சங்கீதம் 118:1-29
118 யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்.+அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
2 “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”
என்று இஸ்ரவேல் மக்கள் சொல்லட்டும்.
3 “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”
என்று ஆரோனின் வம்சத்தார் சொல்லட்டும்.
4 “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”
என்று யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் சொல்லட்டும்.
5 நான் வேதனையில் தவித்தபோது, “யா”வை* நோக்கிக் கூப்பிட்டேன்.“யா” என் குரலைக் கேட்டு, என்னைப் பாதுகாப்பான* இடத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்.+
6 யெகோவா என் பக்கத்தில் இருக்கிறார், நான் பயப்பட மாட்டேன்.+
மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?+
7 யெகோவா என் பக்கத்திலேயே எனக்குத் துணையாக இருக்கிறார்.*+என்னை வெறுக்கிறவர்களை நான் வெற்றிப் பெருமிதத்தோடு பார்ப்பேன்.+
8 மனிதர்களை நம்புவதைவிடயெகோவாவிடம் தஞ்சம் அடைவதே நல்லது.+
9 தலைவர்களை நம்புவதைவிடயெகோவாவிடம் தஞ்சம் அடைவதே நல்லது.+
10 எல்லா தேசத்து மக்களும் என்னைச் சுற்றிவளைத்தார்கள்.ஆனால், யெகோவாவின் பெயரால் அவர்களை விரட்டியடித்தேன்.+
11 அவர்கள் என்னைச் சுற்றிவளைத்தார்கள், தப்பிக்க முடியாதபடி சுற்றிவளைத்தார்கள்.ஆனால், யெகோவாவின் பெயரில்அவர்களை விரட்டியடித்தேன்.
12 தேனீக்கள்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.ஆனால், முட்செடியில் பற்றிய நெருப்புபோல் சட்டென்று அணைந்துபோனார்கள்.
யெகோவாவின் பெயரில்அவர்களை விரட்டியடித்தேன்.+
13 என்னை விழ வைப்பதற்காக பலமாய்த் தள்ளினார்கள்.*ஆனால், யெகோவா எனக்கு உதவி செய்தார்.
14 “யா”* என் அடைக்கலம், என் பலம்.அவர் என் மீட்பரானார்.+
15 சந்தோஷ சத்தமும் வெற்றி* முழக்கமும்நீதிமான்களின் கூடாரங்களில் கேட்கிறது.
யெகோவாவின் வலது கை அவருடைய வல்லமையை வெளிக்காட்டுகிறது.+
16 யெகோவாவின் வலது கை உயர்ந்தோங்கியிருக்கிறது.யெகோவாவின் வலது கை அவருடைய வல்லமையை வெளிக்காட்டுகிறது.+
17 நான் சாக மாட்டேன்.“யா”வின்* செயல்களை அறிவிப்பதற்காக வாழ்வேன்.+
18 “யா”* என்னைக் கடுமையாகக் கண்டித்தார்.+ஆனால், நான் சாகும்படி அவர் விடவில்லை.+
19 நீதியின் கதவுகளை எனக்குத் திறந்துவிடுங்கள்,+நான் உள்ளே போய், “யா”வை* புகழ்வேன்.
20 இது யெகோவாவின் கதவு.
நீதிமான்கள் அதன் வழியாகப் போவார்கள்.+
21 கடவுளே, நீங்கள் எனக்குப் பதில் தந்து, என் மீட்பராக இருந்தீர்கள்.அதனால், நான் உங்களைப் புகழ்வேன்.+
22 கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லேமூலைக்குத் தலைக்கல்லாக ஆனது.+
23 இது யெகோவாவின் செயல்.+இது நம்முடைய கண்களுக்கு அருமையாக இருக்கிறது.+
24 இது யெகோவா வர வைத்திருக்கும் நாள்.இந்த நாளில் நாம் சந்தோஷத்தில் பூரித்துப்போவோம்.
25 யெகோவாவே, தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள், உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறோம்.
யெகோவாவே, தயவுசெய்து எங்களுக்கு வெற்றி கொடுங்கள்!
26 யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.+நாங்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்து உங்கள் எல்லாரையும் ஆசீர்வதிக்கிறோம்.
27 யெகோவாதான் கடவுள்.அவர் நமக்கு வெளிச்சம் தருகிறார்.+கையில் கிளைகளைப் பிடித்துக்கொண்டு பண்டிகை ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள்.+
பலிபீடத்தின் கொம்புகள்வரை+ போங்கள்.
28 என் கடவுளே, நான் உங்களை மெச்சிப் பேசுவேன்.நீங்கள்தான் என் கடவுள், நான் உங்களைப் புகழ்வேன்.+
29 யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்,+ அவர் நல்லவர்.அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.+
அடிக்குறிப்புகள்
^ “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
^ வே.வா., “விசாலமான.”
^ அல்லது, “எனக்கு உதவி செய்கிறவர்களோடு இருக்கிறார்.”
^ அல்லது, “தள்ளினீர்கள்.”
^ “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
^ வே.வா., “மீட்பின்.”
^ “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
^ “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
^ “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.

