சங்கீதம் 24:1-10

தாவீதின் சங்கீதம். 24  பூமியும் அதிலிருக்கிற அனைத்தும் யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+நிலப்பரப்பும் அதில் குடியிருக்கிற எல்லாரும் அவருக்குத்தான் சொந்தம்.   ஏனென்றால், அவர்தான் கடல்களுக்கு மேலாகவும்,+ஆறுகளுக்கு மேலாகவும் அதை உறுதியாக நிலைநிறுத்தியிருக்கிறார்.   யெகோவாவின் மலைக்கு யார் ஏறிப்போக முடியும்?+அவருடைய பரிசுத்த இடத்தில் யார் நிற்க முடியும்?   கறைபடியாத கைகளோடும் சுத்தமான இதயத்தோடும் இருந்து,+என்மேல்* பொய் சத்தியம் செய்யாமலும்,போலியாக உறுதிமொழி எடுக்காமலும் இருக்கிறவன்தான்.+   அவனுக்கு யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.+அவனை மீட்கிற கடவுளிடமிருந்து+ நீதி கிடைக்கும்.*   கடவுளைத் தேடுகிற தலைமுறை இதுதான்.யாக்கோபின் கடவுளே, உங்களுடைய கருணையை* நாடுகிற தலைமுறை இதுதான். (சேலா)   கதவுகளே, உங்களை உயர்த்துங்கள்.+பழங்கால நுழைவாசல்களே, திறந்துகொள்ளுங்கள்.*மகிமையுள்ள ராஜா உள்ளே வரட்டும்!+   மகிமையுள்ள இந்த ராஜா யார்? அவர்தான் பலமும் வலிமையும் உள்ள யெகோவா.+அவர்தான் போர் செய்வதில் வல்லவரான யெகோவா.+   கதவுகளே, உங்களை உயர்த்துங்கள்.+பழங்கால நுழைவாசல்களே, திறந்துகொள்ளுங்கள்.மகிமையுள்ள ராஜா உள்ளே வரட்டும்! 10  மகிமையுள்ள இந்த ராஜா யார்? மகிமையுள்ள இந்த ராஜா, பரலோகப் படைகளின் யெகோவாதான்.+ (சேலா)

அடிக்குறிப்புகள்

வே.வா., “என்னுடைய உயிர்மேல்.”
வே.வா., “அவனுக்கு மீட்பு தருகிற கடவுள் அவனை நீதியுள்ளவனாகக் கருதுவார்.”
வே.வா., “உங்களுடைய முகத்தை; சன்னிதியை.”
வே.வா., “உயருங்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா