சங்கீதம் 85:1-13

இசைக் குழுவின் தலைவனுக்கு; கோராகுவின் மகன்களுடைய+ சங்கீதம். 85  யெகோவாவே, உங்களுடைய தேசத்துக்குக் கருணை காட்டினீர்கள்.+சிறைபிடிக்கப்பட்டுப் போன யாக்கோபின் வம்சத்தாரை அழைத்துவந்தீர்கள்.+   உங்களுடைய மக்கள் செய்த குற்றத்தை மன்னித்தீர்கள்.அவர்கள் செய்த எல்லா பாவத்தையும் மன்னித்தீர்கள்.+ (சேலா)   உங்களுடைய கோபத்தையெல்லாம் அடக்கிக்கொண்டீர்கள்.உங்களுடைய ஆக்ரோஷத்தை விட்டுவிட்டீர்கள்.+   எங்களை மீட்கும் கடவுளே, எங்களுக்குத் திரும்பவும் கருணை காட்டுங்கள்.*எங்கள்மேல் இருக்கிற வெறுப்பை விட்டுவிடுங்கள்.+   நீங்கள் என்றென்றுமே எங்கள்மேல் கோபமாக இருப்பீர்களா?+ உங்கள் கோபம் தலைமுறை தலைமுறைக்கும் தீராதா?   உங்கள் ஜனங்களாகிய நாங்கள் உங்களை நினைத்து சந்தோஷப்படும்படி,எங்களுக்கு மறுபடியும் புத்துயிர் தர மாட்டீர்களா?+   யெகோவாவே, எங்களுக்கு மாறாத அன்பைக் காட்டுங்கள்.+எங்களுக்கு மீட்பு கொடுங்கள்.   உண்மைக் கடவுளான யெகோவா சொல்வதை நான் கேட்பேன்.உண்மையாக* நடக்கிற தன் மக்களுக்கு அவர் சமாதான வார்த்தைகளைச் சொல்வார்.+ஆனால், அவர்கள் மறுபடியும் மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையோடு நடந்துகொள்ளாமல் இருக்கட்டும்!+   நம் தேசத்தில் அவருடைய மகிமை தங்கியிருப்பதற்காக,அவருக்குப் பயந்து நடக்கிறவர்களை அவர் சீக்கிரத்திலேயே மீட்கப்போகிறார்.+ 10  மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்.நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தமிடும்.+ 11  பூமியிலிருந்து உண்மைத்தன்மை துளிர்விடும்.வானத்திலிருந்து நீதி எட்டிப் பார்க்கும்.+ 12  ஆம், யெகோவா நன்மையானதை* தருவார்.+நம் தேசம் அமோக விளைச்சலைத் தரும்.+ 13  அவருக்கு முன்னால் நீதி நடந்து போகும்.+அவர் அடியெடுத்து வைப்பதற்கு அது பாதை அமைத்துக் கொடுக்கும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “எங்களைத் திரும்பவும் கூட்டிச்சேருங்கள்.”
வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “செழிப்பை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா