சங்கீதம் 23:1-6

தாவீதின் சங்கீதம். 23  யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்.+ எனக்கு ஒரு குறையும் வராது.+   பசுமையான புல்வெளிகளில் அவர் என்னைப் படுத்துக்கொள்ள வைக்கிறார்.நிறைய தண்ணீர் உள்ள இடங்களுக்குக் கொண்டுபோய் என்னை ஓய்வெடுக்க வைக்கிறார்.*+   எனக்குப் புத்துணர்ச்சி தருகிறார்.+ அவருடைய பெயருக்காக என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.+   பயங்கர இருட்டான பள்ளத்தாக்கிலே நான் நடந்தாலும்,+எந்த ஆபத்தையும் நினைத்துப் பயப்பட மாட்டேன்.+ஏனென்றால், நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள்.+உங்களுடைய கோலும் தடியும் எனக்கு நம்பிக்கை* தருகின்றன.   என் எதிரிகளுக்கு முன்னால் எனக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்கிறீர்கள்.+ எண்ணெய் பூசி என் தலையைக் குளிர வைக்கிறீர்கள்.*+என் கிண்ணம் நிரம்பி வழிகிறது.+   நிச்சயமாகவே, என் வாழ்நாளெல்லாம் நீங்கள் எனக்கு நன்மைகள் செய்து மாறாத அன்பைக் காட்டுவீர்கள்.*+நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் யெகோவாவின் வீட்டில் குடியிருப்பேன்.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “அமைதியான தண்ணீர்களிடம் என்னை வழிநடத்துகிறார்.”
வே.வா., “ஆறுதல்.”
வே.வா., “எண்ணெயால் என் தலைக்குப் புத்துணர்ச்சி தருகிறீர்கள்.”
வே.வா., “என் வாழ்நாளெல்லாம் நன்மையும் மாறாத அன்பும் என்னைப் பின்தொடரும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா