சங்கீதம் 25:1-22

தாவீதின் பாடல். א [ஆலெஃப்] 25  யெகோவாவே, நான் உங்களிடம் உதவிக்காகக் கெஞ்சுகிறேன். ב [பேத்]   என் கடவுளே, நான் உங்களையே நம்பியிருக்கிறேன்.+என்னை அவமானப்பட விட்டுவிடாதீர்கள்.+ என்னுடைய வேதனைகளைப் பார்த்து எதிரிகள் சந்தோஷப்படும்படி செய்துவிடாதீர்கள்.+ ג [கீமெல்]   உங்கள்மேல் நம்பிக்கையாக இருக்கிற யாருமே அவமானப்பட மாட்டார்கள்.+காரணம் இல்லாமல் துரோகம் செய்கிறவர்களுக்குத்தான் அவமானம் காத்திருக்கிறது.+ ד [டாலத்]   யெகோவாவே, உங்களுடைய பாதைகளை எனக்குக் காட்டுங்கள்.+உங்களுடைய வழிகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+ ה [ஹே]   உங்களுடைய சத்திய பாதையில் என்னை நடத்தி, எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+ஏனென்றால், என்னை மீட்கும் கடவுள் நீங்கள்தான். ו [வா] நாள் முழுவதும் உங்களைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ז [ஸாயின்]   யெகோவாவே, உங்களுடைய இரக்கத்தையும் மாறாத அன்பையும்+ நினைத்துப் பாருங்கள்.அவற்றை ஆரம்பக் காலத்திலிருந்தே நீங்கள் காட்டி வருகிறீர்களே.+ ח [ஹேத்]   நான் இளமையில் செய்த பாவங்களையும் குற்றங்களையும் நினைத்துப் பார்க்காதீர்கள். யெகோவாவே, நீங்கள் நல்ல மனம் உள்ளவராக இருப்பதால்,+உங்களுடைய மாறாத அன்பின்படியே என்னை நினைத்துப் பாருங்கள்.+ ט [டேத்]   யெகோவா நல்லவர், நேர்மையானவர்.+ அதனால்தான், பாவிகளுக்கு நல்ல வழியைக் கற்றுக்கொடுக்கிறார்.+ י [யோத்]   அவர் தாழ்மையானவர்களை* நேர்வழியில் நடத்துவார்.+தாழ்மையானவர்களுக்கு* தன்னுடைய பாதையைக் காட்டுவார்.+ כ [காஃப்] 10  யெகோவா தன் ஒப்பந்தத்துக்கும்+ நினைப்பூட்டுதல்களுக்கும்+ கீழ்ப்படிகிறவர்களிடம்எப்போதுமே மாறாத அன்பைக் காட்டி, உண்மையோடு நடந்துகொள்கிறார். ל [லாமெத்] 11  யெகோவாவே, நான் செய்த குற்றம் பெரிதாக இருந்தாலும்,உங்கள் பெயருக்காக+ என்னை மன்னித்துவிடுங்கள். מ [மேம்] 12  யெகோவாவுக்குப் பயப்படுகிறவன் யார்?+ அவன் தேர்ந்தெடுக்க வேண்டிய வழியைப் பற்றி அவர் அவனுக்குக் கற்றுக்கொடுப்பார்.+ נ [நூன்] 13  அவன் நன்மைகளை அனுபவிப்பான்.+அவனுடைய சந்ததிக்கு இந்தப் பூமி சொந்தமாகும்.+ ס [சாமெக்] 14  தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு யெகோவா நெருங்கிய நண்பராக இருக்கிறார்.+தன்னுடைய ஒப்பந்தத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.+ ע [ஆயின்] 15  என் கண்கள் எப்போதும் யெகோவாவையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றன.+அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார்.+ פ [பே] 16  உதவிக்கு யாரும் இல்லாமல் நான் தனியாகத் தவிக்கிறேன்.அதனால், உங்கள் முகத்தை என் பக்கமாகத் திருப்பி, எனக்குக் கருணை காட்டுங்கள். צ [சாதே] 17  என் இதயத்தின் வேதனைகள் பெருகிவிட்டன.+இந்தத் தவிப்பிலிருந்து என்னை விடுவியுங்கள். ר [ரேஷ்] 18  நான் படுகிற துன்பத்தையும் துயரத்தையும் பார்த்து,+என் பாவங்களையெல்லாம் மன்னித்துவிடுங்கள்.+ 19  எத்தனை பேர் என்னை எதிர்க்கிறார்கள் பாருங்கள்!எவ்வளவு மூர்க்கமாக என்னை வெறுக்கிறார்கள் பாருங்கள்! ש [ஷீன்] 20  என் உயிரைப் பாதுகாத்து, என்னைக் காப்பாற்றுங்கள்.+ என்னைத் தலைகுனிய விட்டுவிடாதீர்கள். ஏனென்றால், நான் உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன். ת [ட்டா] 21  என்னுடைய உத்தமமும் நேர்மையும் என்னைப் பாதுகாக்கட்டும்.+நான் உங்களையே எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.+ 22  கடவுளே, எல்லா வேதனைகளிலிருந்தும் இஸ்ரவேலைக் காப்பாற்றுங்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “சாந்தமானவர்களுக்கு.”
வே.வா., “சாந்தமானவர்களை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா