்கும் ஊற்றாக இருக்கிறது.+ஆனால், பொல்லாதவனின் வாய் அவனுடைய வன்முறையான எண்ணங்களை மூடிமறைக்கிறது.+ 12  பகை சண்டைகளைத் தூண்டிவிடுகிறது.ஆனால், அன்பு எல்லா குற்றங்களையும் மூடிவிடுகிறது.+ 13  பகுத்தறிவோடு நடப்பவனின் உதடுகளில் காணப்படுவது ஞானம்.+ஆனால், புத்தியில்லாதவனின் முதுகுக்கு ஏற்றது பிரம்பு.+ 14  ஞானமுள்ளவர்கள் அறிவைப் பொக்கிஷம்போல் பாதுகாக்கிறார்கள்.+ஆனால், முட்டாளின் வாய் அழிவைத் தேடித்தருகிறது.+ 15  பணக்காரனின் சொத்து அவனுக்கு மதில் சூழ்ந்த நகரம்போல் இருக்கிறது. ஆனால், ஏழைகளின் வறுமை அவர்களை அழிக்கிறது.+ 16  நீதிமானின் உழைப்பு வாழ்வுக்கு வழிநடத்துகிறது.ஆனால், பொல்லாதவனின் வருமானம் பாவத்துக்கு வழிநடத்துகிறது.+ 17  புத்திமதியை ஏற்றுக்கொள்கிறவன் வாழ்வுக்கு வழிகாட்டுகிறான்.*ஆனால், கண்டிக்கப்படுவதைக் காதில் வாங்காதவன் தவறாக வழிகாட்டுகிறான். 18  உள்ளத்தில் பகையை மறைத்து வைத்திருப்பவன் பொய் பேசுகிறான்.+வதந்திகளைப் பரப்புகிறவன் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறான். 19  அதிகமாகப் பேசுவது பாவத்தில்தான் போய் முடியும்.+ஆனால், தன் உதடுகளை அடக்குகிறவன் விவேகமாக நடந்துகொள்கிறான்.+ 20  நீதிமானின் நாவு உயர்தரமான வெள்ளியைப் போல இருக்கிறது.+ஆனால், பொல்லாதவனின் இதயம் செல்லாக்காசு போல இருக்கிறது. 21  நீதிமானின் உதடுகள் பலருக்கு ஊட்டமளிக்கின்றன.*+ஆனால், முட்டாள் புத்தியில்லாததால் செத்துப்போகிறான்.+ 22  யெகோவா தரும் ஆசீர்வாதம்தான் ஒருவருக்குக் கிடைக்கும் சொத்து.*+அதனோடு சேர்த்து அவர் எந்த வேதனையையும்* கொடுக்க மாட்டார். 23  வெட்கக்கேடாக நடப்பது முட்டாளுக்கு ஒரு விளையாட்டாக இருக்கிறது.ஆனால், பகுத்தறிவோடு நடப்பவனிடம் ஞானம் இருக்கிறது.+ 24  பொல்லாதவன் எதை நினைத்துப் பயப்படுகிறானோ அது அவனுக்கு நடக்கும்.ஆனால், நீதிமானின் ஆசை நிறைவேற்றப்படும்.+ 25  புயல் அடிக்கும்போது பொல்லாதவன் இல்லாமல் போவான்.+ஆனால், நீதிமான் நிலையான அஸ்திவாரம்போல் இருப்பான்.+ 26  பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்குமோ,அப்படித்தான் சோம்பேறியும் தன் முதலாளிக்கு* இருப்பான். 27  யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களுடைய ஆயுள் கூடும்.+ஆனால், பொல்லாதவனின் வாழ்நாள் குறைக்கப்படும்.+ 28  நீதிமானின் எதிர்பார்ப்பு சந்தோஷத்தைக் கொடுக்கும்.+ஆனால், பொல்லாதவனின் நம்பிக்கை நாசமாகும்.+ 29  யெகோவாவின் வழி குற்றமற்றவர்களுக்கு ஒரு கோட்டைபோல் இருக்கிறது.+ஆனால், அக்கிரமக்காரர்களுக்கு அது அழிவைக் கொண்டுவருகிறது.+ 30  நீதிமான் ஒருபோதும் அசைக்கப்பட மாட்டான்.+ஆனால், பொல்லாதவன் இனி பூமியில் இருக்க மாட்டான்.+ 31  நீதிமானின் வாயிலிருந்து ஞானம் பிறக்கும்.ஆனால், தாறுமாறாகப் பேசுகிற நாவு அறுத்தெறியப்படும். 32  நீதிமானின் உதடுகளுக்கு இனிமையாகப் பேசத் தெரியும்.ஆனால், பொல்லாதவனின் வாய் தாறுமாறாகப் பேசும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நீதிமான் எடுத்திருக்கும் நல்ல பெயர்.”
அல்லது, “வாழ்வின் வழியில் நடக்கிறான்.”
வே.வா., “வழிகாட்டுகின்றன.”
வே.வா., “ஒருவரைச் செல்வந்தராக்கும்.”
வே.வா., “கவலையையும்; கஷ்டத்தையும்.”
வே.வா., “தன்னை அனுப்பியவருக்கு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா