சங்கீதம் 123:1-4

நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். 123  பரலோக சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவரே,என் கண்கள் உங்களை ஏறெடுத்துப் பார்க்கின்றன.+   வேலைக்காரர்களின் கண்கள் எஜமானின் கையை எதிர்பார்ப்பது போல,வேலைக்காரியின் கண்கள் எஜமானியின் கையை எதிர்பார்ப்பது போல,யெகோவாவே, நீங்கள் கருணை காட்டும்வரை,+எங்களுடைய கண்கள் உங்களையே எதிர்பார்த்துக் காத்திருக்கும்.+   கருணை காட்டுங்கள், யெகோவாவே, எங்களுக்குக் கருணை காட்டுங்கள்.நாங்கள் உச்சக்கட்ட அவமரியாதைக்கு ஆளாகிவிட்டோம்.+   திமிர் பிடித்தவர்கள் செய்கிற கேலியும்,அகம்பாவம் பிடித்தவர்கள் காட்டுகிற அவமரியாதையும் உச்சக்கட்டத்துக்கே போய்விட்டன.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா