சங்கீதம் 77:1-20

இசைக் குழுவின் தலைவனுக்கு; எதித்தூன்.* ஆசாப்பின்+ சங்கீதம். 77  நான் கடவுளிடம் கெஞ்சிக் கதறுவேன்.என் குரலை உயர்த்திக் கடவுளிடம் கெஞ்சிக் கதறுவேன்.அவர் என் சத்தத்தைக் கேட்பார்.+   இக்கட்டு நாளில் நான் யெகோவாவைத் தேடுகிறேன்.+ ராத்திரியில் என் கைகளை அவர்முன் விரித்தபடியே இருக்கிறேன். ஆனாலும், எனக்கு ஆறுதல் கிடைத்த பாடில்லை.   கடவுளை நினைக்கிறேன், குமுறி அழுகிறேன்.+குழம்பித் தவிக்கிறேன், துவண்டுபோகிறேன்.+ (சேலா)   கடவுளே, நான் தூங்க முடியாதபடி என் கண் இமைகளை நீங்கள் பிடித்திருக்கிறீர்கள்.பேச்சே வராத அளவுக்கு நான் கலங்கிப்போயிருக்கிறேன்.   பூர்வ நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.+பழங்காலத்து வருஷங்களை யோசித்துப் பார்க்கிறேன்.   ராத்திரி நேரத்தில் என் பாடலை நினைத்துப் பார்க்கிறேன்.+இதயத்தில் ஆழமாக யோசித்துப் பார்க்கிறேன்.+நன்றாக ஆராய்ந்து பார்க்கிறேன்.   யெகோவா எங்களை ஒரேயடியாக ஒதுக்கிவிடுவாரா?+ இனி கருணை காட்டவே மாட்டாரா?+   அவருடைய மாறாத அன்பு அடியோடு மறைந்துவிட்டதா? அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதை இனி எந்தத் தலைமுறையுமே பார்க்க முடியாதா?   கருணை காட்ட கடவுள் மறந்துவிட்டாரா?+அல்லது, கோபத்தில் இரக்கம் காட்டுவதை விட்டுவிட்டாரா? (சேலா) 10  “உன்னதமான கடவுள் எங்களுக்கு உதவி செய்வதை நிறுத்திவிட்டார், இதுதான் எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது”*+ என்று நான் புலம்பிக்கொண்டிருக்க வேண்டுமா? 11  “யா”* செய்த செயல்களை நினைத்துப் பார்ப்பேன்.பூர்வ காலத்தில் நீங்கள் செய்த அதிசயங்களை யோசித்துப் பார்ப்பேன். 12  கடவுளே, நீங்கள் செய்த காரியங்களையெல்லாம் தியானித்துப் பார்ப்பேன்.உங்களுடைய செயல்களைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்.+ 13  கடவுளே, உங்களுடைய வழிகள் பரிசுத்தமானவை. கடவுளே, உங்களைப் போன்ற மகத்தான கடவுள் யார்?+ 14  நீங்கள்தான் உண்மையான கடவுள், அற்புதமான காரியங்களைச் செய்கிறவர்.+ உங்கள் பலத்தை எல்லா மக்களுக்கும் காட்டியிருக்கிறீர்கள்.+ 15  உங்கள் ஜனங்களான யாக்கோபின் வம்சத்தாரையும் யோசேப்பின் வம்சத்தாரையும்,உங்களுடைய வல்லமையால் காப்பாற்றியிருக்கிறீர்கள்.+ (சேலா) 16  கடவுளே, தண்ணீர் உங்களைப் பார்த்தது.தண்ணீர் உங்களைப் பார்த்து உருண்டு புரண்டது.+ ஆழமான தண்ணீர் கொந்தளித்தது. 17  மேகங்கள் மழை பொழிந்தன. மேகமூட்டமான வானம் முழங்கியது.உங்களுடைய அம்புகள் அங்கும் இங்கும் பறந்தன.+ 18  உங்களுடைய இடிமுழக்கத்தின் சத்தம்,+ரதங்களுடைய சக்கரங்களின் சத்தத்தைப் போல இருந்தது.மின்னல்களின் வெளிச்சம் பூமியைப் பிரகாசிக்க வைத்தது.+பூமி அதிர்ந்து, குலுங்கியது.+ 19  நீங்கள் கடலுக்குள் உங்கள் பாதையைப் போட்டீர்கள்.+திரளான தண்ணீர் வழியாக நடந்து போனீர்கள்.ஆனால், உங்கள் காலடி தடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது. 20  மோசேயின் கையாலும் ஆரோனின் கையாலும்,+உங்களுடைய மக்களை மந்தைபோல் பத்திரமாக அழைத்து வந்தீர்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “என் நெஞ்சைத் துளைக்கிறது.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா