சங்கீதம் 56:1-13

இசைக் குழுவின் தலைவனுக்கு; “தூரத்தில் இருக்கிற அமைதிப் புறா” என்ற இசையில்; மிக்தாம்.* காத் நகரத்தில்+ பெலிஸ்தியர்கள் தாவீதைப் பிடித்த சமயத்தில் அவர் பாடிய பாடல். 56  கடவுளே, எனக்குக் கருணை காட்டுங்கள்; அற்ப மனுஷன் என்னைத் தாக்குகிறான். நாள் முழுவதும் எதிரிகள் என்னோடு சண்டை போடுகிறார்கள், என்னை அடக்கி ஒடுக்குகிறார்கள்.   நாள் முழுவதும் என் விரோதிகள் என்னைக் கடித்துக் குதறப் பார்க்கிறார்கள்.நிறைய பேர் ஆணவத்தோடு என்னை எதிர்த்துச் சண்டை போடுகிறார்கள்.   எனக்குப் பயமாக இருக்கும்போது+ உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்.+   கடவுளுடைய வார்த்தையை நான் புகழ்கிறேன்.கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன்; அதனால் பயப்பட மாட்டேன். அற்ப மனுஷனால் என்னை என்ன செய்ய முடியும்?+   எதிரிகள் நாளெல்லாம் எனக்குத் தொல்லை கொடுக்கிறார்கள்.எனக்குக் கெடுதல் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.+   என்னைத் தாக்குவதற்குப் பதுங்கியிருக்கிறார்கள்.நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் நோட்டமிடுகிறார்கள்.+என்னைத் தீர்த்துக்கட்டுவதற்குத் துடிக்கிறார்கள்.+   கடவுளே, அவர்கள் அக்கிரமம் செய்வதால் அவர்களை ஒதுக்கித்தள்ளுங்கள். கோபத்தில் அவர்களைத் தண்டியுங்கள்.+   என் அலைச்சல்களை நீங்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.+ என் கண்ணீர்த் துளிகளைத் தயவுசெய்து உங்களுடைய தோல் பையில் சேர்த்து வையுங்கள்.+ நீங்கள் அவற்றையெல்லாம் எண்ணி உங்களுடைய புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறீர்களே!+   உதவிக்காக நான் உங்களைக் கூப்பிடும் நாளில், என் எதிரிகள் பின்வாங்கி ஓடுவார்கள்.+ கடவுள் என் பக்கத்தில் இருக்கிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.+ 10  கடவுளுடைய வார்த்தையை நான் புகழ்கிறேன்.யெகோவாவின் வார்த்தையைப் புகழ்கிறேன். 11  கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன்; அதனால் பயப்பட மாட்டேன்.+ அற்ப மனுஷனால் என்னை என்ன செய்ய முடியும்?+ 12  கடவுளே, உங்களிடம் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுகிற கடமை எனக்கு இருக்கிறது.+நான் நிச்சயமாக உங்களுக்கு நன்றிப் பலிகளைச் செலுத்துவேன்.+ 13  ஏனென்றால், வாழ்வின் ஒளியிலே நான் உங்கள்முன் நடக்கும்படி,+நீங்கள் என்னைச் சாவிலிருந்து காப்பாற்றினீர்கள்.+என் கால்கள் தடுமாறாமல் பார்த்துக்கொண்டீர்கள்.+

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா