ஓசியா 3:1-5

3  பின்பு யெகோவா என்னிடம், “இஸ்ரவேல் ஜனங்கள் மற்ற தெய்வங்களை வணங்கி,+ உலர்ந்த திராட்சை அடைகளை* விரும்புகிறார்கள். ஆனாலும், யெகோவாவாகிய நான் அவர்கள்மேல் அன்பு காட்டுகிறேன்.+ அதைப் போல நீயும், உனக்குத் துரோகம் செய்து இன்னொருவனின் ஆசைநாயகியாக மாறிவிட்ட பெண்ணை மறுபடியும் கூட்டிக்கொண்டு வந்து அவளிடம் அன்பு காட்டு”+ என்றார்.  அதனால், நான் 15 வெள்ளிக் காசுகளையும் ஒன்றரை ஹோமர் அளவு* பார்லியையும் விலையாகக் கொடுத்து அவளைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.  பின்பு அவளிடம், “நீ பல நாட்களுக்கு எனக்குச் சொந்தமானவளாக இருப்பாய். நீ விபச்சாரம் செய்யக் கூடாது, வேறு யாரோடும் உறவுகொள்ளக் கூடாது. நானும் உன்னோடு உறவுகொள்ள மாட்டேன்” என்று சொன்னேன்.  ஏனென்றால், இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் வெகு காலத்துக்கு ராஜாவோ தலைவரோ இருக்க மாட்டார்;+ பலியோ, பூஜைத் தூணோ, ஏபோத்தோ,+ குலதெய்வச் சிலைகளோ+ இருக்காது.  அதன்பின் அவர்கள் திரும்பி வந்து, தங்கள் கடவுளான யெகோவாவையும் தங்கள் ராஜாவான தாவீதையும் தேடுவார்கள்.+ கடைசி நாட்களில் அவர்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தை* பெற அவரிடம் நடுக்கத்துடன் வருவார்கள்.+

அடிக்குறிப்புகள்

இவை பொய் வணக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்ட அடைகள்.
ஒரு ஹோமர் என்பது 220 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “யெகோவா தரும் நன்மைகளை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா