ஓசியா 8:1-14

8  “ஊதுகொம்பை ஊதுங்கள்!+ ஒருவன் கழுகைப் போல யெகோவாவின் ஜனங்களுக்கு* எதிராக வருகிறான்.+அவர்கள் என்னுடைய ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள்,+ என்னுடைய சட்டத்தை அவமதித்துவிட்டார்கள்.+   ‘எங்கள் கடவுளே, இஸ்ரவேலர்களாகிய எங்களுக்கு உங்களைத் தெரியும்’ என்று சத்தமாகச் சொல்கிறார்கள்.+   இஸ்ரவேலர்கள் நல்லதை ஒதுக்கிவிட்டார்கள்.+ எதிரி அவர்களைத் துரத்தட்டும்.   அவர்களே ராஜாக்களைத் தேர்ந்தெடுத்தார்கள், என்னிடம் சம்மதம் கேட்கவில்லை. அவர்களே அதிபதிகளை நியமித்தார்கள், என்னிடம் அனுமதி வாங்கவில்லை. வெள்ளியாலும் தங்கத்தாலும் சிலைகளைச் செய்தார்கள்.+தங்களுக்கே அழிவைத் தேடிக்கொண்டார்கள்.+   சமாரியாவே, உன் கன்றுக்குட்டி சிலையை ஒதுக்கித்தள்ளினேன்.+ உன்மேல் எனக்குக் கோபம் பற்றிக்கொண்டு வருகிறது.+ எவ்வளவு காலத்துக்குத்தான் திருந்தாமல் இருப்பாய்?   அது இஸ்ரவேலில் தோன்றியது. கைத்தொழிலாளி அதைச் செய்தான், அது கடவுள் கிடையாது.சமாரியாவின் கன்றுக்குட்டி சிலை சுக்குநூறாக்கப்படும்.   அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்,புயல்காற்றை அறுவடை செய்வார்கள்.+ பயிர்களில் தானியம் இல்லை.+தானியம் இருந்தாலும் மாவு கிடைப்பதில்லை. மாவு கிடைத்தாலும் முன்பின் தெரியாதவர்கள் பிடுங்கிக்கொள்வார்கள்.+   இஸ்ரவேலர்கள் வீழ்த்தப்படுவார்கள்.+ வேண்டாத பாத்திரத்தைப் போல மற்ற தேசத்தாரின் நடுவில் கிடப்பார்கள்.+   தன் இஷ்டத்துக்குச் சுற்றித் திரியும் காட்டுக் கழுதையைப் போல அவர்கள் அசீரியாவிடம் போனார்கள்.+ எப்பிராயீம் விபச்சாரிகளுக்குக் கூலி கொடுத்தான்.+ 10  அவர்களை மற்ற தேசங்களிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தான்.ஆனால், நான் அவர்களைச் சுற்றிவளைப்பேன்.ராஜாவும் அதிகாரிகளும் சுமத்துகிற சுமை தாங்காமல் அவர்கள் கஷ்டப்படுவார்கள்.+ 11  எப்பிராயீம் பாவம் செய்வதற்காகவே நிறைய பலிபீடங்களைக் கட்டினான்.+ அவைதான் அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின.+ 12  நான் அவனுக்காக நிறைய சட்டங்களை* எழுதினேன்.அவற்றை அவன் மதிக்கவே இல்லை.+ 13  அவர்கள் எனக்குப் பலிகளைக் கொடுக்கிறார்கள்; அவற்றின் இறைச்சியைச் சாப்பிடுகிறார்கள்.யெகோவாவாகிய எனக்கு அந்தப் பலிகளில் கொஞ்சமும் பிரியம் இல்லை.+ அவர்களுடைய குற்றத்தை நான் கண்டும்காணாமல் விடமாட்டேன். அவர்களுடைய பாவங்களுக்காகத் தண்டனை கொடுப்பேன்.+ அவர்கள் எகிப்துக்குத் திரும்பினார்கள்.*+ 14  இஸ்ரவேல் தன்னைப் படைத்தவரை மறந்து,+ கோயில்களைக் கட்டினான்.+யூதா, மதில் சூழ்ந்த பல நகரங்களைக் கட்டினான்.+ அந்த நகரங்களுக்குள் நான் நெருப்பை அனுப்புவேன்.அது எல்லா கோட்டைகளையும் பொசுக்கிவிடும்.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆலயத்துக்கு.”
வே.வா., “அறிவுரைகளை.”
அல்லது, “திரும்பிப் போவார்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா