சங்கீதம் 122:1-9

நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். தாவீதின் பாடல். 122  “யெகோவாவின் ஆலயத்துக்குப் போகலாம், வாருங்கள்” என்று அவர்கள் கூப்பிட்டபோது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.+   எருசலேமே, உன் வாசல்கதவுகளுக்கு உள்ளேஇப்போது நாங்கள் நிற்கிறோம்.+   ஒன்றிணைக்கப்பட்ட ஒரு நகரமாகஎருசலேம் கட்டப்பட்டிருக்கிறது.+   இஸ்ரவேல் கோத்திரங்கள் அங்கே ஏறிப்போயிருக்கின்றன.“யா”வின்* மக்கள் அங்கே ஏறிப்போயிருக்கிறார்கள்.அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நினைப்பூட்டுதலின்படி,யெகோவாவின் பெயருக்கு நன்றி சொல்ல அங்கே போயிருக்கிறார்கள்.+   நீதி வழங்குவதற்காக அங்கே சிம்மாசனங்கள் போடப்பட்டன.+அவை தாவீதின் வம்சத்தாருடைய சிம்மாசனங்கள்.+   எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.+ நகரமே, உன்னை நேசிக்கிறவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.   உன் அரண்களுக்குள் எப்போதும் சமாதானம் இருக்கட்டும்.உன் கோட்டைகளுக்குள் எப்போதும் பாதுகாப்பு இருக்கட்டும்.   “உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் சொல்வேன். என் சகோதரர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் அப்படிச் சொல்வேன்.   நம் கடவுளாகிய யெகோவாவின் ஆலயம்+ உன் நடுவே இருப்பதால்,உனக்கு நல்லது நடக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்வேன்.

அடிக்குறிப்புகள்

“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா