சங்கீதம் 79:1-13

ஆசாப்பின்+ சங்கீதம். 79  கடவுளே, மற்ற தேசத்தார் உங்கள் தேசத்துக்குள் படையெடுத்து வந்தார்கள்.+உங்களுடைய பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.+எருசலேமை மண்மேடாக ஆக்கினார்கள்.+   உங்களுடைய ஊழியர்களின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாக்கினார்கள்.உங்களுக்கு உண்மையாக* இருந்தவர்களின் உடலைக் காட்டு மிருகங்களுக்கு இரையாக்கினார்கள்.+   அவர்களுடைய இரத்தத்தை எருசலேம் முழுவதும் தண்ணீர்போல் ஊற்றினார்கள்.அவர்களை அடக்கம் செய்ய ஒருவனும் இல்லை.+   அக்கம்பக்கத்து தேசங்களின் பழிப்பேச்சுக்கு நாங்கள் ஆளாகிவிட்டோம்.+சுற்றியிருக்கிற மக்கள் எங்களைக் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்.   யெகோவாவே, இன்னும் எவ்வளவு காலம் கோபமாக இருப்பீர்கள்? என்றென்றைக்குமா?+ இன்னும் எவ்வளவு காலம் உங்களுடைய கோபம் தீயாய்ப் பற்றியெரியும்?+   உங்களைப் பற்றித் தெரியாத தேசங்களின் மேலும்,உங்களுடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளாத ராஜ்யங்களின் மேலும்உங்கள் கோபத்தைக் கொட்டுங்கள்.+   ஏனென்றால், அவர்கள் யாக்கோபின் வம்சத்தாரை அழித்தார்கள்.அவர்களுடைய தேசத்தைப் பாழாக்கினார்கள்.+   எங்களுடைய முன்னோர்கள் செய்த குற்றங்களுக்காக எங்களைத் தண்டிக்காதீர்கள்.+ நாங்கள் ரொம்பவே துவண்டுபோயிருக்கிறோம்.எங்களுக்குச் சீக்கிரமாக இரக்கம் காட்டுங்கள்.+   எங்களை மீட்கும் கடவுளே,+உங்களுடைய மகிமையான பெயரை மனதில் வைத்து எங்களுக்கு உதவுங்கள்.உங்கள் பெயரை மனதில் வைத்து எங்களைக் காப்பாற்றுங்கள்,எங்கள் பாவங்களை மன்னியுங்கள்.+ 10  “அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?” என்று மற்ற தேசத்தார் ஏன் கேட்க வேண்டும்?+ உங்கள் ஊழியர்களைக் கொன்றவர்கள்* பழிவாங்கப்பட்டதை எல்லா தேசத்தாரும் தெரிந்துகொள்ளட்டும்!அது எங்கள் கண் முன்னால் நடக்கட்டும்!+ 11  கைதியின் பெருமூச்சைக் கேளுங்கள்.+ மரணத் தீர்ப்பு பெற்றவர்களை உங்களுடைய மகா பலத்தால் காப்பாற்றுங்கள்.*+ 12  யெகோவாவே, உங்களைக் கேவலமாகப் பேசிய சுற்றுவட்டார மக்களுக்கு,+ஏழு மடங்கு தண்டனை கொடுங்கள்.+ 13  அப்போது, உங்கள் ஜனமும், உங்களால் மேய்க்கப்படுகிற ஆடுகளுமான நாங்கள்,+உங்களுக்கு என்றென்றும் நன்றி சொல்வோம்.உங்களுடைய புகழைத் தலைமுறை தலைமுறைக்கும் அறிவிப்போம்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “ஊழியர்களின் இரத்தத்தைச் சிந்தியவர்கள்.”
அல்லது, “விடுதலை செய்யுங்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா